புதன், 8 மார்ச், 2017

குமாருக்கு கவியாஞ்சலி

                                                     
  தோற்றம் :24-07-1953                          ரா. குமார்                        மறைவு: 25-02-2017
                                                               காவியாஞ்சலி 


           மனிதன் பிறந்தவுடன் அழுது அன்னையை அழைக்கின்றான் 
           மனிதன் இறந்தவுடன் உற்றார், உறவினரை அழ வைக்கின்றான் !

           தன் பின்னால் வந்ததாலே தம்பி ஆனாய் 
           தம்பி என்றாலே தன் கைகொடுத்து உதவும் தகமையாளன். 

           தன்னலங்கருதாது பிறர்க்கு உதவி செய்தாய் 
           அன்பிற்கும், பாசத்திற்கும் பாலமாய் இருந்தாய் !

           அன்பு தம்பியே, செங்கையில் பிறந்து சென்னையில் மறைந்தாய் 
           இவ்வுலகில்  உறவிற்கும், நட்பிற்கும் உதாரணமாய் திகழ்ந்தாய் !

           பள்ளியிலும், கல்லூரியிலும்    முதன்மையாய் விளங்கினாய் 
           படித்த பள்ளிக்கு நன்கொடை வழங்க ஏற்பாடும்  செய்தாய் !

           நேரம் பாராமல் உழைக்கத்   துணிந்தாய் !
           ஓய்வுஎடுக்காமல் உன் உடல்நலத்தை மறந்தாய் !

           வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த குமார் எனும் ஆடவனே 
           எல்லோர் நெஞ்சத்திலும் நிலையாய் நின்றவனே !

           நல்மனம் கொண்டு நற்செயல் பல புரிந்தாய் 
           இறந்த பின்னும் இரவா புகழ் அடைந்தாய் !

          உன்னைப்  பற்றி  உனக்கே தெரியாது 
          உன் அருமை,பெருமை எம்மக்கே தெரியும் !

          கோபமாக பேசினாலும்,குணத்தில் குன்றாய் விளங்கினாய் 
          கிராமத்து மக்கள் கும்பிடும் தெய்வமானாய் !

          பக்தியின் மேன்மையை அகத்தே என்றும் கொண்டாய் 
          பரமனின் திருவடியை விரைந்தே  அடைந்தாய் !

          நீ செய்யும் பூஜைகளையும்,சேவைகளையும் இனி காணமுடியுமா
          இறைவனே உன் சேவை கண்டு தன்னிடம் அழைத்துக்கொண்டானா!

          கடினமாய் உழைத்தகணவன்  எங்கே என,
          நினைத்து ஏங்கும்  கீதாவை எங்ஙனம் தேற்றுவோம் !

          இருந்தபோது மனிதனை யாரும் புகழ்வதில்லை 
          இறந்தபின் யாரும் புகழாமல் இருப்பதில்லை!

          நெருநல்  உளன் ஒருவன் இன்றில்லை எனும் 
          பெருமை  உடைத்திவ் வுலகு .  என்பது வள்ளுவன் வாக்கு 


          ரா.பார்த்தசாரதி  

            

             
                         

               



               
               

              

               

               

              

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக