திங்கள், 8 ஜூலை, 2013

penn viduthalai





பெண்  விடுதலை 



எங்கே போயிற்று பெண் விடுதலை?
அது...
தொலைந்து போன அந்த பெண்ணிடமே
கேட்டேன்

* நாகரிக மோகத்தில்
நம்முடைய
கலாசாரத்தை அழித்த
நங்கைகளிடமே கேட்டேன் !

* நெற்றி திலகமிட்டு
கருங்கூந்தல் சீவி
மலர் சூட்டி
அழகு பார்த்த தாயின் எதிரில்,
கருங்கூந்தல் கத்தரித்து
நாகரிக உடையில்
நளினமாய் திரியும்...
நங்கைகளிடம் கேட்டேன்,
அறிவைதானே  வளர்க்கச் சொன்னேன்,
ஆடையை   நானா குறைக்கச் சொன்னேன்,  


* அதிகாலையில்
புதுப்புனலாடி
நளினமாய் மாக்கோலமிட்டு
வீட்டில் குத்து விளக்கேற்றும்
நிலைமாறி...
அதிகாலையிலிருந்து
இரவு வரை
அலைபேசியும், கையுமாகத்
திரியும்
நங்கைகளிடம் கேட்டேன் !

* வேறு ஆடவர் முகம் பார்க்க
நாணி கோணி
கால்களால் கோலம் வரையும்
நிலைமாறி...
நட்பு எனும் பெயரில்
ஆடவர்களுடன் ஊர் சுற்றும்
நங்கைகளிடம் கேட்டேன் !

* "இவர் தானடி
உன் மணாளன்'
என்று கூறிய நிலைமாறி...
கல்விச் சாலை
செல்லும் போது திருமணம்
முடிவதற்குள் விவாகரத்து
என்று திரியும்
நங்கைகளிடம் கேட்டேன்  !

* ஐயகோ...
பாரதியே இதை பார்த்தால்
கொதித்தெழுவார்...
உனக்கேனடி விடுதலை;
உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை...
என்று பித்தானக மாறி பிதற்றுவான்!

* பெண்ணே...
வாங்கித் தந்த விடுதலை
தன்னம்பிக்கையை உயர்த்தி
வீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானே
ஒழிய...
வீட்டை கொளுத்தும்
கொள்ளியாக்க அல்ல!

* வாங்கிய விடுதலையை
வீணாக்காதே...
மீண்டும்
மூலையில் முடங்காதே!

சனி, 6 ஜூலை, 2013

srikanth kadaisee Aasai.

              கடைசி  ஆசை

நானோ  ஆயுள்  கைதி,
நாளை  காலை  முடியபோகுது  என் விதி,
நான் பார்க்கவேண்டும் என் திருமதி,
நான் அடைவேன்  மனநிம்மதி

  எழுதிய  தேதி - 06-11-2006


வெள்ளி, 21 ஜூன், 2013

kankanda deivam

                                                    கண்கண்ட  தெய்வம் 

தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே 
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.

பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் .

உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?

உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே

என்   வளமே உன்  சிறப்பு,
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 

அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.


   ரா. பார்த்தசாரதி.

பின்குறிப்பு::  அவந்திகா, அக்சத் , ருஷில் வியாஸ், ரியன், கேசவ்,  இவர்கள் இருபது வருடம் 
கழித்து  கவிஞன்  ஆனால் மேலே எழுதப்பட்ட  கவிதையை  அவர்களே எழுதிருப்பார்கள் .
தாய் தந்தையர்களே   சற்றே நினைத்துப்பாருங்கள்.

சனி, 2 பிப்ரவரி, 2013



நினைக்கத்தெரிந்த  மனமே!

வாழ்கையின்  உண்மையான  சந்தோஷம், தாயிடம்  பார்த்த  பாசமா,

மகளிடமும், மகனிடமும்  உணர்ந்த  அன்பா,

சகோதரர்களின்   பிரியாத  உறவா,

இது  எந்த ரகம்  என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில்,

நம்மை  மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பேரன் ,பேத்தியின் கள்ளம் கபடமற்ற சிரிப்பா?

அவந்திகாவின்  வா, வாவென்று கூப்பிடும் அழகும், கள்ளமில்லா சிரிப்பும்   தாத்தாவும் , பாட்டியும்  நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்

இதுதான்  நேசமும் , பாசமும் கலந்த  உறவு.



 ரா..பார்த்தசாரதி 

சனி, 12 ஜனவரி, 2013

Nee Eppadi Iruppai ! Aethai ezauppai




      நீ  எப்படி  இருப்பாய்  !!   எதை  இழைப்பாய்  !!

       1.  நயம்பட பேசினால்,  நல்லவனாக  கருதபடுவாய் !

         2.   சிந்தித்து  பேசினால்,  சிறப்புடன்   இருப்பாய் !

       3.  அறிவு ஆற்றலுடன்  பேசினால்,  அறிவாளியாக  
புகழப்படுவாய் !
                                                                                         
       4.  பொறுமையாக பேசினால்,  போற்றப்படுவனாக இருப்பாய் !  

      5.   பொருத்தமாக பேசினால்,   மதிக்கபடுவாய்

      6.    பண்புடன் பேசினால் பயன் அடைபவனாக இருப்பாய் 

        7.    கோபமாக பேசினால் குணத்தை   இழப்பாய்  !

        8.   ஆணவமாய்  பேசினால் , அன்பை   இழப்பாய் !

        9.   கடுமையாக .பேசினால்  நட்பை
இழப்பாய்    !

      10.   வேகமாக பேசினால்  அர்த்தத்தை 
இழப்பாய் !

      11.   அதிகமாக பேசினால்  உன் மதிப்பை  
இழப்பாய்   !

      12.   பொய்  பேசினால் உன் பெயரையே
இழப்பாய்  !

 நல்லதே  பேசுங்கள் ,  நல்லதே செய்யுங்கள ! நன்மை  அடைவீர்கள் !!

செவ்வாய், 8 ஜனவரி, 2013

Cherry Blossom

CHEERY BLOSSOM
The spring open its gate of Castle!
Flowers blossomed with distinct colors of Dazzle !
Wears on his smiling face and a dream of Spring !
All nature’s gift but the mankind makes the rift !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever!


The Cheery Blossom display for our wish !
It cherish in mind and our thoughts are flourish !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !


From the Air and Peak, if we look down the pathway !
It seems to be the line of planted Nosegay !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !


R.Parthasarathy.

திங்கள், 7 ஜனவரி, 2013

ninaika therintha manamay

என்ன தெரியும் ! என்ன தெரியாது !

ருஷில், அக்சத்  ரியன், கேசவ்  இவர்களுக்கு என்ன தெரியும்! என்ன தெரியாது!
இவர்களின்  தாய், தந்தையர்க்கு என்ன தெரியும் ! என்ன தெரியாது !
இது  ஒரு உரைநடை  உரையாடல் !


1. பசி,  தூக்கம்  வந்தால்  எங்களுக்கு  அழ  தெரியும் !
   உங்கள்  கஷ்டங்கள் பற்றியும், வரவு,செலவு பற்றி எங்களுக்கு தெரியாது !

2. நாங்கள் கேட்டதை உடனே வாங்கி கொடுக்கவேண்டும் !
   எங்களுக்கு சாப்பிடும் பொருளின் விலை பற்றி தெரியாது !

3. எங்களுக்கு   அப்பா, அம்மாதான்  முக்கியம்  என்று  தெரியும் !
    எங்களுக்கு  மற்றவர்களிடம், உயர்வு, தாழ்வு  தெரியாது !

4. எங்களுடைய    சிரிப்பினை தானமாக கொடுக்கதெரியும் !
    எங்களுக்கு பயம்,  கவலை என்பது என்னவென்று  தெரியாது !

5. எங்கள்  எதிர்காலம்  உங்கள் கையில்தான்  இருக்கிறது என்று தெரியும் !
    எங்களுக்கு  இப்பொழுது, எதிர்காலம், வருங்காலம் பற்றி தெரியாது !

6.எங்களுக்கு எந்த பொருளையும், கடிக்கவும்,உடைக்கவும்  தெரியும் !
   நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும், விலையும் தெரியாது !

7.எங்கள் எதிர்காலத்தை பற்றி, மனகோட்டை கட்டுவீர்கள் என்பது தெரியும் !
   எங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன என்பதே எங்களுக்கு  தெரியாது !

8. உங்கள்  வேலையே  உங்களுக்கு  முக்கியம் !
    எங்கள்  விளையாட்டே  எங்களுக்கு முக்கியம் !

9. அம்மா,  அப்பா வேலைக்கு செல்கிறார்கள் என்று தெரியும் !
    குழந்தை காப்பகமும் , தாதா பாட்டியும்  அடைக்கலம் என்று தெரியாது !

10. வேலைக்கு செல்லாத அம்மாவே,  நல்ல அம்மா என்று தெரியும் !
    டிவிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்கு தெரியாது !

11.விளையாட்டும் குறும்பும் சில காலங்களே என்று உங்களுக்கு தெரியும்!
     சில வருடமே, எங்கள் இஷ்டதிர்க்கு அனுமதிப்பிர்கள் என்று தெரியாது !,


12. எல்லா  குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழநதைகளே !
     அவர்கள் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும், தாய், தந்தை  வளர்ப்பினிலே !



ரா. பார்த்தசாரதி 


குறிப்பு:   அடுத்து வருவது  ருஷில், அக்சத் , ரியன், கேஷவ்  இவர்கள் 
    
                       '"கவிதை எழுதினால் "'