இந்தியக் குடியரசு
அறுபத்தாராம் ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடுதே,
இந்திய நாடும் உலகளவில் வல்லரசு ஆனதே ,
உலகளவில் நாம் இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை காண்கிறோமே !
இயற்கை சீற்றம் அடைந்து வெள்ளம் பெருகியதே
நாடுக்கு நாடு உதவிக்கரம் நீட்டியதே,
இந்தியன் என்று பெருமிதம் கொள்வோமே
நாட்டு நலனில் அக்கறை கொள்வோமே!
குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
மொழிகள் பலவாயினும் ஒற்றுமை ஓங்குதே !
நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதிர்கள்
நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
நாடு வளம்பெற ஒற்றுமையுடன் பாடுபடுவோமே,
பிற நாட்டிற்கு எடுத்துகாட்டா என்றும் விளங்குவோமே !
ஜனநாயகத்தின் குடைகீழ் வளரும் நாடு ,
கலாசாரத்திலும், ஆன்மிகத்திலும், சிறந்த நாடு ,
பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
இணையற்ற சந்ததியுடன் திகழும் இந்தியா எனும் நாடு!
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக