ஸ்ரீகாந்தனின் உரைநடைக் கவிதைகள் -1
சமுத்திர ராஜா
கேட்டதை கொடுபவானே இறைவா
கேளாமல் கொடுத்தாயே தலைவா !
இயற்கை சீற்றத்தின் எதிரொலியே
இடைவிடாது ஒலிக்குதே மரணஒலியே தலைவா !
நின்று கொன்றாயே இறைவா
நிற்கதி ஆக்கிவிட்டாயே தலைவா !
எல்லாம் உன் பிள்ளைகள்தானே இறைவா !
ஏன் இதை மறந்தாயே தலைவா !
=====================================================================
கை
ஆண்டவன் கொடுத்தது இரு கை
அதுதான் உனது இருக்கை
அதோடு சேரு தன்னம்பிக்கை
அபாரமாய் மாறும் வாழ்க்கை
====================================================================
கவலை
கவலை என்பது ஒரு அலை
அது ஒரு கேன்சர் அலை
கவலைக்கு இல்லை ஒரு எல்லை
அது ஒரு மாபெரும் தொல்லை
கவலையை மறக்க தியானம் ஒரு கலை
அது ஒரு யோகா நிலை !
==================================== =================================
இயற்கையின் சீற்றத்தின் எதிர் ஒலியே ராட்சஸ அலைகள்
இழுத்துக்கொண்டு பல ஆயிரம் தலைகள்
இமயம் போல் சேர்ந்ததோ பிண மலைகள்
இடிந்து போனதோ பல கோடி மனங்கள் !
======================================================================
பல்லவன் தள்ளாடி வரக்கண்டோம்
பள்ளமேடுகளில் குதிக்கக்கண்டோம்
பற்கள் எல்லாம் ருத்ர தாண்டவம் ஆட கண்டோம்
பஞ்சர் ஆகி நடுபள்ளத்தில் தள்ளக் கண்டோம்,
பல்லவன் சேவை விட ன்/நடையே சிறந்தது என முடிவுகொன்/டோம்.
=====================================================================
சொத்தோ ஏராளம்
கெட்ட சேர்க்கையோ தாராளம்
வீழ்ந்ததோ பாதாளம்
அழிந்ததோ பொருளாதாரம்
அதிர்ச்சியில் சிவலோகம்
வாரிசுகளோ தெருஓரம்
======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக