சனி, 29 ஏப்ரல், 2017

Sudharsan Marriage Vazhthu Madal








         திரு. சுதர்ஷன், திருமதி அக்ஷஷயா  (வஞ்சுளவல்லி ) 
                                          திருமண வாழ்த்து மடல்

1. இன்று வித்யாபாரதி கல்யாண மண்டபதில்  ஓர் கல்யாண  மேடை ,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. வாழ்க்கை துணைநலம் நாடும் சுதர்சன் எனும் ஆடவனே 
     என்றும் நீ அமெரிக்காவில் வாழ்ந்திடுவாய் சிறப்புடனே 
                                                                                                                                     
4. திருமணம் என்பது இருமனம்  அல்ல
    அதுவே இருமனம் கொண்ட  ஒரு மனம்!   
                                                                                                                        
5.  திருமதி  ஒரு வெகுமதி  என்று சொல்வது  வழக்கம்
     திருமதியின்  பெயரோ அக்ஷ்யா என்று அழைப்பது பழக்கம் !

6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

7.பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
   புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

8. திருமணத்தில்  அளிக்கப்படுவது உற்றார், உறவினர் வாழ்த்துக்களே
    அகிலத்தில் சிறந்தது  தாய், தந்தையரின்  வாழ்த்துக்களே!

9. கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
 
10. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

12..  மணமக்களை  வாழ்த்திவிட்டு  மகிழ்வுடன்  விருந்துண்போம் 
       மணமக்கள்  வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

13. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.

      ரா.பார்த்தசாரதி .


       


.
.
.

வியாழன், 27 ஏப்ரல், 2017

நினைக்கத் தெரிந்த மனமே






                                           நினைக்கத்  தெரிந்த  மனமே

நாள்தோறும் நடக்கும்
சாலை விபத்து
செய்திகளை படிக்கும்போது
பதை பதைக்கிறது மனம்!

இரக்கமில்லாமல் கலப்படம்
செய்யும் அரக்கர்களை கண்டு
எதிர்க்க முடியாமல்
கொதிக்கிறது மனம்!

ஜாதி, மதச் சண்டையிட்டு
மண்டை உடையும்
வெறியர்களை பார்த்து
பரிதாபப்படுகிறது மனம்!

நாடுகள் வேறாக இருந்தாலும்
அப்பாவிகளை கொல்லும்
தீவிரவாதிகளின் செயல் கண்டு
வெறுக்கிறது மனம்!

சிரித்தபடியே
சிறை செல்லும் ஊழல்
அரசியல்வாதிகளை பார்த்து
காறி துப்புகிறது மனம்!

கோடி கோடியாக கொட்டி
எடுக்கும் திரைப்படங்கள்
காதலுக்காகவே உயிர் விடுவது
கண்டு சிரிக்கிறது மனம்!

மக்களின் அறியாமையையே
மூலதனமாக்கி பணம் சேர்க்கும்
ஆன்மிகவாதிகளின் திறமை கண்டு
சினம் கொள்கிறது மனம்!

இப்படி தினமும்
நம் எல்லாரின் மனமும்
பல உணர்வுகளை கொட்டுகிறது
நமக்கு வேறு வேலை வரும் வரை!

சனி, 22 ஏப்ரல், 2017




                                                    உலக புத்தக தின விழா

காகிதத்திற்கு  இரு பெருமை  உண்டு 
ஒன்று பணமாகவும், பு த்தகமாவும் மாறுவதுண்டு ,
புத்தகத்தை கொண்டு ஆசிரியர் பாடம் நடத்துவதுண்டு 
அதன் வாயிலாக மாணவர்கள் அறிவை பெருக்குவதுண்டு!

புத்தகம் படிப்பினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு 
படிக்காத மேதைகளும் இவ்வுலகில்  உண்டு 
அறிவை விரிவாக்கும் கருவியே  புத்தகம் 
மனிதனை  தனிமை படுத்தாத நண்பனே புத்தகம்!

சமுதாயத்தில் மக்கள் வாழ்க்கையை உயர்த்துவதும் புத்தகமே
அதிக புத்தகம் படிப்போரை  அறிவாளியாக உலகம் கருதுமே 
நமது கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றியது புத்தகமே  ,
புத்தகதினால்  சிந்தையின் வெளிப்பாடும், அறிவும்  விரிவாக்குமே ! 

நம் அறிவின் ஆன்மா புத்தகத்தில்தான் ஒளிந்திருக்கு 
மனிதனின் அறியாமையை அழிக்கும்  ஒளிவிளக்கு 
நல்ல புத்தகங்களுக்கு  என்றும் மதிப்புண்டு 
ஏப்ரல் இருபத்திமூன்றாம் தேதி உலக புத்தகமாக கருதுவதுண்டு !


ரா.பார்த்தசாரதி

 
 
 
 

 


.

புதன், 19 ஏப்ரல், 2017

அம்மா



                    அம்மா 

அ  என்பது  உயிரெழுத்து 
ம்   என்பது  மெய்எழுத்து 
மா  என்பது  உயிர்மெய் எழுத்து 

உனக்கு உயிரும், உடலும் தந்தவள் அம்மா 
உனக்கு முகவரி அளித்தவளும்  அம்மா
உலகை எனக்கு நீ  காட்டினாய் 
உனக்கு என்ன நான் தருவேனோ !

உனக்கு ஆயிரம் கவலைகள் இருப்பதாக தெரியும் 
இதுவெல்லாம்  என் புன் சிரிப்பாலே  மறையும் 
தொப்புள் கோடி  உறவானதே 
தொட்டிலில்  ஆரம்பமானதே 

அம்மா என் ஆசை  அம்மா 
நான் கேட்காமலே முத்தம் கொடுப்பாய் அம்மா 
தோளை  தூளியாக்கி உன் இனிய குரலால் தாலாட்டுவாய் 
உன் மடியினை தொட்டிலாக்கி என்னை தூங்க வைப்பாய் !

அம்மா  என்றும்  அன்பின்  உருவமானாய் 
எனக்கு நிழல் தரும்  குடையானாய் 
எனது கண்கண்ட  தெய்வமானாய் 
தியாகத்தின்  உருவமானாய் !

அம்மா  என்றாலே கருணையின் வடிவம் 
அம்மா இல்லாத  அனாதைகளுக்கு ஆண்டவனே அம்மா !


ரா.பார்த்தசாரதி

 
 
     .

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

Venkatesanin Seemantha Vazhthu Madal




இடம்: சீடகோ நகர்                                                           தேதி: 17-04-2017

                             வெங்கடேசனின் மனைவி லக்ஷ்மிப்ரியாவின் 
                               பூச்சூடடாலும், சீமந்த வாழ்த்து மடல்


 இறைவனுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

  வெங்கடேசனின் மனைவி  லக்ஷ்மிப்ரியாவிற்கு இன்று   பூச்சூட்டல்!
  வெங்கடேசனின்   அன்பு மனைவியாம்
  பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
  வில்லிவாக்கம் சீடகோ நகரில் இனிதே வெங்கடேசனுடன்  வசிப்பவளாம் !  என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
 லக்ஷ்மிப்ரியாவை நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (லக்ஷ்மிப்ரியா ) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(லக்ஷ்மிப்ரியாவை ) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி

சனி, 8 ஏப்ரல், 2017

பண்பாட்டு மயக்கம்







                                                         பண்பாட்டு  மயக்கம்


     மேலை நாட்டு   பிசாவும், பெர்கரும்   நாகரிக உணவானதே 
     நம் சாப்பாட்டு  மேசைக்கு இறங்கியது விரும்பியசிற்றுண்டியானதே 
     உடல்நலம்  கெடுவதை நாம் அறியாமல் இருக்கின்றோமே 
    இயற்கை உணவு சிறந்தது என அறிந்தும், தவிர்க்கின்றோமே !

    ஆணும்,பெண்ணும்,   அறிமுகத்தில்  கைகுலுக்கின 
    பயமின்றி இரவு நேரங்களில் கூடிப் பேசுகின்றன 
    நகரின் மது கடையில் சேர்ந்து கும்மாளமிடுகின்றன 
   இரவு நேர பணிகளில் ஆபாச பேச்சுக்கள் மிளிர்கின்றன !

   ஒருவர்க்கொருவர்  மரியாதையின்றி  டா  போடுதல் 
    கேட்டால், தெரிந்தவர்,  சிநேகம்  என சொல்லி மழுப்புதல் 
   பணத்திற்காக, பகடைக்காயாய்  ஆணை ஆட்டிவித்தல்,
   நட்பா, காதலா ! என்ற நிலையிலே  தடுமாறுதல் !

   ஆணுக்கு நிகர் பெண் என்று நினைக்கும் பெண் 
   பேதமின்றி ஆணுடையில் நடமாடும் கோலம் ,
    கண்டதே காட்சி, கவர்ச்சியான, ஆடை அலங்காரம் 
    எங்கு முடியுமோ  இந்த பண்பாட்டு  மயக்கம் !

    ரா,பார்த்தசாரதி
    

    
      

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

Ilamaiyin Kelvi



                                                    இளமையின்  கேள்வி 

                     என் இளமையின் கேள்விக்கு  என்ன பதில் 
                    அழகிய காதல் தேவதையே நீயோ என் எதிரில்,
                    என் தேவைகள் குறைவாய்  இருந்திடுமே 
                    நின் அழகே  என் மனத்தைக் கவர்ந்திடுமே !
                    நீ ஆயிரத்தில் ஒருத்தி  என்பதை நானறிவேன் 
                   என் ஒவ்வொரு அணுவின் உணர்வும் சொல்லிடுதே 
                   உன் எழிலை என் மனம்  சொல்லிடாதா 
                   காலம் கடந்தாலும், நம்மை வாழ வைத்திடாதா !

                  காதலிக்கும் போது  அவசரம் ஆகுமா 
                  பூத்து குலுங்கும் விழிகள் காத்திருக்குமா,
                  காதல்  என்பது இரு விழிகளின்  நேசமா 
                 அதுவே அவர்கள் கண்ட காதல் தேசமா !

                 காதலுக்கு பொருள் விளங்காமல் தவித்தேனே 
                 பூமழை மேனியாய் பொழிவதைக் கண்டேனே 
                காதலின் பார்வை  புதிரா !  புதினமா !
                என் நெஞ்சை சுற்றிவரும் ராட்டினமா !

                 தாமரை இதழ் போன்ற உன்  வதனமே 
                 உன் முகம் நீரில் தெரியும் சந்திர பிம்பமே 
                காதலில்  தாமதம் செய்து என் பொறுமையை சோதிப்பாயா 
                தாமதம் செய்யாமல் என்னை  மகிழ்விப்பாயா !

                ரா.பார்த்தசாரதி