கறுப்பு பணம்
இந்திய பிரதமர் கறுப்பு பணம் நீக்க அதிரடி வழி கண்டார்
அதிகம் புழங்கும் ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட் டுக்களே
கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கே திண்டாட்டம்
ஏழை, நடுத்தர மக்களுக்கோர் சில நாட்களே திண்டாட்டம் !
பணவீக்கமும், கறுப்பு பணத்தினால் ஏற்படுகின்றதே
விலைவாசிகள் அதிகமாகி மக்களை தடுமாற செய்கின்றதே
அதிக பணம் கொடுத்து குறைந்த பொருள் வாங்கப்படுகின்றதே
பல ஆண்டுகள் கறுப்பு பணத்தால் வளர்ச்சி தடை பட்டதே !
பல கோடி ரூபாய்கள் குவிலாக்கி எரிக்கப்படுகின்றதே
நல்ல உள்ளம் கொண்டவர்களால் இலவச உணவு அளிக்கப்படுகின்றதே
மக்கள் படும் துன்பத்தை கண்டு அரசும் ஆவண செய்கின்றதே
பணம் பதுக்குபவர்களுக்கு இது ஒரு சாட்டையடியானதே !
கறுப்பு பண ஒழிப்பால் லஞ்சமும் சற்றே கட்டுப்படுமே
உண்மை விலை நிர்ணயித்து பொய்யான விலை தவிர்க்கப்படுமே,
பொருள்களின் விலைகள் சற்றே கட்டுப்பாட்டிற்குள் வருமே
நல்லவை நடக்க சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டுமே !
கறுப்பு பண ஒழிப்புக்கு மக்களும் உதவ முன் வரவேண்டும்
இவைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு என எண்ணவேண்டும்
நாட்டில் கறுப்பு பண முதலைகளை அடையாளம் காட்டவேண்டும்
அரசுடன் ஒத்துழைத்து நாமும் உதவிக்கரம் நீட்டவேண்டும் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக