மாறிய ஜென்மங்கள்
கமலாவும், சாரதியும் அந்த முதியவர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள்
ஓடிவிட்டது . இருவரும் வேலை யில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்
சாரதி ஓய்வு பெற்று, கிராமபுரத்தில் இருந்த ஒரு க்ரௌண்டை விற்று
அந்த பணத்தை வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியில் அந்த முதியோர்
இல்லத்தில் மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர் . சிட்கோ நகரில்
உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த பணத்தை, இதர செலவிற்கு
வைத்து கொண்டார் .
சாரதிக்கும், கமலாவிற்கும், ஒரு பெண் , ஒரு மகன் . இருவரும் வெளி
நாட்டில் வேலை. தூர இருந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால்
செடியும் பகை. இதனை யாவரும் அறிந்ததே. சில் வருடங்களுக்கு முன்
தான் செய்ததை நினைத்து பார்த்தான். இரு குழந்தைகளிடத்தில் மாறாத
அன்பும், சனி, ஞாயிறு அவர்களை, பீச், பார்க், பெண்ணை, பாட்டு கிளாஸ் ,
பையனை ஓவிய வகுப்பு, என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப
படிக்க வைத்து, பெண்ணிற்கு நல்ல இடத்தில திருமணம் நடந்து அவளுக்கு
ஓர் ஆண் குழந்தை மூன்று வயதில். பேரன் பெயர் கேஷவ். இரண்டு வயதில்
கார்த்திக்கின் பெண் குழந்தை அனுஷா .
என்னடா ? இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடம்மிருந்து ஒதுங்கி
வாழக் காரணம் என்ன?
வருடத்திற்கு ஒரு முறையாவது போய்வந்த கமலாவும், சாரதியும் ,
அவர் மகன் காத்திக், மகள் பிரியா. இருவரும் இரு கண்கள் . அதிலும் கமலா
பாசத்திற்கு அடிமையானவள் . சாரதி என்றும் தாமரை இலை தண்ணீர்
மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை. அவர்களை விலக்கியே வைத்து விட்டது. தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று
எந்த தாயும் விரும்புவாள் .
பாரத் மேற்றிமொனியில், பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரும்
புகைப்படத்தையும் , ஜாதகத்தையும் பார்க்க அனுமதித்தாலும், பதில் அனுப்ப
தானே முடுவு கொண்டான்.ஒரு நாள் அவனுக்கு தெரியாமல் ஒரு வரனுக்கு
புகைப்படமும், ஜாதகமும், அனுப்ப சொல்லி பதில் அனுப்பினான் . இதை கம்ப்பி யுடரில் அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான். மன்னிப்பு கேட்டும் உன் அப்பாவை நீ பேசியது தவறு என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான்.
கடைசி வரை அவன் தவறை உணரவில்லை.மன்னிக்கவும் இல்லை.
பிறகு இருவரும், மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிடு பின் தாயகம் (இந்தியாவிற்கு) திரும்பினார்கள்.
இதற்க் கிடையில் ப்ரியாவும் மற்றவர்களும், அறிவுரை கூற நிதானமாக
சிந்தித்து தன் தவறை உணர்ந்தான் . அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே
அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில்
நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தால், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள் .
திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.
இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம்
எதற்குமே, தன் மாமியார், மாமனார், கூப்பிடும் வராததை கண்டு அதிர்ச்சி
அடைந்தாள். தன் அப்பா, அம்மா, உத்தியோகத்திற்கு செல்வதால், ஏதோ
ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் தன்னுடன் இருக்கமுடியும். தன்
நாத்தனருக்கும் இதே நிலைமைதான். குழந்தையை சீசேரியன் செய்து
எடுத்தார்கள். உதவிக்கு அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில்
இருந்து உதவினர். ப்ரியாவை ஏர்போர்டில் காரில் கொண்டு விடும்போது
எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது ஆறு மாதம் கூட இருந்தா.
உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா. எனக்கு செய்ய மாட்டா. நான் பணம்
அனுப்புவதற்குதன் பிள்ளை. அப்படி எல்லாம் பேசாதே. நீ அனுப்பிய பணத்தை உன் மகன் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே
அனுப்பிடா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு
பணம் அனுப்புகின்றேன் .உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !
அதிலும் உன்னை மாதிரியே உன் மகள் அழகாக இருக்கிறாள்.
அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள்.
நீ செய்த தப்பை என்றைகாவது உணர்ந்தாயா ! இல்லை உனக்கு மன்னிக்கும்
குணம்தான் இருக்கா. இதையெல்லாம் பின்னால் அமர்ந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.
நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது ! அப்பா நமக்கு ஸ்கூல்
போகும் டிரெஸ்ஸை அயன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை
கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட் , டிராயிங் கிளாஸ் கொண்டுவிட்டு அழைத்து வந்து பின் பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று
இவ்வளுவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை.
அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்கு தயங்குகிறார்கள். நீ இங்கு வருவதற்கு
காரணமே அ ப்பத்தான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு
அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும் ,
பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே ! இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.
சுமதி, ப்ரியா அக்கா நான் அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு
இன்வைட் பண்ணிருக்கா இவரையும் அழைச்சுண்டு போகபோறேன் . திருமணம், எந்த தேதி ,எந்த இடம்? அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள். என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.
மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை
சொன்னாள் . சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு. என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு.
நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்து, உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திகை கேட்டு எனக்கு சொல்லு ஓ கே பை .
செல்லை மூடிவிட்டாள். ப்ரியாவிற்கு அம்மா அப்பாவை பார்க்க ஆசைபட்டாள் . தன் மூன்று வயது கேஷவை காண்பிக்க ஆசை பட்டாள்.
அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவனை வளர்த்தாள்.
இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்ய சுமதிக்கு கார்த்திக்கும் உதவி செய்தான். தன்னுடையதையும் எடுத்து வைத்தான்.
இருவரும், ஏர்போர்டில் சந்தித்து கொண்டார்கள். பிரியா எனக்கு எப்படியாவது
இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம்.
நேற்று இரவே அவரிடம் கேட்டேன் . அது முடியாத காரியம் . நான் வரமாட்டன்.
விமானத்தில், ப்ரியாவும், சுமதியும் பக்கத்து , பக்கத்து சீட் . ஏனென்றால் ,
குழந்தை இருப்பதால். மறுநாள் விமானம் சென்னையை காலை அஞ்சு மணிக்கு அடைந்தது. எப்படியும் மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள்
ரெஸ்ட் , மூன்று நா ட்களுக்கு,நண்பர்கள் , உறவினர்கள் விருந்து, ஆக
பத்து நாட்கள் முடிந்துவிடும். கடைசி நாள் அப்பா, அம்மாவை பார்பதற்கு
சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து அஷ்ராமத்தை
அடைந்தார்கள் .சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல்.
செகிரிடிக்கு போன் செய்து, அவர்களை,பார்க்க விருப்பும் இல்லை என்று
சொல்லி அனுப்பிவிடு என்றார். உடனே கமலாவை பார்த்து, உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் பார்க்க வேண்டும் என்றால் நீ பொய்
பார்த்து வா. என்னை கூப்பிடாதே. கமலாவும், அரை மனதுடன் கேட்டை
நெருங்கினாள். அம்மா என்று ப்ரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.
அப்பா எங்கே? என்றால் பிரியா?. அவர் இங்கு வர மறுத்துவிட்டார் .
அப்பாவை பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம் !
செக்கியூரிடியும் மூன்று தடவை சாரதி போன் செய்து, சார் உங்க மகளும்
மருமகளும் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிகிறாங்க தயவு
செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார். தலை எழுத்தே என்று கேட்டிற்கு வந்தார். வரமுடியாது என சொல்ல வாய் எடுத்தார். உடனே
பேரன் கேஷவ், தாதா, தாதா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி
ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, இரண்டும் தூக்கு,தூக்கு என்று கையை
உயர்த்தியது. கமலாவும் பேதியை எடுத்து கொஞ்சினால். இருவருமே
குழந்தயை கொஞ்சிவதிலே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை. திடிர் என்று அவர் மாப்பிளை
அப்பா நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹால் வெயிட் பண்றோம்
எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை. மருமகளும், அவர் ப்ரியாவிடம் பார்த்தியா என் பொன்னும் உன் பையனும், எப்படி ஓட்டுகிறார்கள் ,இதுதான் சுமதி, ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்.
கார்த்திக் அப்பா உன்னை மன்னிக்க எனக்கு அருகதை இல்லை. என்னை நீங்க தான் மன்னிக்கணும். எப்போ இருண்டு பெரும் யு.எஸ் வருவிங்க . நான் டிக்கெட் வாங்கட்டுமா . சுமதியும் அம்மா உங்க பேதிக்காவது எங்ககூட
வந்து இருங்கள். எல்லாம் அவரை கேளு. சாரதி தூரத்து பச்சை, கண்ணனுக்கு குளிர்ச்சி,.எங்களுக்கு இங்கேயே வசதியாய் இருக்கிறது.. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம். பிரியா அழுது விட்டாள். தம்பி பண்ணின தப்பிற்கு என்ன தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்
தப்பிற்கு என்ன தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்! கமலாவின் மீது பார்வையை செலுத்தினார் . அவள் முகம் பேரன், பேத்தியின்
பக்கமே இருந்தது. நான் வரவில்லை. அம்மா வந்தா அழைச்சிண்டு போ.
கமலாவிற்கு போகலாமா என்று கேட்க, நாம் வேண்டுமென்றால்பேரன். பேத்திகளை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே.விடுதியில்
பெர்மிஷன் வாங்கி விட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக
பேரன், பேதி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க
காரணம் என்ன என்று தெரிந்தும் கேட்டாள். பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட
மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதமா ! அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள்
மனதை புண்படுத்தி இருக்கிறான்.பிரியாவும், சுமதியும்,குழந்தைகளுக்கு பால்
வாங்க சென்றார்கள், இவர்களிடம் பேரனையும், பேதியையும் விட்டு,விட்டு .
இருவரும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பும், பேரனின் ஆங்கிலத்தில் தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மை. பால் வாங்கிய பின்
பிரியவும், சுமதியும் குழந்தயை இவர்களிடமிருந்து பிடுங்கும் போது, தாதா,
கம்பா பாட்டி என்று பேரன் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை
அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.
மாப்பிளையும், மகனும், இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள்.
கார்த்திக் அப்பா நான் வரடும்மா, வரடும்மா என்றான். டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய் என்றார்.
கார்த்திக் ஓடி வந்து அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.
நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப தேங்க்ஸ் அப்பா.
வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம், தாய்,தந்தையிடம் பார்த்த பாசமா,
மகனிடமும், மகளிடமும், உணர்ந்த அன்பா , அண்ணன், தம்பி,தங்கைகள்
இடையே உள்ள பந்த பாசமா, இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நம் பேரன்,பேத்திகளின்
கள்ளமற்ற சிரிப்பா
நம் பேரன், பேத்திகளின், கள்ளமற்ற சிரிப்பா ! இவர்களின் நினைவு
கொண்டு மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்
மனித நேயமா, எல்லோரையும் அரவனைத்துதான் செல்லவேண்டுமா?
நீங்களே பதில் கூறுங்கள் .
ரா.பார்த்தசாரதி