எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:
சதாபிஷேகம்
என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை
வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர
தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம்
செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி
பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை
கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது
விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து
அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது
ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில்
என்று பார்ப்போம்.
சாஸ்த்ரக் கணக்கு:
விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய
ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற
வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்)
பின் வருமாறு உள்ளது.
“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”
ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர்
ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ
சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.
“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||
மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு
5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட
நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32
அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).
விஞ்ஞானக் கணக்கு:
இரு
பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6
நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256
=29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு
பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில்
சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.
துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81
வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம்.
திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம்
பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி)
ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம்
ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம்
செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம்.
இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.
(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப்
புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி
எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா
என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ
வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)
சதாபிஷேகச் சிறப்பு:
த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண
பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை
வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை
வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ
வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||
நித்யான்ன
தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான
ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின்,
அதிதிக்கு அன்னமிடுபவன்.
தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.
வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்
மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை,
அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி
திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க
வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது
கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம்
முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின்
வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம்.
சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும்
ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை
முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில்
நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை
அனுஷ்டித்தனர்.
பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.
இந்த
ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற
சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.
சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:
1. ரக்ஷ£பந்தனம்:
சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு
ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும்.
அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.
2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன்
தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக
ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன்
சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8.
கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா
(நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி
(தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த
பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும்.
இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில்
புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப
கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும்
ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப
தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம்
செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த
விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி
அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி
ராஜோபசாரங்கள் செய்யவும்.
10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல்
முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108
ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும்.
ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ
ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.
12.
கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும்
சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம்,
நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய
தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த
வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம
வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை
நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து
மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக்
கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த
ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி
தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே...,
யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும்
தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி
ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...”
என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய
ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை
அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால்
ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும்.
கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த
மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ
கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே”
என்று
பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:”
என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும்.
14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும்.
த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார
வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து
சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு
நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம்
சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க
வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம்,
புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும்
ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம
தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான
கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம்,
வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும்
இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை,
காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.
18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது.
மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு
கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி
மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக்
கொண்டாட்டம்!!
19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24.
சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும்.
இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம்
பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க)
அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்)
வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு
வரலாம்.
26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27.
ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர
தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய
ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர
சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும்
கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு
பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி
வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும்
முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில்
கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும்.
சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி
கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு
வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர
சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம்,
காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர
கீர்த்தனை பாடலாம்.
கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:
81 வயதில் 1000
பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன்,
பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ
புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை
(பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும்.
இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய
ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு
விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப்
பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு
புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.
சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||
ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||
ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||
சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||
நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்
இறைவன்
அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக
தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை
நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும்.
கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம்.
வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி
என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல்
செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம்
வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற
5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக)
ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.
ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.