வியாழன், 25 பிப்ரவரி, 2016

திருமணம் என்றால் ..................................




 திருமணம்  என்றால்

                    திருமாங்கலியத்தில்   9 (ஒன்பது ) இழைகளின்  தத்துவம்  
1.  உள்ளத்தை  உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  2.  மேன்மை  3. ஆற்றல்    
4.  தூய்மை   5. தெய்வீக  குணம்   6. உத்தமமான குணம்  
7.விவேகம்   8.  தன்னடக்கம்   9. தொண்டு.
==================================================================

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த
                                               வீட்டிற்கு.
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது
                                                    புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு –          தெய்வத்திற்குப் பயந்தவள்
=================================================================

தாலி :                 தாலியே பெண்டிற்கு வேலி .
                               தாயாகி தாலாட்டு பாட கணவன் தரும் பரிசு .
கூரை புடவை/ மாங்கல்ய தாரணப் புடவை 
                                மணமகள், திருமகளாய் விளங்குவதற்கும், கற்பையும் 
                                 குலத்தை  காக்கவும்  புடவை உடுத்தப்படுகிறது
  
தோடு:               எதையும் காதோடு  போட்டுக்கொள், வெளியே சொல்லாதே.
மூக்குத்தி :     வாசனையும், சமையல் அறியும் உத்தியும்,
                             முன்யோசனையுடன், எதையும் செய்வாயாக என்பதை
                             உணர்த்துகிறது .
வளையல் :        கணவன் உன்னை வளைய,வளைய வரவேண்டும்
                                 என்பதற்காக.
ஒட்டியாணம்:  கணவன் மனைவி  இருயிர்  ஓர் உயிராய் இருபதற்காக
                                 அணிவிக்கப்படுகிறது .
மோதிரம்:          எதிலும் உன் கைத்திறன்  காட்டுவதற்காக
                                 அணிவிக்கப்படுகிறது
மெட்டி      :          திருமணம் ஆனவள் என்பதையும், தீய சக்திகள்
                                 அவளை நெருங்காமல் இருக்க, அணிவிக்கபடுகிறது
---------------------------------------------------------------------------------------------------------------

சப்தபதி - ஏழு அடிகள் பெண்ணுடன் நடப்பது 

"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர  
  வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
--------------------------------------------------------------------------------------------------------- 
கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டியவை 

*   நல்லுறவு அனுசரித்தல்,   பரிபூரண அன்பு,
    ஒருவர் மீது ஒருவர் அக்கறை  காட்டுதல் ,
*   உயர்வு  தாழ்வு  இல்லாத  நட்பு 
*  சின்ன தவறுகள் மறந்து  கருணையுடன் நடத்தல்.
*  தேவைப்படும்போது  பாராட்டுதல்.
--------------------------------------------------------------------------------------------------------------

தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி .

திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஸ்ரீகாந்தனின் உரை நடைக் கவிதைகள்

ஸ்ரீகாந்தனின்  உரை நடைக் கவிதைகள்

மயக்கமா !  கலக்கமா !

மயக்கமா, கலக்கமா, மனதினிலே குழப்பமா ,
வாழ்கையிலே   நடுக்கமா,  துக்கமா, தெளியுமா மனசு
கொண்டு வந்தது என்ன, கொண்டு போகபோவது என்ன .
அமைதியாகுமா  மனசு, இருபத்தோ  சில காலம்
இதற்குள் ஏனோ  அகம்பாவம் உணர்ந்தாலே மாறுமா வாழ்க்கை
பலனை எதிர்ப்பார்காமலே கடமையைச்  செய்தாலே,
அமிர்தமாகும்மா   வாழ்க்கை எதிலும் அளவோடு இருந்தாலே,
இவை அனைத்தும் வாழ்க்கையில் செயல்பட்டாலே,
மயக்கமில்லை, கலக்கமில்லை , குழப்பமில்லை, நடுக்கமில்லை !
================================================================

                                     கடவுள் எங்கே ?

   பசுவின் உடலெங்கும்  பால்  இருக்கிறது
   அதன் காதை  பிடித்துத் திருகினாலும்
   அதன்  வாலை முறுக்கினாலும் பாலை பெற முடியமா !
   அதற்குரிய  காம்பிலிருந்து தான்  கறக்க முடியும் !
   அதுபோலே, கடவுள் எங்கும்,
    அவரைக் காண,   உணர,
    சரியான நேரமும், இடமும் தேவை அன்றோ !
    அதுவே    பிராத்தனைக் கூடம்
===================================================================
 
      அன்புக்கு    அடிப்பணி  அம்மணி ,
     ஆசைக்கு   போடு  மூடுபனி
      இளமையிற்  கல்வி தேவை கண்மணி
      ஈட்டியதை  காத்திடு பொன்மணி ,
      உலகம்  உன்கையில் அன்புமணி
      ஊக்கத்தோடு  செயல்படு  அங்கையற்கண்ணி
       எளிமையாய்  இருந்திடு  தினம் நீ.
       ஏறுநடை  போடு  கலைமணி
        ஐந்தில் வளைந்திடு  சின்னமணி
        ஒதுக்காதே  உணவில் பொன்னாங்கண்ணி
         ஓடாய்  போய்விடும் திருமேனி
================================================================

       ஞாயிறு  அன்று   மாப்பிளை ஊர்வலம்
        திங்கள்  அன்று  திருமணக்கோலம்
       செவ்வாய்  அன்று திருவிழாக்கோலம்
        புதனன்று  தீப்பொறிக்  கோலம்
         வியாழன் அன்று  மரண ஓலம்
         வெள்ளியன் று  சவ  ஊர்வலம்
          சனியன்று  விதவைக் கோலம்.
          இதுதானா  காலத்தின் கோலம்
====================================================================

     நண்பர்கள் பலவிதம், நல்ல நண்பன் அமைவது அற்புதம்,
     நண்பரின்  இலக்கணம் பலவிதம், நன்கு உரைப்பேன் இவ்விடம் 
     மேடுபள்ளங்கள் பலவிதம்,சமவெளியாக இருப்பது தனியிடம் 
     குற்றம் குறைகள் பலவிதம், குணத்தை போற்றுவது உயர்குணம்
     உடலாய் பழகுபவர்கள் பலவிதம்,உயிரை கொடுப்பது உயர்விடம் 
    சோதனைக்கற்கள்  பலவிதம், சாதனை கற்களாக மாற்றுவது சரித்திரம்
    உயிரைக் கொடுப்பது பலவிதம், எனக்கு அவர்களால் பெருமிதம் .
==================================================================== 

    
    தன்னடக்கம்   பகைவனையும் நண்பன்னாக்குமே,
    தற்பெருமை  நண்பனையும்  பகைவனாக்குமே ,
    மனமே அலைபோல் ஊஞ்சல்  ஆடும்  மனமே,
    மனநிம்மதியே எங்கு தேடுகின்றாய் தினமே ,
    மனம் சரியாய் இருந்தால் சொர்க்கம் தேடி வருமே 
    நாவடக்கம்  உன்னை  மனிதாக்குமே
    தன்னடக்கம்  உன்னை தெய்வமாக்குமே 
    ராம நாமமே  என்றும்  திவ்விய நாமமே 
    அனுதினம்  சொல்லிவந்தால் சொர்க்கலோகமே ! 
======================================================================
    
     ஆடி  அடங்கும்  வாழ்க்கையடா
     ஆசையில் அழியும் பொய் உடலடா 
      ஆற அமர சிந்தித்து  பாரடா 
      ஆண்டவனை  நீ தினமும் துதிபாடடா 
      ஆனந்த மயமாகும்  உன் வாழ்க்கையடா!
======================================================================== 

                                      பருவ பெண்ணே 

                    தேவையா  உடையில்  கிளர்ச்சி 
                    கிள்ளிவிடாதே  காளைகளின் காம உணர்ச்சி 
                     தவறவிடாதே  கல்வியில் முழுமுயற்சி 
                      மறந்து  விடாதே பெண்கல்வி நாட்டின் வளர்ச்சி.!
=================================================================== 

                                                     கடைசி     ஆசை   

                                        நானோ   ஆயுள்  கைதி 
                                        நாளை காலை முடியப்போகுது 
                                        நான் பார்க்கவேண்டும் என் திருமதி 
                                          நான் அடைவேன்  மனநிம்மதி 
================================================================= 
  
                                         குழந்தையாய்  வந்தவனே 
                                          குருவாயூரில்  அமர்ந்தவனே 
                                           குறையெல்லாம் தீர்பவனே 
                                            குல தெய்வமாய்  திகழும் குருவாயூர் அய்யனே !
==================================================================== 

                                          எங்கோ  ஒரு உயிர்  பிறக்குது 
                                           எங்கோ  ஒரு உயிர் பிரியுது 
                                          என்னை பெற்றதோ ஸ்ரீரங்கத்தில் இருக்குது 
                                           என்னால் பெற்றதோ ஸ்ரீநகரில் இருக்குது 
                                          என் வாழ்க்கையோ  வானில் பறக்குது 
========================================================================

                எது நிலையானது ! எது  நிலையற்றது !

