ஆதங்கம்
சிறகொடிந்த பறவைபோல் சம்மந்தமில்லாத வாழ்க்கை
ஒவ்வொருடைய வாழ்க்கை ஆரம்பித்த இடமே வேறு ,
நதியாய் இருந்து கடலில் என்றும் கலந்த ஒன்று ,
நாதியற்று, உபயோகமற்று இருப்பதாகவே கருதுவது இன்று !
பணத்தினால் நாங்கள் தோற்றாலும், பாசத்தில் தோற்கவில்லை,
பாசமும், அன்பும் இரு கண்கள் என உறவுகள் நினைப்பதில்லை
இளமையில் மகனையும், மகளையும் தாங்கிய குடும்பம் ,
இன்று தனிமைப் பட்டு பாசத்திற்காக ஏங்கும் கோலம் !
பணம் எட்டிப் பார்க்கிறது, பாசம் தொலைவில் நிற்கிறதே,
பண்பும், பாசமும், பணத்தினால் என்றும் மாறுபடுகிறதே,
நாடும் முன்னேறியது, நாங்களும் முன்னேறினோம்
சிறைக்கம்பி இல்லாத முதியோர் இல்லம் நாடினோம் !
தாயும், தந்தையும், பிள்ளைகளை இரு கண்ணெனக் கருதினாலும்,
ஏதோ ஒருவிதத்தில் கருத்துவேறுபாடு இருந்தாலும்,
என்றோ ஒரு நாள் திருந்தும் நேரம் வந்தாலும்,
அன்றிருந்த நிலைமை, இன்றைய நிலைமை மாறுபட்டிருந்தாளும்,
பிள்ளைகளுக்கு அயல் நாட்டு வேலை, அங்கிருக்கும் சூழ்நிலை வேறு,
பாசமுள்ளவர்களாக காட்டி, உடல் உழைப்பை சுரண்டுவது வேறு,
வேறு, கதியன்றி, நாங்கள் காட்டுவதோ எங்கள் இயலாமையன்றோ
முடியாவிட்டாலும், முடிந்ததை செய்வதே எங்கள் கடமையன்றோ !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக