செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஆதங்கம்

       

                                                        ஆதங்கம் 

சிறகொடிந்த   பறவைபோல்  சம்மந்தமில்லாத  வாழ்க்கை 
ஒவ்வொருடைய வாழ்க்கை  ஆரம்பித்த இடமே வேறு ,
நதியாய் இருந்து கடலில்  என்றும் கலந்த  ஒன்று ,
நாதியற்று, உபயோகமற்று இருப்பதாகவே கருதுவது இன்று ! 

பணத்தினால் நாங்கள் தோற்றாலும்,  பாசத்தில் தோற்கவில்லை,
பாசமும், அன்பும்  இரு கண்கள் என உறவுகள் நினைப்பதில்லை 
இளமையில்  மகனையும், மகளையும் தாங்கிய  குடும்பம் ,
இன்று தனிமைப் பட்டு  பாசத்திற்காக  ஏங்கும் கோலம் !

பணம் எட்டிப் பார்க்கிறது, பாசம் தொலைவில் நிற்கிறதே,
பண்பும், பாசமும்,   பணத்தினால்  என்றும் மாறுபடுகிறதே,
நாடும்  முன்னேறியது, நாங்களும் முன்னேறினோம் 
சிறைக்கம்பி  இல்லாத  முதியோர் இல்லம் நாடினோம் !

தாயும், தந்தையும், பிள்ளைகளை  இரு கண்ணெனக்  கருதினாலும்,
ஏதோ ஒருவிதத்தில்  கருத்துவேறுபாடு  இருந்தாலும்,
என்றோ  ஒரு நாள்  திருந்தும்  நேரம்  வந்தாலும்,
அன்றிருந்த நிலைமை, இன்றைய நிலைமை  மாறுபட்டிருந்தாளும்,

பிள்ளைகளுக்கு  அயல் நாட்டு வேலை, அங்கிருக்கும் சூழ்நிலை  வேறு,
பாசமுள்ளவர்களாக  காட்டி, உடல் உழைப்பை சுரண்டுவது வேறு,
வேறு, கதியன்றி, நாங்கள் காட்டுவதோ எங்கள் இயலாமையன்றோ 
முடியாவிட்டாலும், முடிந்ததை செய்வதே எங்கள்  கடமையன்றோ !   


ரா.பார்த்தசாரதி 


வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தாயின் குணம்.


                                                  தாயின் குணம்.

சிறகு ஒடிந்த  பறவைபோல்  சம்மந்தமில்லா  வாழ்கை
ஒவ்வொருடைய வாழ்கை  ஆரம்பித்த இடமே வேறு,
நதியாய்  இருந்து  கடலில்  கலப்பதும்  ஒன்று,
நதியாய் இருந்தவர்கள் உபயோகமற்று இருப்பதும்  இன்று.

பணத்தினால் நாங்கள் தோற்றாலும், பாசத்தில் தோற்கவில்லை ,
பாசமும், அன்பும், இரு கண்கள் என உறவுகள் நினைப்பதில்லை 
சிறு வயதில், மகனையும், மகளையும் , தாங்கிய குடும்பம்,
இன்று தனிமை பட்டு உதவிக்கும், பாசத்திற்க்கும்  ஏங்கும் காலம்

பணம் எட்டிப்  பார்கின்றதே, பாசம் தொலைவில் நிற்கிறதே
பண்பும், பாசமும்,  பணத்தினால்  என்றும் மாறுபடுகிறதே .
முதலில் இருந்த நிலையை எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
நல்லதை மறந்து, கெட்டதை  மறக்க நினைப்பதில்லை.

தாய், தந்தை  பிள்ளைகளை இரு கண்கள் என  கருதினாலும்,
ஏதோ  ஒருவிதத்தில்  கருத்து  வேறுபாடு  இருந்தாலும்,
என்றோ ஒருநாள்  திருந்தும் நேரம்  வந்தாலும்,
அன்று இருந்த நிலை, இன்றைய நிலை வேறுபட்டு இருந்தாலும்,

பிள்ளைகளின் வெளிநாட்டு வேலை, சூழ்நிலை வேறாகயிருந்தாலும் 
பாசம்முள்ளவர்களாக  காட்டி உடல் உழைப்பை  சுரண்டிவந்தாலும், 
இன்று   கடைசியில்  பெற்றோர்கள் நாடுவதோ  முதியோர் இல்லம்.
முடியாவிட்டாலும், முடிந்ததை  செய்வதே ,தந்தை,தாயின்  குணம்.

ரா.பார்த்தசாரதி 

   .

வியாழன், 8 ஜனவரி, 2015

என் தங்கை

                                                     
                                                       என் தங்கை  

எப்போபார்த்தாலும்,  தங்கை பாப்பா தானா !
எல்லோரும் அவளையே கொஞ்சறிங்க,
அவளுக்கு  புது புது டிரஸ்  போடுறிங்க,
அவள் அழுதா எல்லோரும் பதறிங்க,
நான் அழுதா எறிஞ்சி விழுறிங்க,

அம்மா  நீ கூட  அவள் பக்கத்தில்தான்  படுக்குற,
என்னைத் தள்ளி படுக்கச் சொல்றிங்க,
அவளுக்கு மட்டும் ஊட்டி விடுறே,
எனக்கு மட்டும் டிபன் பாக்ஸ்சில் போடுற,

என் டிரெஸ்ஸை நானே போடணுமாம் 
அவளுக்கு நீங்களே போட்டுவிடுறிங்க,

எல்லாமே அவளுக்குதானா !
அப்புறம் நான்  எதுக்கு !
திரும்ப என்னை அம்மா வயித்திலேயே அனுப்பிடுங்க
அங்கேயே  நான் நிம்மதியா இருந்தேன் !

