திங்கள், 7 ஜனவரி, 2013

ninaika therintha manamay

என்ன தெரியும் ! என்ன தெரியாது !

ருஷில், அக்சத்  ரியன், கேசவ்  இவர்களுக்கு என்ன தெரியும்! என்ன தெரியாது!
இவர்களின்  தாய், தந்தையர்க்கு என்ன தெரியும் ! என்ன தெரியாது !
இது  ஒரு உரைநடை  உரையாடல் !


1. பசி,  தூக்கம்  வந்தால்  எங்களுக்கு  அழ  தெரியும் !
   உங்கள்  கஷ்டங்கள் பற்றியும், வரவு,செலவு பற்றி எங்களுக்கு தெரியாது !

2. நாங்கள் கேட்டதை உடனே வாங்கி கொடுக்கவேண்டும் !
   எங்களுக்கு சாப்பிடும் பொருளின் விலை பற்றி தெரியாது !

3. எங்களுக்கு   அப்பா, அம்மாதான்  முக்கியம்  என்று  தெரியும் !
    எங்களுக்கு  மற்றவர்களிடம், உயர்வு, தாழ்வு  தெரியாது !

4. எங்களுடைய    சிரிப்பினை தானமாக கொடுக்கதெரியும் !
    எங்களுக்கு பயம்,  கவலை என்பது என்னவென்று  தெரியாது !

5. எங்கள்  எதிர்காலம்  உங்கள் கையில்தான்  இருக்கிறது என்று தெரியும் !
    எங்களுக்கு  இப்பொழுது, எதிர்காலம், வருங்காலம் பற்றி தெரியாது !

6.எங்களுக்கு எந்த பொருளையும், கடிக்கவும்,உடைக்கவும்  தெரியும் !
   நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும், விலையும் தெரியாது !

7.எங்கள் எதிர்காலத்தை பற்றி, மனகோட்டை கட்டுவீர்கள் என்பது தெரியும் !
   எங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன என்பதே எங்களுக்கு  தெரியாது !

8. உங்கள்  வேலையே  உங்களுக்கு  முக்கியம் !
    எங்கள்  விளையாட்டே  எங்களுக்கு முக்கியம் !

9. அம்மா,  அப்பா வேலைக்கு செல்கிறார்கள் என்று தெரியும் !
    குழந்தை காப்பகமும் , தாதா பாட்டியும்  அடைக்கலம் என்று தெரியாது !

10. வேலைக்கு செல்லாத அம்மாவே,  நல்ல அம்மா என்று தெரியும் !
    டிவிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்கு தெரியாது !

11.விளையாட்டும் குறும்பும் சில காலங்களே என்று உங்களுக்கு தெரியும்!
     சில வருடமே, எங்கள் இஷ்டதிர்க்கு அனுமதிப்பிர்கள் என்று தெரியாது !,


12. எல்லா  குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழநதைகளே !
     அவர்கள் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும், தாய், தந்தை  வளர்ப்பினிலே !



ரா. பார்த்தசாரதி 


குறிப்பு:   அடுத்து வருவது  ருஷில், அக்சத் , ரியன், கேஷவ்  இவர்கள் 
    
                       '"கவிதை எழுதினால் "'













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக