ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மகனும் தாயும்




                                                         மகனும் தாயும்

பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய்

தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும் !

உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !


அம்ருதாவின் பூச்சூட்டல்/சீமந்தம்

                                         

                                           அம்ருதாவின் பூச்சூட்டல்/சீமந்தம் 


இறைவனுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

விவேக்கின் மனைவி அம்ருதாவிற்கு  பூச்சூட்டல்!
விவேக்கின்   அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
மெல்போர்னில் இனிதே விவேக்குடன் வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
அம்ருதாவை நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (அம்ருதா) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(அம்ருதாவை) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி

  


 

அவனவன் வாழ்க்கை



                                                    அவனவன் வாழ்க்கை 

மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?
வீழ்ந்தபின்தான்  அதன்  விதி என்னவென்று  தெரிகிறது,
ஆற்றில் விழுந்தால்  அனைவரது தேவையை தீர்க்கும்,
சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!

பூக்கும் மலருக்கு தெரியுமா,  சேருவது மணமலையா, மரணமாலையா?
அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,
மணமலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது 
மரணமலையானால், மிதிபட்டு மக்கி நாசமாய்  போகின்றது !

மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான் 
மாபெரும் புகழுடன் சான்றோர்  போற்ற வாழ்கின்றான் 
மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான் 
மிகுந்த வேதனைக்கு  ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !

மனிதனின் பிறப்பை  கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?
மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச்  சேர்ந்ததா ?
அவன் பிறந்த ஜாதகத்தினால் வீதி  கணிக்கப்படுகிறதா ?
அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?

ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

திருமண நாள்



                                                             திருமண நாள்



உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ
இலத்தரசனும், அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் .

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி / கமலா பார்த்தசாரதி

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இஷானின் ஆயுஷ் ஹோம வாழ்த்து மடல்



                              இஷானின் ஆயுஷ் ஹோம வாழ்த்து மடல் 

இடம் : ராஜா அண்ணாமலைபுரம்                                    தேதி:  23 -08-2016

 சென்னை  உட்ஸவ்  ஹாலில் குழந்தையின்  ஓராண்டு  நிறைவு விழா
ஸ்ரீநாத், மோனிக்காவின்  மூத்த மகன் இஷானின் ஆயுஷ் ஹோம விழா !

தாயே விளை  நிலமாம் , தந்தையே  வித்தாம்
மாடபூஷி  குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம்!

முதல் ராசி, முதல் நட்சத்திரத்தில்  இஷானுக்கு பிறந்தநாளாம்,
கொள்ளு தாத்தா பெயரை (கோதண்டராமன் ) பெற்ற பேரனாம் !


எல்லா  குழந்தைகளும் உலகில் பிறக்கையில் நல்லவர்களே ,
நல்லவராவதும், தீயவராவதும்,  தாய்,தந்தையின்  வளர்ப்பினிலே !

ஆஸ்திக்கு ஒரு மகன், ஆசைக்கு ஒரு மகள் என்பது அந்தக்காலம்,
ஆண்  மகன், பெண் மகள் இரண்டுமே சமம் என்பது  இக்காலம் !


மூன்று எழுத்திற்கு என்றும் ஓர்  சிறப்புண்டு
முத்தமிழ்  என்ற பெயருண்டு

ஸ்ரீநாத், மோனிகா,  இஷான் மூவருக்கும் மூன்று  எழுத்து
தந்தை, தாய் , மகன்   மூவருக்கும்   மூன்று எழுத்து !

விழா என்றாலே உற்றார், உறவினர் வாழ்த்துக்கள்  நிறைந்ததே
அகிலத்தில் சிறந்தது, தாய் தந்தையர்  வாழ்த்தே !

ஸ்ரீநாத், மோனிகா மற்றும் இஷானையும் வளம் பெற வாழ்த்துவோம்
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, விருந்துண்டு மகிழ்ந்திடுவோம் !


ரா.பார்த்தசாரதி

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்




                                            சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

எழுபது  ஆண்டுகள் சுதந்திர  காற்றை சுவாசித்தோமா 
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து சொல்கின்றோமா 
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா 
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா !

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
அந்தமான்,   மற்ற சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி