திரு. சுதர்ஷன், திருமதி அக்ஷஷயா (வஞ்சுளவல்லி )
திருமண வாழ்த்து மடல்
1. இன்று வித்யாபாரதி கல்யாண மண்டபதில் ஓர் கல்யாண மேடை ,
இன்னாருக்கு இன்னார், என்று எழுதிவைத்த மேடை,
2. இருவீட்டாரும் இணைந்தே நடத்திடும் விழா ,
உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும் விழா !
3. வாழ்க்கை துணைநலம் நாடும் சுதர்சன் எனும் ஆடவனே
என்றும் நீ அமெரிக்காவில் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே
4. திருமணம் என்பது இருமனம் அல்ல
அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம்!
5. திருமதி ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம்
திருமதியின் பெயரோ அக்ஷ்யா என்று அழைப்பது பழக்கம் !
6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
7.பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !
8. திருமணத்தில் அளிக்கப்படுவது உற்றார், உறவினர் வாழ்த்துக்களே
அகிலத்தில் சிறந்தது தாய், தந்தையரின் வாழ்த்துக்களே!
9. கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
10. காலங்கள், கோலங்கள் என்றும் மாறும்,
உறவே என்றும் நிலைத்து வாழும் !
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!
12.. மணமக்களை வாழ்த்திவிட்டு மகிழ்வுடன் விருந்துண்போம்
மணமக்கள் வாழ்வில் வளம்பெற வாழ்த்துவோம்!
13. அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது.
ரா.பார்த்தசாரதி .
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக