சனி, 30 செப்டம்பர், 2023

Pongalin Vannagolangal

 


                                        பொங்கலின்  வண்ணக்கோலங்கள்


                                புள்ளியிலே  ஆரம்பித்து  புள்ளியிலே        
                                முடியும்    புள்ளிக்  கோலங்கள்,
                                
                                கோடுகளை  இணைத்துப்  போடும் கோலங்கள்,
                                புதுமையாக  நாம் காணும்  வடிவங்கள் !
                              
                                கோலங்கள்   பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
                                அதுவே  பெண்களுக்குரிய  கை  வண்ணங்கள் !

                                இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
                                மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்ககள் !

                                காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,
                                கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

                                இல்லத்தில்  கோலம்  போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
                               மனித  வாழ்கையில் சலனம் போக்குவதே  தெய்வதரிசனம் ! 

                                வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
                                இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!

                                பொங்கலன்று  மெட்ரோஸ்னில் பல வண்ண கோலங்கள,
                                மனிதனின்  மனதில் தோன்றிடுமே  நல்ல  எண்ணங்கள் !

                           கோலத்திற்கு ஓர் அரசியாம்,பல வண்ண கோலங்களே  காட்சியாம் 
                                  அருமையும், அற்புத கோலங்களுக்கு தமிழரசியே சாட்சியாம் !


                                 ரா. பார்த்தசாரதி

Neethi yean thongukirathu

 


                                                                

                                                                    நீதி ஏன் தூங்குகிறது 

                         ஒரு பசுவிற்காக தன மகனே தவறு செய்தாலும் 
                         தேரடியில்  வைத்து கொன்று நீதி வழங்கினான் 
                         பல நீதிபதிகள் சேர்ந்தும் தீர்வு வழங்கபடவில்லை 
                         மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என  நினைப்பதா !

                         தவறு செய்தவனை தண்டிப்பதற்கே நீதிமன்றம்  
                         தாழ்த்தப்பட்ட நீதி, தவறுகளை அழிப்பதர்காகவா 
                         காவல் துறையும், நீதியும் பணத்திற்கு அடிமையா ? 
                         கலியுகத்தில் இவையெல்லாம் நடக்குமென்பதா ?

                         எங்கே செல்கிறது நாடு, மக்கள் உணரவேண்டாமா      
                         அநீதிக்கு உதவிக்கரம்  நீட்ட  விடலாமா ?
                         மக்களே, பணத்திர்க்காக  தன்மானம் இழக்கலாமா?
                         சிறுதொகையை  பெற்றபின் துன்பம் அடையலாமா ?

                         பெருந்தொகையை சிறுதொகை மூலம் அடைவதா?
                         வாக்கு சீட்டினை, பணத்திற்காக விற்பதா !
                         நன்மை செய்பவர்க்கே வாக்கு அளியுங்கள் !
                          ஆதாயத்திற்காக வருபவர்களை எதிர்த்திடுங்கள் 

                         பணத்தால்  முடியும்என்ற நிலைமை மாறவேண்டும் 
                         வரும் தேர்தலில்  நல்ல தீர்ப்பினை வழங்கவேண்டும் 
                         மக்கள் மனம் மாறினால், மாற்றம் ஏற்படும் 
                         நன்மை செய்வோரையே வரவேற்க வேண்டும் !

                        ரா.பார்த்தசாரதி 
                            

எச்சில்

 



                                                                   எச்சில் 

                        தேனீயின் எச்சிலிலே சுமைமிகுந்த தேன் 
                        மகரந்தத்தை அளித்து மலர்கள் பூக்கிறது 
                        இரு எச்சிலின் சேர்க்கையே ஓர் உயிர் ஜனிக்கிறது 
                        இதை அறியா  மானிடம்  தவிக்கிறது !

                        தாயே ! விளை நிலமாம் தந்தையே வித்தாம் 
                        குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம் !
                        ஓர் உயிர் உண்டாக மற்றறொன்று தேவை !
                        ஓர் இனப் பெருக்கத்திற்கும் மற்றொன்று  தேவை !
                        
                         சிலந்தி தன் எச்சிலால் கூடு கட்டுமே,
                         எச்சிலுடன் அருந்திய தாய்ப்பால் நோய்தடுக்குமே 
                         எச்சிலே உமிழ்நீராகி, செரிமானம் சரியாகுமே  
                         எச்சிலே உடலின், நோய்த்தடுக்கும் மருந்தாகுமே  !

                         உமிழ்நீர் கலந்த திரவம் என மறவாதே !
                         கண்ட  இடத்தில் துப்பாதே,நோயினை பரப்பாதே 
                         உமிழ் நீரை உயிராய் காத்திடு,
                         நோய் தீர்க்கும் மருந்தாய் நினைத்திடு !

                   இயற்கை அளித்ததெல்லாம் எல்லோர்க்கும்  சொந்தமே  
                   எனது, உனது என்பது இடையில் மாறும் பந்தமே ! 

                            ரா.பார்த்தசாரதி 
                         

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

khadale azhagu

 


                                            காதலே  அழகு 

காதல் அழகே அழகு! பருவ பயணத்தின் பல்லக்கு, 
காதல், பயணிப்பவன் பல்லக்கை சுமக்க,
பதவிசமாய் பயணிக்கிறது காதல்
இரு கண் பார்வையே உண்டாக்கும் காதல் !

அழகுக்கும் மலருக்கும்  ஜாதி இல்லை 
நெஞ்சின் ஆசைக்கும், உறவுககும் பேதமில்லை 
காதல் என்பது இரு மனங்களின் சங்கமம் 
உள்ளங்கள் மட்டும் ஒன்றோடு ஒன்று பந்தாடுதே !

சுமப்பவர்களை அது சும்மா விடுவதில்லை..
கண் பார்வையால் ஏற்படும்  காந்த சக்தியே !
பார்வை ஒன்றே போதுமே , நெஞ்சில் 
பல  ஆயிரம் கதைகள் பேசுமே !

தவமெதுவும் இருக்காமல் தரப்படும் வரம், காதல்!
அதை  தருகிற தேவதை வருகிற வழி தான்
புரியாத புதிராய் இன்றும் இருக்கிறது!
இரு கண்களின் ஈர்ப்பே தீர்மானிக்கிறது 

இந்த வரம் தரும் தேவதைகள் வரத்தை தந்து விட்டு,
கணப் பொழுதில் காணாமல் போய் விடுகின்றனர்.
தந்து போன வரமோ வந்து வந்து வதைக்கிறது!
பசி, தாகம் எல்லாவற்றையும் மறைக்கிறது 

வரம் பெற்றவர்கள்  வாழ்வில் சுபம் பெற்றவர்கள்!
கண்களை மறைப்பதல்ல காதல்.  அது, அகக்கண்கள் 
இன்பம் எனும்  பூட்டினை , திறக்கும் சாவி !
காணா இன்பம் கனிந்ததும்  ஏனோ?

தன்னை அறிதலுக்கு பக்தி மட்டுமல்ல
காதலும் கருவி தான்!இருவரின்
இதய பரிமாற்றத்திற்கு தூது போகும் புறா காதல்!
தூது செல்ல ஒரு தோழியும் இல்லா காதல் !

உடன்படிக்கைகளை எழுதாமல், எழுதி
கையெழுத்திடாதவர்களையும் கைதியாக்கி விடுகிறது!
விட்டுக் கொடுத்தலுக்கு ஒற்றை வார்த்தையில்
ஒரு விளக்கம் தான் காதல்!

வரம் வாங்கியவர்களில் சிலர் அதை செலவழிக்க 
தெரியாமல் சிக்கித் தவிக்கின்றரே ,
கணக்கில்லாமல் வரும் காதல் கூட
ஒரு வகையில்  கறுப்புப் பணம் தான்!

அழகை ஆராதிப்பது மட்டும் காதல் அல்ல.
காதலே அழகு தான் அதை ஆராதிக்க
தவமிருக்க வேண்டாம்., உன் 
இதயம் திறந்திருக்க வேண்டும்!

ரா.பார்த்தசாரதி 

Parthasarathy Ramaswamy parthasarathyramaswamy51@gmail.com

May 19, 2023, 8:39 PM
to JAYARAMANme

Kadhal kavithai

திங்கள், 24 ஏப்ரல், 2023

சீமந்த வாழ்த்து மடல்

 




                             

                                              சீமந்த  வாழ்த்து மடல் 

இடம்: அபிராமி மினி ஹால்                               தேதி: 04-05-2023
              கிழக்கு தாம்பரம், சென்னை -59.

சிறப்புமிகு  சீமந்தம்  திங்கள் ஆறிலும், எட்டிலும், அமைவதே 
 அருமை பூச்சூடலோ  திங்கள் ஐந்திலும் ஏழிலும் அமைவதே 
பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே!


ஜெயந்தின் மனைவி காயத்ரிக்கு  சீமந்தம் ! 
ஜெயந்தின்  அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
வண்டலூரில்  இனிதே ஜெயந்துடன்   வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !


மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
 வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
வலையோசை அவள் பிள்ளைக்கும், கணவனுக்குமே சொந்தம் 
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகளை   பெற்று தர,
காயத்ரியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் ( காயத்ரி ) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(காயத்ரியை ) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

thamizh puththaande

 




     தமிழ்ப்புத்தாண்டே  வருக ! இன்பத்தை தருக !

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை சோபக்ருது  எனப்  பெயரிட்டான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

வஞ்சத்தையும், வன்மத்தையும் அகற்றிவிடு 
மன்னிக்கத்தெரிந்த  மனிதனாய் மாறிவிடு 

நாட்டுக்கு நாடு, சமாதனத்தை  போற்றிடு 
வேற்றுமையில் ஒற்றுமை காண வெற்றிக்கொடி  காட்டிட்டு  !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி 

----------------------------------------------------------------------------------------------------------------------------------


                                 

*

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

Thirupuppugazh Anbargal

 


                   பெறுநர்: திருப்புகழ்  அன்பர்கள்  குழுமம் - Mrs. Uma Balaji

                                         குருவே வழிகாட்டி, குருவேத்துணை 

        திருப்புகழைப்  பாட . பாட  வாய் மணக்கும்,  செந்தூர் முருகனால் 
        வாழ்க்கை  என்றும் சிறக்கும் .  திருபுகழனை வாரம்தோறும் 
       ஒவ்வொரு  மேட்ரோசோன் இல்லங்களிலும்  இனிதே நடைபெறுகிறது.

      மனிதர்களில் மூன்று வகையுண்டு .  முதல்வகை மனிதனாய் பிறந்து 
       தவறே செய்யாதவர். இரண்டாம் வகை  தவறே செய்பவர். மூன்றாம் 
      வகை  தவறு செய்துவிட்டு பின் திருந்தியவர்கள் .

     மேற்கூறிய  மூன்றாம் வகையை சேர்த்தவர்கள் வால்மீகியும், 
     அருணகிரிநாதரும். இருவரும் இறைவன் அருளால் ஆட்படுத்தப்பட்டு 
    செயற்கரிய  செயலை  செய்தனர் .  வால்மீகி, வால்மீகி ராமாயணமும் 
    அருணகிரி நாதர் முருகன் மீது பாடிய  திருப்புகழ் எல்லோராலும் 
    பாடப்பெற்று  எல்லோர் உள்ளத்திலும்  நீங்கா இடம் பெற்றுள்ளது .\
     சைவம், வைணவம்  இரண்டிற்கும் பொது தன்மை உடையதாக 
    திருப்புகழ்  விளங்குகிறது  என்றால் அது  மிகையாகாது 
   
   குருவே வழிகாட்டி, குருவேத்துணை,  என்பதற்காகவே நம்மாழ்வார்க்கு 
   ஒரு  மதுரகவி ஆழ்வார் சீடராய் இருந்து  பக்தி பாடல்களையே 
  இயற்றினார்.  முருகன்  அருளாலும், அவரையே வழிகாட்டியாக 
  கொண்டு அவர் அருளால்  அருணகிரிநாதர்  மூவாயிரம் பாடல்களுக்கு 
  மேல்   பாடினார் . ஒரு சில  பாடல்களே  நமக்கு   கிடைக்கப்பெற்றது .

   திரு  A.S, ராகவன்  ( திருப்புகழ்  குருஜீ )  திருப்புகழ் பாடல்களை செவ்வனே
    சீரமைத்து  உள்ளம் உருகும்படி  பாடியும். மற்றவர்களுக்கு கற்பித்தும் 
   பல இடங்களில் திருப்புகழ்  அன்பர்கள் குழு  அமைத்து, பாராயணம் 
   செய்வதற்க்கு காரணமாய்   இருந்தார் . வடக்கேயும், தெற்கேயும்  மற்றும் 
  அயல் நாட்டிலும் திருப்புகழ் அன்பர்கள் பரவியுள்னனர் .சுருங்க கூறின் 
   திரு. ஏ' எஸ் . ராகவன் வாழ்நாள் முழுதும் திருப்புகழ் தூதுவராகவே 
   செயல்பட்டார் .

  திருப்புகழ்  அன்பர்கள் குழுமத்திற்கு  உறுதுணையாக திருமதி  சுதா  
மற்றும்  உமா பாலாஜியும்  சென்னை மெட்ரோசோன்  திருப்புகழ்  அன்பர்கள் என்கிற குழுமத்தின் மூலம் செவ்வனே   திருப்புகழ் வகுப்பு  நடத்தப்படுகிறது .

             குரு என்ற  சொல்லே  திருவின்  அடையாளம் !
             குருவின் துணையே வாழ்வின் சிறப்பாகும் !
            குருவின் நல்லாசியே  நமக்குத்  துணையாகும் !
             குருஜி  ஏ .எஸ். ராகவன் திருப்புகழின் தூதுவராகும் !

இதனை எழுதி முடிக்கும் போது  இரவு  ஒன்பது மணி. எழுதி 
முடித்ததும் நான் கேட்ட பாடல்,
              
             மண்ணானாலும்  திருச்செந்தூர்   மண்ணாவேன் 
              ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையின் மரமாவேன் 
              கருங்கல்லானாலும்  தணிகைமலையின் கல்லாவேன் 
              பசும்  புல்லானாலும் முருகன் அருளால்  பூவாவேன் !
-------------------------------------------------------------------------------------------------------------
   தொகுத்தவர் : ரா. பார்த்தசாரதி