                அழகும் பொன் நகையும்  நிலையற்றது 
                 அன்பும், புன்னகையும்  நிலையானது 
                  செல்வம்  என்றும் உலகில் நிலையற்றது 
                  கல்வி ஒன்றே உலகில் நிலையானது 
                   இன்ப துன்பங்கள்  என்றும்   நிலையற்றது 
                    விதி  என்பதே  என்றும்  நிலையானது 
===================================================================== 
  
                                         ஜாதிகள்   இல்லையடிப்    பாப்பா 

               ஜாதிகள் இல்லையடி பாப்பா , 
               ஜாதிகள் இல்லையடி பாப்பா 
                ஜான் வயிற்றுக்கு  உணவு இல்லையினில் 
                 ஜாதிகள் பறக்கும்மடி பாப்பா 
                 ஜான்சன்  ஹோஸ்பிடல் ஜானுக்கு தேவை O+ve இரத்த மடிபாப்பா 
                 ஜஹாங்கிர் இரத்தம் தானே சேர்ந்ததடி  பாப்பா 
                  ஆமாம், ஜாதிகள் ஆண்டவன் படைப்பில் இல்லையடிப் பாப்பா !

================================================================











1

                                                      
          
       
         
          
         
         

       
         





 

வியாழன், 11 பிப்ரவரி, 2016

காதல் அதிசயமா! ரகசியமா !



                                          காதல் ஓர்  அதிசயமா!!  ரகசியமா !!


என்னருமை  காதலியே  உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 
காதல் சிறகினை விரித்து  உன்னை நாடி நின்றேன் 
உன் அழகும், பேச்சும்  எனக்கு  மூச்சு !
 உன் வனப்பே   காணும்போது  அடங்குதே என் பேச்சு !

கவர்ச்சியினை வெளிப்படுத்தி  மனதை சலனபடுத்துகிறாய் 
என் உள்ளத்தை  கவர்ந்திழுக்கும்  காந்தமாகிறாய் 
உன் ஓரப்பார்வையில்  ஆயிரம்  அர்த்தமுண்டு 
அதிலே  மன்மத லீலைகள்  பிறப்பதுண்டு !

கண்ணும், கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே 
எண்ணும்போது  என் உள்ளம்  என்றும் பந்தாடுதே 
காதல் அழகாய் பூக்கின்றதே, சுமையாய் தாக்குதே,
இரு உள்ளங்கள் சொல்லாமல், கொள்ளாமல் ஏங்குதே !

காதல்  என்றும் ஓர்  அதிசயம்  உலகிற்கு,
காதல்  என்றும் ஓர்  ரகசியம் காதலர்க்கு ,
பதினாறு வயதினில் எல்லோர்க்கும் உண்டாகும் காதல்,
இது கல்தோன்றா, மண்தோன்றிய காலத்தே உண்டான காதல் !


ரா.பார்த்தசாரதி









என் கண்ணில் நீ இருப்பாய்

                                              என் கண்ணில்  நீ இருப்பாய்  

  சரவணன் வீட்டின் உள்ளே நுழைந்ததும், சரண்யா நாள என் மேனேஜர்
  வீட்டில் அவர் மகன் பிறந்தநாள் விழா அதற்கு இருவரையும்  வரசொல்லி
  இருக்கிறார்.உடனே சரண்யா, ஏங்க இன்று ஞாயிறுக்கிழமை, வீட்டில்
  நிறைய வேலை இருக்கு.  என் தங்கையும் இன்னிக்கு வரேன் என்று
  சொல்லி   இருக்கா . நீங்க வேண்டும்மானால் போங்க.

   இருவருக்கும்  திருமணம் நடந்து  ஆறு வருடங்கள் கழிந்தாலும்
   அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.  எந்த வீட்டிற்கு சென்றாலும்
   அங்கே   குழந்தையைப்   பத்தியே பேச ஆரம்பித்தது அவளுக்கு
    சங்கடமாகவே இருந்தது. அதற்காகவே எல்லா விழாக்களையும் தவிர்த்து
   வந்தாள்.  சரவணன்  தன்னிடம் வந்து தங்கும்படி அவன் பெற்றோர்களை
    வா என்று அழைத்தாலும், மருமகள் குணம் அறிந்து ஏதோ காரணம் கூறி
    தவிர்த்தார்கள்.  

    சரண்யா ரொம்ப பிடிவாதம், யாரையும் அண்ட விடமாட் டா ள். மாமியாரும்,
    மாமனாரும் புகை படத்தில்தான் இருக்கவேண்டும். பக்கத்தில் இருக்கக்
    கூடாது.   கல்யாணத்தின் போது மாமியாரை பார்த்தது.  அதன்பின் ஒரு
    தடவை கூட  அவர்களை தன் வீட்டிற்கு அழைத்ததில்லை.  

    யாரையும் சொல்லி குற்றம்மில்லை.  அவள் வளர்ந்த சுழ்நிலை. .அம்மா
    இல்லாமல், அப்பா அவளை ஹாஸ்டலில் படிக்க வைத்து, சரணுக்கும்,
    சரண்யாவுக்கும் ஒரே கல்லூரியில் படித்ததால் காதல் ஏற்பட்டு, அது
    திருமணத்தில் முடிந்தது.  சரவணின் பெற்றோர்  கணேசனும், நீலாவும்
    அவன் இஷ்டப்படி நடத்தி  வைத்தனர் .

    சரவணனுக்கு அம்மா அப்பாவை  பக்கத்தில் வைத்து காப்பாற்ற வேண்டும்,
  .  ஏன் என்றால் அவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்து தன்னை ஆளாக்கியப்
    பெருமை அவர்களைத்தான் சேரும். அவர்கள் நினைவாக ஒரு போட்டோ
    கூட வைத்து கொள்ளவில்லை.திருமண ஆல்பத்தில்  இரண்டு அல்லது
    மூன்று  இடங்களில் இருந்தாலும், திருமண ஆல்பத்தை தொலைத்ததால்
    அப்பா, அம்மா புகைப்படம்  ஒன்றுகூட அவனிடம் இல்லை. ஆனால், மாதா
   மாதம் பணம் அனுப்ப தவறமாட்டான்.

      ஒரு நாள் சரவணனுக்கு அதிர்ச்சி செய்தி வந்தது. அவன் பெற்றோர் தீர்த்த
      யாத்திரை செல்லும் போது, விபத்தில் இருவரும்இறந்தார்கள்.  அலறி
      அடித்துக் கொண்டு ஊருக்கு சென்றான். ஏதோ அக்கம் பக்கத்தில் செய்த
      உதவியால் எல்லா காரியங்களையும முடித்தான். சரண்யாவும் இதற்கு
      ஒத்துழைத்தாள்.

       அப்பா அம்மாவை பற்றி உறவினர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
       அவர்களை பற்றி பெருமையுடன் கூறினார்கள். இந்த மாதிரி தாய், தகப்பன்
       யாருக்கும் கிடைக்க மாட்டாங்க  என்று சரவணனிடம் கூறினார்கள்.
       சரண்யாவும், இவ்வளவு நல்லவர்களை, நாம் கைவிட்டோமே என்று
       சற்றே கலங்கினாள்.

       சரவணனின் மாமா, டேய் சரவணா இங்கே வாயேன்.  உங்க அப்பாவும்,
       அம்மாவும் தங்கள் கண்களை தானம் கொடுத்து விட்டார்கள்.   உங்க அப்பா
       உனக்கு இந்த வீ ட்டை உன் பெயரில் எழுதிவிட்டார் . நானும் இதற்கு
       சாட்சி கைஎழுத்து போட்டு இருக்கேன். என் பேரனுக்ககாவது  இந்த
       வீ ட்டை வித்து நன்றாக படிக்க வைக்கச்  சொல்லு.  இதுதான் உங்க அப்பா
       கடைசி ஆசை.

       சரவணன் அதிர்ச்சி அடைத்தாலும் , அவன் மனம் நினைத்தது, மனித
       வாழ்கையில் பணம் எட்டிபார்க்கும், பாசம் பக்கத்தில் உட்காரது என்ற
       மொழி அவனுக்கு மட்டும் பொருந்தும். இறக்கும் போது கூட தான்
       பக்கத்தில் இல்லையே என்று மிகவும் வருந்தினான்.

       பதினைந்து நாள் காரியங்களை சரிவர முடித்து இருவரும் ஊருக்கு
       கிளம்பினார்கள்.   சரவணன் வேலைக்கு ஏதோ ஒரு சஞ்சலத்துடன்
        சென்று வந்தான்.  அன்று மாலை அவன் பொது மேலாளர் ( ஜி.எம் )
        அவனை கூப்பிடு என்ன சரவணன், ஒரு மாதிரியாக இருக்கே.  எனி
        ப்ராப்ளம் ? ஏன் என்றால் அவரும் அவன் ஊரை சேர்ந்தவர். சரவணன்
        நடந்ததை விவரித்தான்.

        சரி, சரவணா நீயும், உன் மனைவியும் என்காத்தில் என் தந்தையின்
       பிறந்தநாள்.  நாங்க தெரிந்தவர்களை மட்டும் கூப்பிடுகிறோம்.
       என் தந்தையும், தாயும், இந்த வயதிலும், ஊரில் ஓர்  முதியோர்
       இல்லத்தை நடத்தியும்,சில ஏழைப்  பெண்களுக்கும், அவங்க
        மகன்களுக்கு  கல்வி, மேற்படிப்புக்கும் உதவுகிறார்கள்..இந்த
        மாதிரி தர்ம சிந்தனை அவர்களுக்கு இருப்பதல்தான் நான் என்
        வாழ்க்கையில்  முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.அவசியமா
        வந்து எங்க அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் பெற வருகின்றாயா.
        பிறகு உன் வாழ்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்  என்றார்.

        இப்போதெல்லாம் சரவணன் என்ன சொன்னாலும்,சரண்யா
        மறுப்பதில்லை. ரொம்ப மாறிவிட்டாள்.  சரண்யா எங்க ஜி. எம் வீட்டில்
        அவருடைய தந்தைக்கு பிறந்த நாள்.  வயசானவர்கள்,. அவர்களை
        நமஸ்காரம் பண்ணினால் நல்லது என்றான். சரண்யாவும் மறுப்பு  எதுவும்
        சொல்லாமள் கிளம்பினால். அவர் வீட்டிற்கு குறித்த நேரத்தில் இருவரும்
        சென்று விட்டனர்.              

        அவர் தந்தையும் தாயாரும் கருப்பு கண்ணாடி அணிந்திருந் தனர்.
        சரவணன் கேட்டான்  என்ன இந்த ராத்திரியில் அப்பா,அம்மாவிற்கு
        கருப்பு கண்ணாடியா.  இதனை கேட்ட ஜி.எம்மின் தந்தை சரவணிடம்,
        என்னக்கும் என் மனைவிக்கும் கண்   பார்வை போய்டுத்து.  கடவுள் மாதிரி
        ஒரு தம்பதியினரின் கண்களை எடுத்து எங்களுக்கு வைத்து விட்டார்கள்.
        அந்த தம்பதியர்களை  நாங்கள்,  எங்கள் தெய்வமாய் வணங்குகிறோம்
         என்றார். மேலும்  நாங்க செய்றது  எல்லாம் அவா செய்ததற்கு  ஈடாகாது.

         அதன்பின்,  அவர்கள் கேக் வெட்டும் போது  எல்லோரும் மகிழ்ச்சி
         அடைந்தார்கள் . கேக் எடுத்தவர் , கேக்கிற்கு முன் உள்ள ஒரு படத்திற்கு
         காண்பித்து பிறகு தன் மனைவி வாயில் போட்டார்.  சரவணன் கிட்ட  
         வாப்பா. நீ நம்ப ஊர் பையன். அவனும் அவர் பக்கத்தில் நின்றான். பின்
         அவர் காட்டிய தெய்வம் வேறு யாரும்மில்லை !  அவன்   தாய்,
         தந்தையரின் படம்.. உடனே அவர்கள்  காலில் விழ்ந்து நமஸ்காரம்
         செய்தான் .
     
         அந்த பெரியவரிடம் எனக்கு இந்த புகைப்படகாப்பி  தர முடியுமா?  என்று
          கெஞ்சினான் ஜி.எம்மும்  ஒரு காப்பி எடுத்து கொடுத்தார்.  என் தாய்
          தந்தை ஆசிர்வாதம் கிடைத்து  விட்டது.    நான்தான் உங்களுக்கு நன்றி
          சொல்ல வேண்டும்
.
          விருந்தை முடித்து, கோடி ரூபாய் கிடைத்தாற் போல்சரவணன் 
          போட்டோவுடன் கிளம்பினான். தன் பெற்றோரின் பார்வையே 
          அவர்களுக்கு ஆசிர்வாதம் கிடைத்ததாகவே இருவரும் எண்ணி
          மகிழ்ச்சி அடைதார்கள் . 

          சரவணனும் அவனுடைய ஜி.எம்மின்  தந்தை நடத்தி வரும்  
          முதியோர் இல்லத்தின் முகவரிக்கு மாதா  மாதம்  பணம் அனுப்பத் 
          தவறுவதில்லை .




               ரா.பார்த்தசாரதி