எனக்கு  அழ, அழ  வருது !
எதுவுமே எனக்கு பிடிக்கல
முக்கியமா தங்கச்சி பாப்பா கொஞ்சம்கூட  
பிடிக்கல என்று சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாயா 
நான் மிகவும் நல்ல பையன், தங்கையை என்கை கொண்டு 
கட்டி உறவாடுவேன் ! நான் அழ மாட்டேன், அவளை நன்றாக 
பார்த்துக்கொள்வேன்.  

ஏன் என்றால் தங்கை என்பவள் தன்  கை  கொண்டு எல்லோர்க்கும் 
உதவுபவள்,  தங்கை என்ற உறவே தரணியில் உயர்ந்ததாகும் ! 

ரா. பார்த்தசாரதி 


வியாழன், 11 டிசம்பர், 2014

தேசிய ஒற்றுமை தினம்




                                                       தேசிய ஒற்றுமை தினம்

ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு, இல்லையெனில் அனைவர்க்கும் தாழ்வு ,
அவனியிலே அமைதி மட்டும் நிலவும் தினமாக நாம் ஒன்றுபடுவோமே
நதியால் இணைந்து, வேற்றுமையில் ஒற்றுமை காண நினைப்போமே
சுயநலங்கள், சூழ்ச்சிகள்  மறையும் தினமாக கொண்டாடுவோமே!


மாநிலங்களுக்கு  இடையே  சமாதானம், தானமாய் கிடைக்ககாதோ
பிரிவினை  எனும் முள் சிதைந்து ஒற்றுமை எனும் மலர் மலராதோ
மாநில ஆட்சியும், அதிகாரமும் மக்கள் நலதினமாக  மாறாதோ,
மக்கள் குரலே மகேசன் குரல் என்று ஒலிக்கும் தினமாக மாறாதோ!

ஆட்சியும், அதிகாரமும்,  மக்களின் ஏக்கத்தை தீர்கட்டுமே
மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நட்பிணை வளர்த்துக் கொள்ளட்டுமே,
ஒற்றுமை மேம்பட தலைவர்கள் என்றும்     பாடு படட்டுமே
இனம், மொழி கடந்து மாநிலங்கள் யாவும் ஒன்றுபடட்டுமே!

தேசிய ஒற்றுமை தினத்தை  மாநிலமெங்கும் கொண்டாடுவோமே,
ஒற்றுமையை வளர்க்க   தேசத் தலைவர்களை  நினைவு கூறுவோமே
இதனை தேசிய ஒருமைபாட்டிற்கு எடுத்துகாட்டாக உரைப்போமே  
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை  கொண்டாடுவோமே !



      ரா. பார்த்தசாரதி














.

புதன், 12 நவம்பர், 2014

குழந்தைகள் தினம்

                                                             குழந்தைகள் தினம் 


குழந்தைகளை  வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு 
பெண் சிசுவை இரக்கமின்றி கொல்வதும் நம் நாடு 
பெண் குழந்தைகளை சுமையாக நினைப்பதும் நம் நாடு .
காலபோக்கில் இதனை மாற்றியதும்  நம் நாடு.

ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில் 
அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர் ,
இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர் 
இந்நிலைமை கண்டும் தத்து எடுக்க சிலர் தயங்குவர் !

தத்து எடுப்பதில் என்றும்  தவறில்லை 
நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை, 
அனாதை  என்ற  சொல்லை  அகற்றிடுங்கள் , 
அதுவே  உன் வாழ்க்கைக்கும்  வழிகாட்டி என உணருங்கள் 

குழந்தையும் தெய்வமும்  ஒன்று என  கொண்டாடுகிறோம் 
பிரதமர் நேருவின்  பிறந்த நாளாக கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே 
குழந்தைகளிடத்தில்   அவர் கொண்ட  அன்பினை  மறக்க முடியுமா  
நம் நாட்டில் உள்ள  எல்லா குழந்தைகளும் அவரை போற்றிடுமே! 

 குழல் இனிது  யாழ் இனிது,  என்ப தம் மக்கள் 
மழலை சொல் கேளாதவர்  என்பது வள்ளுவன் வாக்கு,
குழந்தை செல்வம்  வாழ்கையின் இன்றியமையாத செல்வமே  
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே  ! 

ரா.பார்த்தசாரதி 

செவ்வாய், 4 நவம்பர், 2014

புரியாத புதிர்



                                                               புரியாத புதிர் 

அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டை  பின்பற்றுகிறேன் 
அன்று உன் நிலைமை கண்டு பிரம்மிப்பு அடைந்தேன்,
உன்னைப்போல்  உழைக்கின்றேன் இன்று நானே 
அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன் 

இன்று திருமணம் ஆனதால் பிற நலமாக  சிந்திக்கின்றேன் 
என்  குழந்தை,என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்  
ஏன் இந்த மாற்றம்,  என்  நிலைமை  என்னை மாற்றியதா, 
பெண்  இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா !

நீயும் என்வயத்தில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய் ,

உன் அன்பும், தியாகமும், எங்களுக்காக அளித்தாய் 
நீ செய்த பாசத்தையும்,  அன்பையும் திருப்பி தரமுடியுமா 
உன்னிடம் கற்றதனால் இன்று என் வாழ்க்கை எளிதாகிறது !

தாயின் பாசமும், அன்பும்,  அவள் மடியிலிருந்து தொடக்கம், 
பெண் தாய்க்கு  தாயாக  இருந்தாலும் மீண்டும் பிறக்கும் ,
பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி,
 பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே   வெற்றிக்கு மாலை !

பல உருவினில் இருந்தாலும், இன்றும்  ஒரு புரியாத புதிர் !


ரா.பார்த்தசாரதி