என் தங்கை
எப்போபார்த்தாலும், தங்கை பாப்பா தானா !
எல்லோரும் அவளையே கொஞ்சறிங்க,
அவளுக்கு புது புது டிரஸ் போடுறிங்க,
அவள் அழுதா எல்லோரும் பதறிங்க,
நான் அழுதா எறிஞ்சி விழுறிங்க,
அம்மா நீ கூட அவள் பக்கத்தில்தான் படுக்குற,
என்னைத் தள்ளி படுக்கச் சொல்றிங்க,
அவளுக்கு மட்டும் ஊட்டி விடுறே,
எனக்கு மட்டும் டிபன் பாக்ஸ்சில் போடுற,
என் டிரெஸ்ஸை நானே போடணுமாம்
அவளுக்கு நீங்களே போட்டுவிடுறிங்க,
எல்லாமே அவளுக்குதானா !
அப்புறம் நான் எதுக்கு !
திரும்ப என்னை அம்மா வயித்திலேயே அனுப்பிடுங்க
அங்கேயே நான் நிம்மதியா இருந்தேன் !
எனக்கு அழ, அழ வருது !
எதுவுமே எனக்கு பிடிக்கல
முக்கியமா தங்கச்சி பாப்பா கொஞ்சம்கூட
பிடிக்கல என்று சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாயா
நான் மிகவும் நல்ல பையன், தங்கையை என்கை கொண்டு
கட்டி உறவாடுவேன் ! நான் அழ மாட்டேன், அவளை நன்றாக
பார்த்துக்கொள்வேன்.
ஏன் என்றால் தங்கை என்பவள் தன் கை கொண்டு எல்லோர்க்கும்
உதவுபவள், தங்கை என்ற உறவே தரணியில் உயர்ந்ததாகும் !
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக