வெள்ளி, 24 மார்ச், 2017

உதிரிப்பூக்கள்



                                                  உதிரிப்பூக்கள் 

 இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்
 மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்
யாரோ இறந்ததிற்கு  எங்களை மிதித்து கொல்கின்றனரே
மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !

நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை
எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை
உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !
எங்களை சூடியவர்களும்  அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி ! 

மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்
அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக  அலங்கரிக்கின்றோம்
பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்
எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய்  பூசுகிறார்கள் !

பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து  பூமாலையாகிறது
சேர்த்து வைக்கும்  நாறுக்கு என்றும்  மதிப்பில்லை
 உறவையும், நட்பையும் அறியாதவனுக்கு உயர்வில்லை 
நல்லதிற்கும், கெட்டதிற்கும் பயன்படுகிறோம் என்று அறியாமலில்லை!

முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்  
காகித பூவிற்கு தரும் கவர்ச்சி  எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை
எங்களை மிதிப்பவர்களே  நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை
நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று  எவருமறியவில்லை

ரா.பார்த்தசாரதி







சவம் சென்ற சாலை...
சிதறிக் கிடந்த
பூக்களின்
முணுமுணுப்பை
எந்த கால்களும் கேட்கவில்லை...
யாரோ இறந்ததற்கு
எங்களை ஏன்
கொன்றீர்கள் என்பதை!

உங்களுக்கு மணமானாலும்
நீங்கள் பிணமானாலும்
நோயானாலும், குணமானாலும்
ரணமாவது நாங்கள் தான்!

பாலியல்
தொழிலாளியின்
தலையில்
அழகாகிறோம்!

அரசியல்வாதியின்
கழுத்தில்
அழுக்காகிறோம்!

எங்கள் வர்ணங்கள்
வேறு என்றாலும் அதில்
ஜாதி கிடையாது
எங்கள் நறுமணம்
நூறு என்றாலும் அதில்
போலி கிடையாது!

எங்களை மதிக்காமல்
மிதிப்பவர்களே...
நீங்கள் இறந்தால் மீண்டும்
பிறப்பதில்லை!

நாங்கள் உதிர்வதே
மலர்வதற்குத்தான்!

செவ்வாய், 21 மார்ச், 2017

லட்சுமி ஷ்ஷடியப்தபூர்த்தி வாழ்த்து மடல்




 

                        திரு. பாஸ்கரன் ஷ்ஷடியப்தபூர்த்தி   வாழ்த்து மடல்

இடம்:அகிலாண்டேஸ்வரி சமேத                                    தேதி :31-03-2017

             ஸ்ரீ  ஜலகண்டேஸ்வரர் கோவில்,
             வேலூர்                                                                                                                                                                              
 ஸ்ரீ  கரதூஷணப் பெருமாள் துணையுடன்,அகிலாண்டேஸ்வரி சமேத 
 ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அருளோடும்   ஓர் ஷ்ஷடியப்தபூர்த்தி விழா 
 திரு.பாஸ்கரனுக்கும்,திருமதி லட்சுமிக்கும் நடைபெறும் மணி விழா

 அகவை அறுபதும், எண்பதும்  என்றும் சிறப்புடையந்தன்றோ 
 இரு மகன்கள் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ

 ஷ்ஷடியப்தபூர்த்தி என்பதே அகவை அறுபத்தின் நிறைவாகும் 
 உற்றார், உறவினர்களின்   வாழ்த்துக்கள் நிறைந்ததாகும் 
அகிலத்தில் சிறந்தது தாய், தந்தையினரின்  வாழ்த்தாகும் ! 

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தாங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !



கணவன்  என்றாலே (கண் + அவன் ), கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !


.முதுமையை  இளமையாக்கி தினமும்,நடைப் பயிலுகின்றார்  
ஓய்வு பெற்றாலும், உடல்நலத்தையும் கடைப்பிடிக்கின்றார் !

ஐந்தெழுத்தில் ( பாஸ்கரன் )என்றும் மூன்றெழுத்து அடங்கும் 
லக்ஷ்மி (மூன்றெழுத்து) என்ற பெயரும் இதில் அடங்கும் !

திருமதி ஒரு வெகுமதி  என்று கூறுவது  வழக்கம் 
திருமதியின் பெயரோ லக்ஷ்மி என்றழைப்பது பழக்கம் !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் தவிர்க்க  முடியாது  நட்பும், உறவும்!


 அன்பும், அறனுமுடைத்தாயின்  இல்வாழ்க்கை 
பண்பும்  பயனும்  அது. என்பது  வள்ளுவன் வாக்கு !

  ரா.பார்த்தசாரதி




வாசுதேவன் மணிவிழா




Conversation opened. 1 read message.




.                                                

திருமதி விஜயலக்ஷ்மி வாசுதேவன்                                இடம்:                            திரு. வாசுதேவன் வீரராகவன்                                       குருவாயூரப்பன்                                                                  
                                                                                            ஆஸ்திக சமாஜம் 
                                                                                             நங்கநல்லூர் 
                                                                                             சென்னை -600 061                                       
                                                                                 தேதி : 19 அக்டோபர் 2016            
                                  ஷ்ஷடியப்தபூர்த்தி   வாழ்த்து மடல்

 அலமேலுமங்க தாயார்,வெங்கடாசலபதியின் அருளால் ஒரு மேடை 
 இன்று நங்கநல்லூரில் திரு வாசுதேவனின் ஷ்ஷடியப்தபூர்த்தி மேடை
 
.தந்தையும், மகனும் ஒரே நக்ஷ்த்திரம் (ரோகிணி) அமைவது சிறப்புடையதே,
தந்தைபோல் மகனும் சிறப்படைவான் என ஆகமநூல் கூறுகின்றதே !

 பத்மா, வீரராகவன் (லேட்) ஐந்தாம் மகனாய் தோன்றிய வாசுதேவனே
 என்றும் சென்னையில்  வளம்பெற்று வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

அகவை அறுபதும், ஆயிரம் நிலவு காண்பதும் சிறப்புடையந்தன்றோ 
 தவப்புதல்வன், கோகுல் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ


 ஷ்ஷடியப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதும் ,பெறுவதாகும் 
 அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசிர்வாதமே  ஆகும் !

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !



கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !


வேலையும் செய்துகொண்டே  மற்றும் பகுதிநேர நடுவராய் (கிரிக்கெட்டில்) இருந்து நற்பெயர் பெற்றாய்,
ஒரே  மகன் நன்கு படித்து, நல்ல வேலையும் கிடைக்கப் பெற்றான் !

பிறந்த வீட்டின்  குலம்  காக்கவேண்டும் 
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் தவிர்க்க  முடியாது  நட்பும், உறவும்!



  ரா.பார்த்தசாரதி  ( பாச்சு )



திங்கள், 20 மார்ச், 2017

8 க்குள் ஒரு யோகா !!!





                         
8 க்குள் ஒரு யோகா !!!
************************
"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".
நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.
சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.
சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.
நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.
இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.
இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.
காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கும்!
***********************************
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.
இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் , நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும் .
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம் 42 நிமிடம் !!
1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!
2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,!!!!
3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!
4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!
5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,
6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!

ஞாயிறு, 19 மார்ச், 2017

வாழ்க்கை வாழ்வதற்கே!





                       

                 வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை  வாழ்வதற்கே , வாழ்க்கை  அனுபவம் பெறுவதற்கே 
அவசரமாய்  வாழ்ந்து , பின் இறப்பதற்கு இது என்ன ஓட்ட பந்தயமா 
பரபரப்பை  கொஞ்சம் ஒதுக்கி, மனம் திறந்து பேசும் உறவுகள் 
மறுபிறப்பை  எண்ணி, நிகழ்கால வாழ்வை விரயம் செய்யாதீர்கள் !

வாழ்க்கையில்  கசப்பை சுவைக்கவும், தோல்வியை ஏற்க பழகவும் 
வாழ்க்கையில்  நம்பிக்கையுடன்  மேடு பள்ளங்களை  எதிர்நோக்கவும் ,
எவ்வளவு  துன்பமும், வந்தாலும் மனம் தளராமல் இருக்கவும் 
உன் வாழ்க்கை உன் கையில்தான் என்பதை நன்கு அறியவும்


அவசரமாய் வாழ்ந்து
இறந்து  போவதற்கு
வாழ்க்கை என்ன
ஓட்ட பந்தயமா...

பரபரப்பை கொஞ்சம்
ஒத்தி வையுங்கள்
மனம் நிறைய பேச
காத்திருக்கிறது உறவுகள்!

இன்னொரு பிறப்பில்
அவ்வளவு நம்பிக்கையா
இந்த வாழ்க்கையை
விரயம் செய்கிறீர்...

கசப்பும் சுவை தான்
ருசித்து பாருங்கள்
தோல்வியும் சுகம் தான்
ரசிக்க பழகுங்கள்!

நீங்கள் தான் பிரம்மா...
சொர்க்கமா, நரகமா
எதை உருவாக்க
போகிறீர்கள்?

நிலையாமை!




                       நிலையாமை!

சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக  ஏற்பட்ட உறவுகள் 
அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்
உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!
துன்படும்போது, உறவும், நட்பும்  கண்டுகொள்வதில்ல
நேற்று இருந்தவன்  இன்று இல்லை 
என்ற பெருமைதான் மனித வாழ்க்கை 
நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன் 
வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?

பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும் 
சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும் 
கட்டிக்காத்தவன் போகும்போது கொண்டு செல்ல முடியுமா 
யார்  அனுபவிக்கிறார்கள்  என பார்க்கமுடியுமா ?

வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,
உயர்வு,தாழ்வு  பகலிரவு போல் இருப்பதுண்டு 
தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல்  ஆனதே
தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே

பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள் 
இவை எல்லாம்  காலம் தின்று  அழித்த  இடங்கள் 
மிஞ்சியவைகள்  இன்று சுற்றுலா  தலங்களே 
நமது சிறப்பைக்  காக்கும் அடையாள ஏடுகளே !

இறைவா புகழ்  பெற்று வாழ்பவர்கள்  உண்டு 
செருக்கடைந்தவர்கள்  சேற்றில் புதைந்தவர்களுண்டு 
மாற்றங்கள் நிகழ்வதுண்டு,மாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பதுண்டு, 
நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக 

ரா.பார்த்தசாரதி



                                                      வேலி  தாண்டிய காற்று

     மனிதன் வாழ்க்கையில்   எதற்கெல்லாமோ வேலி  போடுகின்றான்
    குற்றங்களை மறைக்க தனக்குத்  தானே வேலி போட்டுக்கொள்கின்றான்
    அடக்கமான பெண்  கற்பு எனும்  வேலியை தானே போட்டுக்கொள்கிறாள்
     தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !

    காற்றுக்கு என்ன  வேலி,  காதலுக்கு ஏது  தோல்வி !
    காதலியின் கண்பார்வையே  காதலுக்கு  வேலி
     பூங்காற்றாய்  மாறிவிடு, புன்னகையால் வென்றிடு
     என் ஜீவன்  வாழ்ந்திட  வாழ்த்துக்கள் சொல்லிவிடு!

    காதலினை  தடை  செய்ய ஏது  முள்வேலி ?
    காதலன்,காதலி இடையே ஏது  இடைவெளி
   காதல் இல்லா  வாழ்க்கை  வீணாய்  போகும்
    மெய்யான காதல் ஒன்றே வாழ்வை மேன்மையாக்கும் !

   பயிருக்கு  பாதுகாப்பு வேலி, காதலுக்கு பாதுகாப்பு நம்பிக்கை
   காற்று வெளிதனில்  காதல் என்பது ஓர்  ஒத்திகை
   வேலியே பயிரை மேய்யுமா, காதல் உயிர் மூச்சாய் இருக்குமா
 வேலி  தாண்டிய  காதல், நிலைப்பெற்று   இருக்குமா !

   ரா.பார்த்தசாரதி
   

   

        



                                                     உரைத்திடும் உண்மைகள்

          நடந்து திரிந்தால் நலனுன்னைச்  சேரும்
           கிடந்தால், படுத்தால் பாயும் பகையாகும்

            தினமும் பழங்களை உண்டால் பலன்னுனை சேரும்
             அதிகாலை எழுந்து நல்ல காற்றை,சுவாசித்திடு

              பயிற்சிகள்  செய்தால்,  உயர்ச்சியைத் தொடுவாய்
              அயர்ச்சி அடைந்தால்  முயற்சியினை விட்டுவிடுவாய் !

              தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்த்திடுவாய்
               வளர்ச்சியினை நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

                போதனை கேட்டிடல்  சாதனை  ஆகுமே
                 வேதனை             
            
..

போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே
மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

இறைவனை எண்ணினால்
இன்புடன் வாழலாம்
குறையெலாம் அகன்றுநீ
நிறைவுடன் வாழலாம்
கறையுடை மனத்தினை
காணாமல் செய்திடில்
உலகினில் உன்னதம்
உன்னுளே உதித்திடும் !


புதன், 8 மார்ச், 2017

குமாருக்கு கவியாஞ்சலி

                                                     
  தோற்றம் :24-07-1953                          ரா. குமார்                        மறைவு: 25-02-2017
                                                               காவியாஞ்சலி 


           மனிதன் பிறந்தவுடன் அழுது அன்னையை அழைக்கின்றான் 
           மனிதன் இறந்தவுடன் உற்றார், உறவினரை அழ வைக்கின்றான் !

           தன் பின்னால் வந்ததாலே தம்பி ஆனாய் 
           தம்பி என்றாலே தன் கைகொடுத்து உதவும் தகமையாளன். 

           தன்னலங்கருதாது பிறர்க்கு உதவி செய்தாய் 
           அன்பிற்கும், பாசத்திற்கும் பாலமாய் இருந்தாய் !

           அன்பு தம்பியே, செங்கையில் பிறந்து சென்னையில் மறைந்தாய் 
           இவ்வுலகில்  உறவிற்கும், நட்பிற்கும் உதாரணமாய் திகழ்ந்தாய் !

           பள்ளியிலும், கல்லூரியிலும்    முதன்மையாய் விளங்கினாய் 
           படித்த பள்ளிக்கு நன்கொடை வழங்க ஏற்பாடும்  செய்தாய் !

           நேரம் பாராமல் உழைக்கத்   துணிந்தாய் !
           ஓய்வுஎடுக்காமல் உன் உடல்நலத்தை மறந்தாய் !

           வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த குமார் எனும் ஆடவனே 
           எல்லோர் நெஞ்சத்திலும் நிலையாய் நின்றவனே !

           நல்மனம் கொண்டு நற்செயல் பல புரிந்தாய் 
           இறந்த பின்னும் இரவா புகழ் அடைந்தாய் !

          உன்னைப்  பற்றி  உனக்கே தெரியாது 
          உன் அருமை,பெருமை எம்மக்கே தெரியும் !

          கோபமாக பேசினாலும்,குணத்தில் குன்றாய் விளங்கினாய் 
          கிராமத்து மக்கள் கும்பிடும் தெய்வமானாய் !

          பக்தியின் மேன்மையை அகத்தே என்றும் கொண்டாய் 
          பரமனின் திருவடியை விரைந்தே  அடைந்தாய் !

          நீ செய்யும் பூஜைகளையும்,சேவைகளையும் இனி காணமுடியுமா
          இறைவனே உன் சேவை கண்டு தன்னிடம் அழைத்துக்கொண்டானா!

          கடினமாய் உழைத்தகணவன்  எங்கே என,
          நினைத்து ஏங்கும்  கீதாவை எங்ஙனம் தேற்றுவோம் !

          இருந்தபோது மனிதனை யாரும் புகழ்வதில்லை 
          இறந்தபின் யாரும் புகழாமல் இருப்பதில்லை!

          நெருநல்  உளன் ஒருவன் இன்றில்லை எனும் 
          பெருமை  உடைத்திவ் வுலகு .  என்பது வள்ளுவன் வாக்கு 


          ரா.பார்த்தசாரதி