திருமணம் என்றால்
திருமாங்கலியத்தில் 9 (ஒன்பது ) இழைகளின் தத்துவம்
1. உள்ளத்தை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் 2. மேன்மை 3. ஆற்றல்
4. தூய்மை 5. தெய்வீக குணம் 6. உத்தமமான குணம்
7.விவேகம் 8. தன்னடக்கம் 9. தொண்டு.
============================== ============================== ======
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.
முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த
வீட்டிற்கு.
வீட்டிற்கு.
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது
புகுந்த வீட்டிற்கு.
புகுந்த வீட்டிற்கு.
மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்
============================== ============================== =====
==============================
தாலி : தாலியே பெண்டிற்கு வேலி .
தாயாகி தாலாட்டு பாட கணவன் தரும் பரிசு .
கூரை புடவை/ மாங்கல்ய தாரணப் புடவை
மணமகள், திருமகளாய் விளங்குவதற்கும், கற்பையும்
குலத்தை காக்கவும் புடவை உடுத்தப்படுகிறது
தோடு: எதையும் காதோடு போட்டுக்கொள், வெளியே சொல்லாதே.
மூக்குத்தி : வாசனையும், சமையல் அறியும் உத்தியும்,
முன்யோசனையுடன், எதையும் செய்வாயாக என்பதை
உணர்த்துகிறது .
வளையல் : கணவன் உன்னை வளைய,வளைய வரவேண்டும்
என்பதற்காக.
ஒட்டியாணம்: கணவன் மனைவி இருயிர் ஓர் உயிராய் இருபதற்காக
அணிவிக்கப்படுகிறது .
மோதிரம்: எதிலும் உன் கைத்திறன் காட்டுவதற்காக
அணிவிக்கப்படுகிறது
மெட்டி : திருமணம் ஆனவள் என்பதையும், தீய சக்திகள்
அவளை நெருங்காமல் இருக்க, அணிவிக்கபடுகிறது
------------------------------
சப்தபதி - ஏழு அடிகள் பெண்ணுடன் நடப்பது
"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர
வேண்டும்"
வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டியவை
* நல்லுறவு அனுசரித்தல், பரிபூரண அன்பு,
ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுதல் ,
* உயர்வு தாழ்வு இல்லாத நட்பு
* சின்ன தவறுகள் மறந்து கருணையுடன் நடத்தல்.
* தேவைப்படும்போது பாராட்டுதல்.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக