ஸ்ரீகாந்தனின் உரை நடைக் கவிதைகள்
மயக்கமா ! கலக்கமா !
மயக்கமா, கலக்கமா, மனதினிலே குழப்பமா ,
வாழ்கையிலே நடுக்கமா, துக்கமா, தெளியுமா மனசு
கொண்டு வந்தது என்ன, கொண்டு போகபோவது என்ன .
அமைதியாகுமா மனசு, இருபத்தோ சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம் உணர்ந்தாலே மாறுமா வாழ்க்கை
பலனை எதிர்ப்பார்காமலே கடமையைச் செய்தாலே,
அமிர்தமாகும்மா வாழ்க்கை எதிலும் அளவோடு இருந்தாலே,
இவை அனைத்தும் வாழ்க்கையில் செயல்பட்டாலே,
மயக்கமில்லை, கலக்கமில்லை , குழப்பமில்லை, நடுக்கமில்லை !
================================================================
கடவுள் எங்கே ?
பசுவின் உடலெங்கும் பால் இருக்கிறது
அதன் காதை பிடித்துத் திருகினாலும்
அதன் வாலை முறுக்கினாலும் பாலை பெற முடியமா !
அதற்குரிய காம்பிலிருந்து தான் கறக்க முடியும் !
அதுபோலே, கடவுள் எங்கும்,
அவரைக் காண, உணர,
சரியான நேரமும், இடமும் தேவை அன்றோ !
அதுவே பிராத்தனைக் கூடம்
===================================================================
அன்புக்கு அடிப்பணி அம்மணி ,
ஆசைக்கு போடு மூடுபனி
இளமையிற் கல்வி தேவை கண்மணி
ஈட்டியதை காத்திடு பொன்மணி ,
உலகம் உன்கையில் அன்புமணி
ஊக்கத்தோடு செயல்படு அங்கையற்கண்ணி
எளிமையாய் இருந்திடு தினம் நீ.
ஏறுநடை போடு கலைமணி
ஐந்தில் வளைந்திடு சின்னமணி
ஒதுக்காதே உணவில் பொன்னாங்கண்ணி
ஓடாய் போய்விடும் திருமேனி
================================================================
ஞாயிறு அன்று மாப்பிளை ஊர்வலம்
திங்கள் அன்று திருமணக்கோலம்
செவ்வாய் அன்று திருவிழாக்கோலம்
புதனன்று தீப்பொறிக் கோலம்
வியாழன் அன்று மரண ஓலம்
வெள்ளியன் று சவ ஊர்வலம்
சனியன்று விதவைக் கோலம்.
இதுதானா காலத்தின் கோலம்
====================================================================
நண்பர்கள் பலவிதம், நல்ல நண்பன் அமைவது அற்புதம்,
நண்பரின் இலக்கணம் பலவிதம், நன்கு உரைப்பேன் இவ்விடம்
மேடுபள்ளங்கள் பலவிதம்,சமவெளியாக இருப்பது தனியிடம்
குற்றம் குறைகள் பலவிதம், குணத்தை போற்றுவது உயர்குணம்
உடலாய் பழகுபவர்கள் பலவிதம்,உயிரை கொடுப்பது உயர்விடம்
சோதனைக்கற்கள் பலவிதம், சாதனை கற்களாக மாற்றுவது சரித்திரம்
உயிரைக் கொடுப்பது பலவிதம், எனக்கு அவர்களால் பெருமிதம் .
====================================================================
தன்னடக்கம் பகைவனையும் நண்பன்னாக்குமே,
தற்பெருமை நண்பனையும் பகைவனாக்குமே ,
மனமே அலைபோல் ஊஞ்சல் ஆடும் மனமே,
மனநிம்மதியே எங்கு தேடுகின்றாய் தினமே ,
மனம் சரியாய் இருந்தால் சொர்க்கம் தேடி வருமே
நாவடக்கம் உன்னை மனிதாக்குமே
தன்னடக்கம் உன்னை தெய்வமாக்குமே
ராம நாமமே என்றும் திவ்விய நாமமே
அனுதினம் சொல்லிவந்தால் சொர்க்கலோகமே !
======================================================================
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆசையில் அழியும் பொய் உடலடா
ஆற அமர சிந்தித்து பாரடா
ஆண்டவனை நீ தினமும் துதிபாடடா
ஆனந்த மயமாகும் உன் வாழ்க்கையடா!
========================================================================
பருவ பெண்ணே
தேவையா உடையில் கிளர்ச்சி
கிள்ளிவிடாதே காளைகளின் காம உணர்ச்சி
தவறவிடாதே கல்வியில் முழுமுயற்சி
மறந்து விடாதே பெண்கல்வி நாட்டின் வளர்ச்சி.!
===================================================================
கடைசி ஆசை
நானோ ஆயுள் கைதி
நாளை காலை முடியப்போகுது
நான் பார்க்கவேண்டும் என் திருமதி
நான் அடைவேன் மனநிம்மதி
=================================================================
குழந்தையாய் வந்தவனே
குருவாயூரில் அமர்ந்தவனே
குறையெல்லாம் தீர்பவனே
குல தெய்வமாய் திகழும் குருவாயூர் அய்யனே !
====================================================================
எங்கோ ஒரு உயிர் பிறக்குது
எங்கோ ஒரு உயிர் பிரியுது
என்னை பெற்றதோ ஸ்ரீரங்கத்தில் இருக்குது
என்னால் பெற்றதோ ஸ்ரீநகரில் இருக்குது
என் வாழ்க்கையோ வானில் பறக்குது
========================================================================
எது நிலையானது ! எது நிலையற்றது !
அழகும் பொன் நகையும் நிலையற்றது
அன்பும், புன்னகையும் நிலையானது
செல்வம் என்றும் உலகில் நிலையற்றது
கல்வி ஒன்றே உலகில் நிலையானது
இன்ப துன்பங்கள் என்றும் நிலையற்றது
விதி என்பதே என்றும் நிலையானது
=====================================================================
ஜாதிகள் இல்லையடிப் பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா ,
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜான் வயிற்றுக்கு உணவு இல்லையினில்
ஜாதிகள் பறக்கும்மடி பாப்பா
ஜான்சன் ஹோஸ்பிடல் ஜானுக்கு தேவை O+ve இரத்த மடிபாப்பா
ஜஹாங்கிர் இரத்தம் தானே சேர்ந்ததடி பாப்பா
ஆமாம், ஜாதிகள் ஆண்டவன் படைப்பில் இல்லையடிப் பாப்பா !
================================================================
1

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக