முதுமையும், முதியோர் தினமும்
முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே அடையும் தளர்ச்சி
துணை தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும் கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !
அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு இல்லை
பெற்றதும் உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக உதவும் நிலைமை இங்கே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே !
அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத முதியோரின் எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும் இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால் காமம் இங்கில்லை !
முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின் நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை மாற்றாதோ இளமையின் எண்ணங்கள் !
வாழைக்கன்றும். நெல்நாற்றும் பிரிந்தால்தான் வளரும்
இளமையில் சேர்ந்தும், பருவத்தில் பிரிந்து வாழும் மனித இனம்,
தன் மகனை சான்றோன் என பிறர் சொல்லும் பெருமை தந்தைக்கே
பிரிவு உண்டானாலும், நன்றாக இருக்கட்டும் என நினைக்கும் பெற்றோரே !
தனிமை பட்டாலும், என்றாவது கூடுவோம் ஏங்கும் நினைப்பே ,
பந்த பாசத்திற்கு கட்டுப்பட்டு உயிரை கையில் பிடித்து வாழும் தவிப்பே ,
ஆணிவேராய் இருந்து வெளிகாட்டி முடியாத நிலைமை,
பண்பாட்டையும், பாரம்பரியத்தை காப்பாற்றுகிறோம் எனும் பெருமை !
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின் முதிர்ச்சியே மனித இனத்தின் முதுமை
முதியோர் தினத்தை கொண்டாடுவோம் முதியோருடனே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக