வெள்ளி, 17 ஜூலை, 2026

எப்படி வாழ்ந்து காட்டவேண்டும் ?

 


                              


                                        எப்படி  வாழ்ந்து காட்டவேண்டும் ?


                 வெற்றிகள்  வேண்டுமா !  முயற்சி உடையவனாய்  வாழு !
               
                நன்மைகள் வேண்டுமா ?  என்றும்   நல்லவனாய் வாழு !

                நற்பெயர் வேண்டுமா ? நேர்மையுடையவனாய்  வாழு !

                நம்பிக்கை வேண்டுமா ?  துணிவுயுடையவனாய் வாழு !

               மகிழ்ச்சி  வேண்டுமா ?  பண்பாளனாய்  வாழு !

               வளர்ச்சி வேண்டுமா ?  உழைப்பவனாய்  வாழு !

               நிலைத்த உறவு வேண்டுமா ?  உண்மையானவனாய் வாழு !
  
              பாராட்டுக்கள் வேண்டுமா ?  விவேகமுள்ளவனாய் வாழு !

              இலக்கை அடைய வேண்டுமா ? உறுதியுள்ளவனாய் வாழு !

              ஆரோக்கியம் வேண்டுமா ?  சுறுசுறுப்பானவனாய்   வாழு !

              சாதனை புரிய வேண்டுமா ?  சோர்வில்லாதவனாய் வாழு !

             சிறப்புறவேண்டுமா ? சிறந்த சீந்தனையாளனாய்  வாழு !

             புகழ்ச்சி  வேண்டுமா ?  பக்குவமுள்ளவனாய்  வாழு ~

             தலைமையிடம்  வேண்டுமா ? நல்ல வழிகாட்டுபவனாய் வாழு !

               
             ரா.பார்த்தசாரதி 

               
               

             

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக