வியாழன், 22 நவம்பர், 2012

காதல் நாடகம்

                                            காதல் நாடகம் 

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே ,
கொள்ளும் இன்பமே, சொர்க்க வாழ்வினிலே !,

எல்லை மீறும் அன்பே, செல்வம் ஆகுமே ,
இளமை நேசமே, மண் மேல் சுகமே !

சிந்தும்  செந்தேனும் , சொல்லில் ஊறுமே,
தென்றல் வீசியே,  நன்றியும் கூறுமே!

காலம்  எனும் பந்தலில், அன்புக்கைகள் ஒன்று சேருமே 
மகிழ்ச்சி  வெள்ளத்தில்,   இரு உள்ளங்கள் துள்ளுமே!


ரா.பார்த்தசாரதி

புதன், 21 நவம்பர், 2012

unmaiyum, perunmiyum

உண்மையும், பேருன்மியும்

எம்மொழியே செம்மொழி

                                                  எம்மொழியே  செம்மொழி

இனிய  தமிழ் மொழியே   நமக்கு அமுதம்,
நமக்கு இன்பம் தந்தாலே நல்லமுதம் !
எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி
அருளாளர்களும், ஆழ்வார்களும், வளர்த்த மொழி !

தமிழுக்கும் அமுதென்றுபேர், என்பார்  பாரதிதாசன்,
தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தோள் என்பார்,
தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்,
தமிழையும், தாயையும் புகழாமல்   இருப்பவருண்டோ தரணியிலே !

செந்தமிழ் நாடெனும்  போதிலே  இன்பத்
தேன்வந்து  பாயுது  காதினிலே என்றார், பாரதியார்,
செம்மொழி மாநாடு நடந்ததும்  கோவையிலே,
தமிழர்கள்   கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே !

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் !
தமிழ் படித்தவர்களுக்கே தமிழ் நாட்டில் வேலை,
தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
எம் தமிழ்மொழியும், பெருமைவுறுமே பாரினிலே !

தமிழ் பரவும் வகை செய்திடுவோமே !
கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே !
எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

தமிழ், தமிழென  முரசு கொட்டவேண்டாம் !
ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம் !
தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு !
பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

 எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே !
இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே !
வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு !
அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்கு தனிச்சிறப்புண்டு !

ஆங்கிலப் பெயர் பலகையினை தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே  ஒரு சிறப்பன்றோ !
தனியார்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
அறிவியலிலும்,உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்
                                                                                                                                 வேண்டுமே!

எம்மொழி, செம்மொழி  எனச்  சொன்னால் போதாது!
ஏற்றமிகு  மாற்றங்கள்  செய்திடல் வேண்டும் !
மாற்றங்கள் செய்ய பள்ளியும்,கல்லூரியும் ஒருமைபடவேண்டுமே !
பாமரனும் படித்து  உவகை  கொள்ளவேண்டுமே !

இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிலவவேண்டும் !
எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும் !
தலைமுறைகள் பல கழிந்து குறைகளைய வேண்டும்.!
எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர் !   வாரீர் !

ரா,பார்த்தசாரதி





செவ்வாய், 20 நவம்பர், 2012

நரசிம்ம ப்ரபத்தி

                                                              நரசிம்ம  ப்ரபத்தி 

மாதா  நரசிம்ம:  பிதா நரசிம்ம:
ப்ரதா  நரசிம்ம: சகா நரசிம்ம:
வித்யா நரசிம்ம: த்ரவினம் நரசிம்ம:
ஸ்வாமி நரசிம்ம: சகலம் நரசிம்ம:
இதோ  நரசிம்ம: பரதோ நரசிம்ம:
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ம:
நரசிம்ம தேவாத், பரோ நகஸ்ஸித்:
தஸ்மான்  நரசிம்ம: சரணம் ப்ரபத்யே !  

manithanum erumbum

மனிதனும் !  எறும்பும்!

சுறுசுறுப்பும்,
கடின உழைப்பும் ,
சேமிப்பும் .

யார் கற்றுக்கொடுத்தர்கள் ?
அந்த ஐயிந்தறிவு  எறும்பிற்கு ?

மனிதனே!

சுறுசுறுப்பாய்  இரு !
கடினமாய்  உழைத்துடு !
சேமித்துடு !

எதையும்  ஐயிந்தறிவு எறும்பிடம்தான்  கற்றுகொள்ளவேண்டுமா ?

ரா. பார்த்தசாரதி 

ஞாயிறு, 18 நவம்பர், 2012

veda vakku

                                                     வேத வாக்கு

1,     பல புண்ணிய தலங்களையும்  பல நாடுகளையும் சுற்றிவருதல்,
2.     ஏழை, எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும்  உதவுதல்
3.    ஏழைகளுக்கு    கல்வி  அளித்தல்.
4.    பெண்களுக்கு  மாங்கல்யம், தானமளிதல்
5.    வாயில்லாத  ஜீவன்களை பராமரித்தல்
6.    பொன், பொருள்களை  தானமாக  அளித்தல் 
7.   ஆலய பணிகளுக்கு உதவி அளித்தல்   
8.   கூட்டுப் பிராத்தனைகளில் கலந்து கொள்ளுதல்
9.   முதியவர்களுக்கும்  ஆதரவுவற்ற    குழந்தைகளுக்கும்  உதவிசெய்தல்
10. அனுதினம்  கடவுளை  துதித்தல்

மேற்குரிய நற்செய்கையால்  உண்டாகும் புண்ணியங்கள்  யாவும்
உன்  தாய்,  தந்தை இருவரையும்   ஒரு முறை பக்தியுடன்
 வணங்கினாலே  உங்களுக்கு கிடைத்து விடும்  என்பது வேதவாக்கு

                                                                                        ரா . பார்த்தசாரதி