வியாழன், 26 ஜனவரி, 2023

kudiyarasu 2023

 

                                                   

                                                          இந்தியக் குடியரசு 

              இந்திய குடியரசின் 74 ஆம் ஆண்டினை கொண்டாடுகிறோம் 
             ஆங்கிலேயர்களிடமிருந்து  அஹிம்சை என்னும் அறவழியில
             வெற்றி வாகை சூடியதால் இக்குடியரசு தினத்தை நாம் 
             கொண்டாடுகிறோம் 
              உடல்களை வருத்தி தாயகத்திற்கு  தன உயிரை 
             அர்ப்பணித்த  வீரர்களின் தினம்
              தன சுகங்களையெல்லாம்  தூக்கி எறிந்த தியாகிகளின் 
             தியாக   தினம் 
             எந்த நோக்கத்தில் நமக்காக சுதந்திரத்தை வாங்கி 
              தந்தார்களோ அதை கண்ணியத்துடன் காப்பது 
              நம் கடமையன்றோ ?
             இன்றைய  நிலை என்ன !
            நாட்டுக்கு நாடு சமாதானம் தானமாய் கிடைக்காதா ?
            நம்பிக்கை இன்மையும்  நயவஞ்சகமும் கலந்த ஆட்சி 
             மாறாதா   இக்குடியரசு நாட்டில் !
            இந்தியர்  பல நாடுகளிலபெரும் பதவி வகித்தாலும் 
           இக்குடியரசு நாட்டின் நிலைமை கண்டு மனம் கலக்கமுற்றதே 
            எங்கு சட்டம் முடிகிறதோ அங்கேதான் கொடுங்கோல் 
            ஆரம்பம், என்கிறார் ஒரு எமர்சன் எனும் எழுத்தாளன்.
            டாக்டர் அம்பேத்கார்  அரசு சாசனங்களையம், சட்டங்களையும் 
            இயற்றி   மாநிலங்கள ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து 
            அதன் மூலம்  இந்தியா மாநிலங்கள்  எல்லாம் ஆட்சி   
            உட்பட்டு நடத்தப்படுகிறது 
            
              உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம் 
             வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதை  காண்கிறோம் 
             இயற்கை  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகினாலும் 
              நாடுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
             இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே 
              நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே!
             குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
              நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே 
              ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
              மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே !

              நாடு  உனக்கு என்ன செய்தது என  கேட்காதிர்கள் 
              நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
             நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
             பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா  என்றும் விளங்குவோமே !
             ஜனநாயகத்தின்  குடைகீழ்   வளரும்  நாடு ,
              கலாசாரத்திலும்,  ஆன்மிகத்திலும்,  சிறந்த நாடு ,
           பழமையும், பண்பாடும் மிக்க நாடு .
              பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
              ணையற்ற  சந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!  


             ரா.பார்த்தசாரதி 

சனி, 21 ஜனவரி, 2023

 


                                                   பொங்கலின்  வண்ணக்கோலங்கள்

                                புள்ளியிலே  ஆரம்பித்து  புள்ளியிலே        
                                முடியும்    புள்ளிக்  கோலங்கள்,
                                
                                கோடுகளை  இணைத்துப்  போடும் கோலங்கள்,
                                புதுமையாக  நாம் காணும்  வடிவங்கள் !
                              
                                கோலங்கள்   பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
                                அதுவே  பெண்களுக்குரிய  கை  வண்ணங்கள் !

                                இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
                                மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்ககள் !

                                காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,
                                கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

                                இல்லத்தில்  கோலம்  போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
                               மனித  வாழ்கையில் சலனம் போக்குவதே  தெய்வதரிசனம் ! 

                                வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
                                இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!

                                பொங்கலன்று  மெட்ரோஸ்னில் பல வண்ண கோலங்கள,
                                மனிதனின்  மனதில் தோன்றிடுமே  நல்ல  எண்ணங்கள் !

                             கோலத்திற்கு ஓர் அரசியாம்,பல வண்ண கோலங்களே  காட்சியாம் 
                                    அருமையும், அற்புத கோலங்களுக்கு தமிழரசியே சாட்சியாம் !


                                 ரா. பார்த்தசாரதி

                                 

செவ்வாய், 17 ஜனவரி, 2023

  

                                                    

                                                                   உறவுப் பூக்கள் 

                                        அரைமூடடை  நெல் சுமந்து 
                                        ஆற்றைக்கடந்து  அரைத்து வருவாளாம் 
                                        ஆத்தா !

                                        நான்கு பேர் நடும் சேற்றை 
                                        ஒற்றையாய் நின்று நட்டு முடிப்பாளாம் 
                                        அம்மா !

                                        ஊற  ஊற காத்திருந்து நீரை வடிகட்டி 
                                        சோற்றாக்கிய பின் வேலைக்கு போவாள் 
                                        சித்தி !

                                        தலைசால் ஓட்டி விதை விதைத்து 
                                        பரம்படிப்பாராம்   அப்பா !

                                        நீர் சோற்றை, பானையில் சுமந்து 
                                        வரப்பின் கரையில் நின்று சோற்றுக்காக 
                                        அழைப்பாள்  மனைவி !

                                        வெட்டிய விறகிலிருந்து கிளைகளை 
                                        வெட்டி ஒரே கட்டாக சுமந்து வந்து 
                                        போடுவாள் அத்தை !

                                        இரட்டை குடம் எடுத்து தண்ணீரை 
                                       இடுப்பிலும், தலையிலும் சுமந்து கொண்டு 
                                       வருவாள் அக்கா !

                                       குடத்து நீரை இறக்கி வைக்க 
                                       தன்  கைக்கொண்டு உதவும் தங்கை !

                                       உண்கின்ற வீட்டில் ஆளுக்கு ஒரு வேலை 
                                       செய்தாலே குடும்பம் ஒரு கதம்பமாகும் !

                                       ரா.பார்த்தசாரதி            

                                      
                                        
                                        

                                          

                                         


                                      

திங்கள், 9 ஜனவரி, 2023

manithaa ! manithaa !

                                                             


                                                                  மனிதா ! மனிதா !

                            மரம் போல் ஏன்  நிற்கின்றாய் ?
                           என மனிதனை ஏசாதே ?

                           மனிதா ! அதன் பணி உன்னால் செய்ய முடியுமா ?
                          ஆணிவேறாக நின்று மரத்தையும், இலை, கிளை 
                           தாங்குவதை உன்னால் மறக்கமுடியுமா ?

                         வெய்யிலில்   காய்ந்தாலும் இலைகள் 
                          நிழலை பரப்புவதற்கு  நன்றி சொல்ல முடியுமா?

                         மலர்தால்  வாடிவிடுவோம் எனத் தெரிந்தும் 
                        இதழ்விரித்து மகிழ்ச்சியோடு மகரந்தம் 
                        அளிப்பதை தவிர்ர்க்க முடியுமா ?

                       வெட்டுப்படுவோம், கடித்து  உண்ணப்படும் 
                       காலம்,காலமாய்,கவரும் வண்ணத்தில் 
                       நம்  கைக்கு  கிடைக்கும் கனிகள் !

                       மரத்திலிருந்து விழும் சரகுகள் உரமாவதையும் 
                       உயிர் வளி அளிப்பதால்தான் மழை உண்டாவதை 
                      யார் அறியார்?

                     ஒற்றைப் பண்புடைய வெற்று மனிதன் 
                     ஆடி அடங்கும் வாழ்க்கையில் ஆறடியே 
                     சொந்தமடா  மண்ணுக்கும், புழுவிற்குமே 
                     சொந்தம் என தெரிந்தும் ஆர்ப்பாட்டம் ஏனோ 

                      நீ மரத்தை விட  தாழ்ந்தவனே என அறியாயோ 

                      ரா.பார்த்தசாரதி  

                      

                      
                      
                        




                        
                          

சனி, 7 ஜனவரி, 2023

Profile of R,Parthasarathy

 




இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள்

Parthasarathy Ra

 

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக காதல் என்றால். . . ?!”  என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்”  என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின் யதார்த்த வாழ்க்கையையும்,பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.

தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்”  என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும்  சிறு கதைகளையும், கவிதைகளையும் எழுதிவருகிறார் . தற்போது அண்ணாநகரில் உள்ள மெட்ரோசோனில் D-  103 முதல் மாடியில்  வசித்து வருகிறார்  செல்  நெம்பர் 8148111951.
==============================================


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

Puththande ottrumai Malaratho


புத்தாண்டே ஒற்றுமை மலராதோ !!              

புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே !

பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

நாட்டுக்கு, நாடு சமாதானம் 
தானமாய் கிடைக்காதோ 
மக்கள் இறப்பினை 
சற்றே நினைக்காதோ !
புத்தாண்டே !

மண்ணில் விழும் மழைத்துளியும்
விண்ணில் வீசும் 
காற்றும் 
யாவருக்கும் பொதுதானே
புத்தாண்டே
!


*நதியால் இணைந்த
மாநில மக்கள், 
அணையால் 
பிரியும் அவலமும் அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே
!

நம்பிக்கை துரோகமும் 
நயனவஞ்சகமும் கூடஇருந்தே  குழி
பறிக்கும்  கூட்டங்களின் 
எண்ணங்கள் மாறாதோ                           
புத்தாண்டே!

வெள்ளத்தால் சேதமுற்ற 
பயிருக்கும், வீடு, வாசல் 
இழந்தோர்க்கும் ஆவண 
அரசு செய்யாதா  புத்தாண்டே!

இந்திய நாடே , வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து 
சுயநலங்களும் சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல் மறைந்து,

மனித நேயம் மலரட்டும் 
புத்தாண்டே !!
 ரா.பார்த்தசாரதி  - D 103  8149111951