வியாழன், 11 பிப்ரவரி, 2016

என் கண்ணில் நீ இருப்பாய்

                                              என் கண்ணில்  நீ இருப்பாய்  

  சரவணன் வீட்டின் உள்ளே நுழைந்ததும், சரண்யா நாள என் மேனேஜர்
  வீட்டில் அவர் மகன் பிறந்தநாள் விழா அதற்கு இருவரையும்  வரசொல்லி
  இருக்கிறார்.உடனே சரண்யா, ஏங்க இன்று ஞாயிறுக்கிழமை, வீட்டில்
  நிறைய வேலை இருக்கு.  என் தங்கையும் இன்னிக்கு வரேன் என்று
  சொல்லி   இருக்கா . நீங்க வேண்டும்மானால் போங்க.

   இருவருக்கும்  திருமணம் நடந்து  ஆறு வருடங்கள் கழிந்தாலும்
   அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.  எந்த வீட்டிற்கு சென்றாலும்
   அங்கே   குழந்தையைப்   பத்தியே பேச ஆரம்பித்தது அவளுக்கு
    சங்கடமாகவே இருந்தது. அதற்காகவே எல்லா விழாக்களையும் தவிர்த்து
   வந்தாள்.  சரவணன்  தன்னிடம் வந்து தங்கும்படி அவன் பெற்றோர்களை
    வா என்று அழைத்தாலும், மருமகள் குணம் அறிந்து ஏதோ காரணம் கூறி
    தவிர்த்தார்கள்.  

    சரண்யா ரொம்ப பிடிவாதம், யாரையும் அண்ட விடமாட் டா ள். மாமியாரும்,
    மாமனாரும் புகை படத்தில்தான் இருக்கவேண்டும். பக்கத்தில் இருக்கக்
    கூடாது.   கல்யாணத்தின் போது மாமியாரை பார்த்தது.  அதன்பின் ஒரு
    தடவை கூட  அவர்களை தன் வீட்டிற்கு அழைத்ததில்லை.  

    யாரையும் சொல்லி குற்றம்மில்லை.  அவள் வளர்ந்த சுழ்நிலை. .அம்மா
    இல்லாமல், அப்பா அவளை ஹாஸ்டலில் படிக்க வைத்து, சரணுக்கும்,
    சரண்யாவுக்கும் ஒரே கல்லூரியில் படித்ததால் காதல் ஏற்பட்டு, அது
    திருமணத்தில் முடிந்தது.  சரவணின் பெற்றோர்  கணேசனும், நீலாவும்
    அவன் இஷ்டப்படி நடத்தி  வைத்தனர் .

    சரவணனுக்கு அம்மா அப்பாவை  பக்கத்தில் வைத்து காப்பாற்ற வேண்டும்,
  .  ஏன் என்றால் அவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்து தன்னை ஆளாக்கியப்
    பெருமை அவர்களைத்தான் சேரும். அவர்கள் நினைவாக ஒரு போட்டோ
    கூட வைத்து கொள்ளவில்லை.திருமண ஆல்பத்தில்  இரண்டு அல்லது
    மூன்று  இடங்களில் இருந்தாலும், திருமண ஆல்பத்தை தொலைத்ததால்
    அப்பா, அம்மா புகைப்படம்  ஒன்றுகூட அவனிடம் இல்லை. ஆனால், மாதா
   மாதம் பணம் அனுப்ப தவறமாட்டான்.

      ஒரு நாள் சரவணனுக்கு அதிர்ச்சி செய்தி வந்தது. அவன் பெற்றோர் தீர்த்த
      யாத்திரை செல்லும் போது, விபத்தில் இருவரும்இறந்தார்கள்.  அலறி
      அடித்துக் கொண்டு ஊருக்கு சென்றான். ஏதோ அக்கம் பக்கத்தில் செய்த
      உதவியால் எல்லா காரியங்களையும முடித்தான். சரண்யாவும் இதற்கு
      ஒத்துழைத்தாள்.

       அப்பா அம்மாவை பற்றி உறவினர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
       அவர்களை பற்றி பெருமையுடன் கூறினார்கள். இந்த மாதிரி தாய், தகப்பன்
       யாருக்கும் கிடைக்க மாட்டாங்க  என்று சரவணனிடம் கூறினார்கள்.
       சரண்யாவும், இவ்வளவு நல்லவர்களை, நாம் கைவிட்டோமே என்று
       சற்றே கலங்கினாள்.

       சரவணனின் மாமா, டேய் சரவணா இங்கே வாயேன்.  உங்க அப்பாவும்,
       அம்மாவும் தங்கள் கண்களை தானம் கொடுத்து விட்டார்கள்.   உங்க அப்பா
       உனக்கு இந்த வீ ட்டை உன் பெயரில் எழுதிவிட்டார் . நானும் இதற்கு
       சாட்சி கைஎழுத்து போட்டு இருக்கேன். என் பேரனுக்ககாவது  இந்த
       வீ ட்டை வித்து நன்றாக படிக்க வைக்கச்  சொல்லு.  இதுதான் உங்க அப்பா
       கடைசி ஆசை.

       சரவணன் அதிர்ச்சி அடைத்தாலும் , அவன் மனம் நினைத்தது, மனித
       வாழ்கையில் பணம் எட்டிபார்க்கும், பாசம் பக்கத்தில் உட்காரது என்ற
       மொழி அவனுக்கு மட்டும் பொருந்தும். இறக்கும் போது கூட தான்
       பக்கத்தில் இல்லையே என்று மிகவும் வருந்தினான்.

       பதினைந்து நாள் காரியங்களை சரிவர முடித்து இருவரும் ஊருக்கு
       கிளம்பினார்கள்.   சரவணன் வேலைக்கு ஏதோ ஒரு சஞ்சலத்துடன்
        சென்று வந்தான்.  அன்று மாலை அவன் பொது மேலாளர் ( ஜி.எம் )
        அவனை கூப்பிடு என்ன சரவணன், ஒரு மாதிரியாக இருக்கே.  எனி
        ப்ராப்ளம் ? ஏன் என்றால் அவரும் அவன் ஊரை சேர்ந்தவர். சரவணன்
        நடந்ததை விவரித்தான்.

        சரி, சரவணா நீயும், உன் மனைவியும் என்காத்தில் என் தந்தையின்
       பிறந்தநாள்.  நாங்க தெரிந்தவர்களை மட்டும் கூப்பிடுகிறோம்.
       என் தந்தையும், தாயும், இந்த வயதிலும், ஊரில் ஓர்  முதியோர்
       இல்லத்தை நடத்தியும்,சில ஏழைப்  பெண்களுக்கும், அவங்க
        மகன்களுக்கு  கல்வி, மேற்படிப்புக்கும் உதவுகிறார்கள்..இந்த
        மாதிரி தர்ம சிந்தனை அவர்களுக்கு இருப்பதல்தான் நான் என்
        வாழ்க்கையில்  முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.அவசியமா
        வந்து எங்க அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் பெற வருகின்றாயா.
        பிறகு உன் வாழ்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்  என்றார்.

        இப்போதெல்லாம் சரவணன் என்ன சொன்னாலும்,சரண்யா
        மறுப்பதில்லை. ரொம்ப மாறிவிட்டாள்.  சரண்யா எங்க ஜி. எம் வீட்டில்
        அவருடைய தந்தைக்கு பிறந்த நாள்.  வயசானவர்கள்,. அவர்களை
        நமஸ்காரம் பண்ணினால் நல்லது என்றான். சரண்யாவும் மறுப்பு  எதுவும்
        சொல்லாமள் கிளம்பினால். அவர் வீட்டிற்கு குறித்த நேரத்தில் இருவரும்
        சென்று விட்டனர்.              

        அவர் தந்தையும் தாயாரும் கருப்பு கண்ணாடி அணிந்திருந் தனர்.
        சரவணன் கேட்டான்  என்ன இந்த ராத்திரியில் அப்பா,அம்மாவிற்கு
        கருப்பு கண்ணாடியா.  இதனை கேட்ட ஜி.எம்மின் தந்தை சரவணிடம்,
        என்னக்கும் என் மனைவிக்கும் கண்   பார்வை போய்டுத்து.  கடவுள் மாதிரி
        ஒரு தம்பதியினரின் கண்களை எடுத்து எங்களுக்கு வைத்து விட்டார்கள்.
        அந்த தம்பதியர்களை  நாங்கள்,  எங்கள் தெய்வமாய் வணங்குகிறோம்
         என்றார். மேலும்  நாங்க செய்றது  எல்லாம் அவா செய்ததற்கு  ஈடாகாது.

         அதன்பின்,  அவர்கள் கேக் வெட்டும் போது  எல்லோரும் மகிழ்ச்சி
         அடைந்தார்கள் . கேக் எடுத்தவர் , கேக்கிற்கு முன் உள்ள ஒரு படத்திற்கு
         காண்பித்து பிறகு தன் மனைவி வாயில் போட்டார்.  சரவணன் கிட்ட  
         வாப்பா. நீ நம்ப ஊர் பையன். அவனும் அவர் பக்கத்தில் நின்றான். பின்
         அவர் காட்டிய தெய்வம் வேறு யாரும்மில்லை !  அவன்   தாய்,
         தந்தையரின் படம்.. உடனே அவர்கள்  காலில் விழ்ந்து நமஸ்காரம்
         செய்தான் .
     
         அந்த பெரியவரிடம் எனக்கு இந்த புகைப்படகாப்பி  தர முடியுமா?  என்று
          கெஞ்சினான் ஜி.எம்மும்  ஒரு காப்பி எடுத்து கொடுத்தார்.  என் தாய்
          தந்தை ஆசிர்வாதம் கிடைத்து  விட்டது.    நான்தான் உங்களுக்கு நன்றி
          சொல்ல வேண்டும்
.
          விருந்தை முடித்து, கோடி ரூபாய் கிடைத்தாற் போல்சரவணன் 
          போட்டோவுடன் கிளம்பினான். தன் பெற்றோரின் பார்வையே 
          அவர்களுக்கு ஆசிர்வாதம் கிடைத்ததாகவே இருவரும் எண்ணி
          மகிழ்ச்சி அடைதார்கள் . 

          சரவணனும் அவனுடைய ஜி.எம்மின்  தந்தை நடத்தி வரும்  
          முதியோர் இல்லத்தின் முகவரிக்கு மாதா  மாதம்  பணம் அனுப்பத் 
          தவறுவதில்லை .




               ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக