புதன், 7 டிசம்பர், 2016

பணத்தின் மறுபக்கம்




                                                  பணத்தின் மறுபக்கம்

             பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்மில்லை
             அருள் இல்லார்க்கு  அவ்வுலகம்  இல்லை .

             ஒருபக்கம் மனிதன் பணத்தை தேடி அலைகிறான்
             மறுபக்கம்  ஊதாரித்தனமாக பணத்தை செலவழிக்கின்றான்

            பணம் வாழ்க்கைக்கு தேவை, அதுவே வாழ்க்கையாகாது
             பணம் இருப்பவனுக்கு குணம் இருக்காது

             காதலன் அன்று ரோஜாவை காட்டி காதலை வெளிப்படுத்தினான்
             இன்றோ காதலன் பர்ஸை காட்டினால்தான் காதலி காதலிக்கின்றாள் !

             பணத்தை தேடுபவன் மனஇறுக்கமும்,நிம்மதியின்றி தவிக்கின்றான்
             பணமில்லாதவன் சமூகத்தில் தாழ்ந்தவனாய் காட்சியளிக்கின்றான்

             பணமே  எல்லாவற்றிற்கும் ஆதாரமாய்  காணப்படுகின்றதே
             பணமின்றே எதையும் நம்மால் செய்ய முடியாமல் தவிக்கின்றதே

             பணம் செல்லாமல் இருந்தபோது, மக்கள் பட்ட பாட்டை
             அரசாங்கம்  கருத்துவதோ கருப்புப்பண  வேட்டை

             பணப்புழுக்கம்  இல்லாமல் மக்களின் திண்டாட்டம் ஒரு பக்கம்
            அரசாங்கம்  கருப்பு பண வேட்டையோ நடத்தியது மறுபக்கம் !

             காசேதான் கடவுளப்பா ! இது மனிதனுக்கும் தெரிந்ததப்பா !
             கைக்கு கை மாறும் பணமே, உன்னை கைப்பற்ற நினைக்குத்தப்பா !

             பணமிருந்தால்  சொந்தமில்லாதவை கூட  சொந்தமாகும்
             பணமில்லையென்றால் சொந்தமும் உறவும், விலகி போகும்
                

             ரா.பார்த்தசாரதி

             
             

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக