வெள்ளி, 27 பிப்ரவரி, 2015




                       
                                                                                   சந்தேகம்

காலை ஆறு மணி .  டேப் ரெகார்டில்  சுப்ரபாதம்  ஒலித்துக் கொண்டிருந்தது .
விஜயா  சுட சுட காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.  டீப்பா மேலே வச்சிடு போ என்றான் சிவா.

சிவா எப்பொழுதும் காலையில் . எழுந்த உடனே  அன்றைய வேலைகளை 
டைரியில் மார்க் பண்ணி ஒரு முறை பார்த்துகொள்வான்.  ஆபீசில் அவனை
ஆல்ரௌண்டெர்  என்று பெயர்.  பொது சேவையுளும் அவனுக்கு ஈடுபாடு
உண்டு.    சாலைகளில் மர நடு விழா. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து,  ப்ளட்  ஏற்பாடு ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக  மற்றும் பல.   வீட்டை விட  அவன் வெளியில் சுற்றுவதே அதிகம்.

விஜயாவிற்கு அவனிடம் பிடித்தது அவனது பொறுமை. எந்த விஷயத்திலும்  நியாயத்தை எடுத்து சொல்பவன். அப்படி பட்ட சிலவற்றை ஏன் மறைக்கின்றான்.  ஒரு பெண் , ஒரு மகன் என்ற நிறைவான குடும்பம். சனி, ஞாயிறில் வெளியே தன்னையும், குழந்தைகளையும், கூட்டி
செல்வது  வழக்கம். அவனுக்கு நாற்பது வயதானாலும், நரைக்காத தலைமயிர் முப்பதாகவே மதிப்பிட தோன்றும். அந்த அளவிற்கு உணவு கட்டுப்பாடு யோகா செய்தும்  உடம்பை  கட்டுடன் வைத்திருந்தான்.  எந்த பெண்ணும் அவன் பேச்சிற்கு வயப்படும். சில சமயம் பொறமை படுவார்கள் . இதை விஜயா காதுபட சொன்னவர்களும் உண்டு.

விஜயாதான் அவன் துணிகளையும், குழந்தைகள் டிரெஸ்ஸையும்    வாஷின் மெஷினில், போட்டு துவைப்பாள். போடும் முன் பேண்ட் பாக்கெட்டில், எதாவது இருகிறதா என்று செக் பண்ணிவிட்டுதான்  போடுவாள். 

அன்று ஞாயிறு கிழமை.  எல்லோர்க்கும் ஓர் சோம்பேறித்தனம் வரும். அவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான். அவன் செல்லில் இருந்து ஒரு வாய்ஸ் மெயில்.  பல தடவை சிவாவே செல்லை எடுக்கச் சொல்வான்.  ஏதாவது  அவசர காலாக இருந்தால் என நினைத்து கொண்டு  எடுத்தாள்.   நீங்க இல்லை என்றால் நான் இல்லை.  நான்தான் உஷா. நீங்க என்னை கண்டிப்பாக மீட் பண்ணனும் .இன்று ஈவினிங்க் நான்கு மணிக்கு.என்று வாய்ஸ் மெயிலில் ரெகார்ட் ஆகி இருந்தது. 

சிவா எழுந்தவுடன்  நிதானமாக, தன் செல்லில் உள்ள ரிசிவிங் நெம்பர்களை செக் பண்ணும் போது , உஷா அனுப்பிய வாய்ஸ் மெய்ளை பார்த்ததும் விஜயாவிடம் , எனக்கு இரண்டு, மூன்று ப்ரோக்ராம் இருக்கு. எப்படியும் ஈவினிங்க்  வந்து உங்களை அழைத்து செல்கிறேன் என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பினான்.  

இவ்வினிங்  லேட்டா வந்தான்.  ஆறு மணிக்கு வந்தவன் எல்லோரையும் அவசர படுத்தி வூட்லண்ட் ஹோட்டலில் குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தான்.  விஜயா வேண்டா வெறுப்பாக அவனிடம் நடந்து கொண்டாள் .    சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று இரவு அவளை செல்லமாக கட்டியணைக்க முற்பட்டான் . என்றும் விலக்காதவள், சீ
கையை கொண்டு வராதிங்க . நீங்களும் சராசரி ஆம்பளை  என்பதை நிருபிக்கிறங்க . சிவாவும் இன்று அம்மாவிற்கு மூடு சரியில்லை என நினைத்த தூங்கலானான் . அவனுக்குத் தெரியாது அவள் உஷாவை நினைத்து பழிவாங்குகிறாள் என்று.மறுநாள், விஜயா , அவன் துணிகளை  வாஷின் மெஷினில்,போடும்போது அவன் பேண்டில் ஒரு வண்டி டோக்கன், கூடவே ஒரு பேப்பர் இருந்தது.அவன் ஆபீஸ்க்கு போன பின் பிரித்து படித்து பார்த்தாள். அதில், ஜீவன்
ப்ளட் பேன்க் - அதில் உஷா  - அப்போலோ ஹாஸ் பிட்டல் இருதய மாற்று  அறுவை சிக்கிச்சை - ப்ளட் அரெஞ்சமென்ட் அண்ட்   பை  சிவா.
என்று எழுதிருந்தது .   

 அன்று மாலை வந்ததும் என்னங்க உங்களுக்கு பிடித்த பூரி மசாலா செய்து வச்சி இருக்கேன் .  குழந்தைகள் சாப்பிடாச்சு.  நீங்க வாங்க என்று பக்கத்தில் இருந்து கனிவுடன் அவனை பார்த்துகொண்டே பரிமாறினாள். விஜயா நான்சொல்ல மறந்தேன் நான். நேற்று  உஷா என்ற முப்பது வயது பெண்ணிற்கு நான் ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக பிளட் ஏற்பாடு செய்தேன் அந்த பெண் நேற்று டிஸ்சார்ஜ் ஆனாள்.  அவளுக்கும் நம்ப மாதிரி இரண்டு குழந்தைகள்.
பணக்கார வீட்டு பெண் .  என்னை பாராட்டி அவள் தந்தைக்கும் , கணவருக்கும் அறிமுகம் செய்தாள்.  அவள் கணவன் உடனே   எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்.  அதை அவரிடம் கொடுத்துவிட்டு சார் இதை நான் ஒரு சேவையாக செய்கின்றேன்.  இது எல்லாம் வேண்டாம் சொல்லி கொடுத்து விட்டேன் .  இதோபார் விஜயா நாம் செய்ற நல்லது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு நன்மை கொடுக்கும் என்றான்.   சிவாவின் நியாயம்,  அவள் மனதில் அவன் உயர்ந்தான், அவள் பெருமை அடைந்தாள் .  அன்று இரவு சிவா நேற்றுதான்  முரண்டு பண்ணின, இன்னிகாவது, என்று கெஞ்சும் பார்வையை புரிந்துகொண்டு அதற்குள்  உங்க இஷ்டம் என்றாள் .  சிவாவும்  ஆனந்தமாக அவளை கட்டியணத்தான்.   

ரா.பார்த்தசாரதி
------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சிரிப்பு

                                                 

                                                   சிரிப்பு  


அண்ணாந்து சிரித்தாலும்,  குனிந்து  சிரித்தாலும்,
வாய்மூடி சிரித்தாலும்,  சிரிப்பே  ஓர் மருந்தாகும் !

பெண் இனத்திற்கும், ஆண் இனத்திற்கும், பொதுவாகும்,
ஆம், வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.!

இறைவன் மனித இனத்திற்கு கொடுத்த சொத்தாகும் 
மாக்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும் 

பொம்பளைச் சிரிச்சா போச்சு,  புகையிலை விரிச்சா போச்சு,
பெண்ணே உன் வாழ்வு, இன்று என்ன ஆச்சு !

பெண்ணே  நீங்கள் வாய்விட்டு சிரிப்பதேன்?
உங்கள்  ஏழ்மை  நிலையை மறப்பதேன்!

திரௌபதி  சிரித்ததால்  வாழ்வு  சிதிலமடைந்ததா 
மாதவி  சிரித்ததால்  கோவலன் வாழ்வு முடிவூற்றதா !

சிரிக்கத் தெரிந்தவர்களே  சிந்திக்கத் தெரிந்தவர்கள் 
மற்றவர்களை  என்றும்  சிந்திக்க  வைப்பவர்கள்! 


ரா.பார்த்தசாரதி



திங்கள், 23 பிப்ரவரி, 2015

திரு. காவேரிமைந்தன்,




திரு. காவேரிமைந்தன் அவர்களுக்கு,

நான் வல்லமையாளராக தேர்வு செய்த வல்லமைக்கும் , தாங்கள் எழுதிய பாராட்டு கடிதத்திற்கும்  மிக்க நன்றி.


ரா.பார்த்தசாரதி.  

வியாழன், 19 பிப்ரவரி, 2015

அந்தமானை காண வாருங்கள்




                                            அந்தமானை  காண  வாருங்கள்

                அழகியத்  தீவு,  அந்தமான், கடலின் நடுவே அமைந்த தீவு.
                 தென்னையும், கமுகும்,ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும் தீவு.
                 இந்திய நாட்டின்  அமைதி  பூங்காவாக காணப்படும்  தீவு.
                  மனிதனுக்கு  மனஅமைதி  தந்திடும் ஓர் அமைதியான தீவு !

                  வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்,
                  கடல் அடியில் சென்று  கடல் இனங்களை காணும் மக்கள்,
                   நீச்சல் தெரியாதவன் கூட, கடல் அடியில் நடை போடுகிறான்,
                  ஆங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களை கண்டு களிக்கின்றான்!

                  சிறு படகும், இயந்திர படகும், பயணிக்கும் மக்கள்  கூட்டம்,
                  மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
   .              கடலோர கவிதைகள்  எழுத,  மனிதனுக்கோர்  கண்ணோட்டம் ,
                   காண்பதை வார்த்தையால் வடிபதே கவிஞ்சனுக்கு கொண்டாட்டம்!

                   சுற்றுலா  பயணிகள்  நாடி வரும்  தீவு,
                    இரு தீவானாலும், ஒன்றில் பழந்குடியினர் வாழும் தீவு
                   தேசத் தியாகிகள், பட்ட துன்பங்களை சித்தரிக்கும் தீவு
                    நாட்டைவிட்டு, தள்ளி இருந்தாலும், தனிமை கொண்ட தீவு.,      

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஆதங்கம்

       

                                                        ஆதங்கம் 

சிறகொடிந்த   பறவைபோல்  சம்மந்தமில்லாத  வாழ்க்கை 
ஒவ்வொருடைய வாழ்க்கை  ஆரம்பித்த இடமே வேறு ,
நதியாய் இருந்து கடலில்  என்றும் கலந்த  ஒன்று ,
நாதியற்று, உபயோகமற்று இருப்பதாகவே கருதுவது இன்று ! 

பணத்தினால் நாங்கள் தோற்றாலும்,  பாசத்தில் தோற்கவில்லை,
பாசமும், அன்பும்  இரு கண்கள் என உறவுகள் நினைப்பதில்லை 
இளமையில்  மகனையும், மகளையும் தாங்கிய  குடும்பம் ,
இன்று தனிமைப் பட்டு  பாசத்திற்காக  ஏங்கும் கோலம் !

பணம் எட்டிப் பார்க்கிறது, பாசம் தொலைவில் நிற்கிறதே,
பண்பும், பாசமும்,   பணத்தினால்  என்றும் மாறுபடுகிறதே,
நாடும்  முன்னேறியது, நாங்களும் முன்னேறினோம் 
சிறைக்கம்பி  இல்லாத  முதியோர் இல்லம் நாடினோம் !

தாயும், தந்தையும், பிள்ளைகளை  இரு கண்ணெனக்  கருதினாலும்,
ஏதோ ஒருவிதத்தில்  கருத்துவேறுபாடு  இருந்தாலும்,
என்றோ  ஒரு நாள்  திருந்தும்  நேரம்  வந்தாலும்,
அன்றிருந்த நிலைமை, இன்றைய நிலைமை  மாறுபட்டிருந்தாளும்,

பிள்ளைகளுக்கு  அயல் நாட்டு வேலை, அங்கிருக்கும் சூழ்நிலை  வேறு,
பாசமுள்ளவர்களாக  காட்டி, உடல் உழைப்பை சுரண்டுவது வேறு,
வேறு, கதியன்றி, நாங்கள் காட்டுவதோ எங்கள் இயலாமையன்றோ 
முடியாவிட்டாலும், முடிந்ததை செய்வதே எங்கள்  கடமையன்றோ !   


ரா.பார்த்தசாரதி 


வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தாயின் குணம்.


                                                  தாயின் குணம்.

சிறகு ஒடிந்த  பறவைபோல்  சம்மந்தமில்லா  வாழ்கை
ஒவ்வொருடைய வாழ்கை  ஆரம்பித்த இடமே வேறு,
நதியாய்  இருந்து  கடலில்  கலப்பதும்  ஒன்று,
நதியாய் இருந்தவர்கள் உபயோகமற்று இருப்பதும்  இன்று.

பணத்தினால் நாங்கள் தோற்றாலும், பாசத்தில் தோற்கவில்லை ,
பாசமும், அன்பும், இரு கண்கள் என உறவுகள் நினைப்பதில்லை 
சிறு வயதில், மகனையும், மகளையும் , தாங்கிய குடும்பம்,
இன்று தனிமை பட்டு உதவிக்கும், பாசத்திற்க்கும்  ஏங்கும் காலம்

பணம் எட்டிப்  பார்கின்றதே, பாசம் தொலைவில் நிற்கிறதே
பண்பும், பாசமும்,  பணத்தினால்  என்றும் மாறுபடுகிறதே .
முதலில் இருந்த நிலையை எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
நல்லதை மறந்து, கெட்டதை  மறக்க நினைப்பதில்லை.

தாய், தந்தை  பிள்ளைகளை இரு கண்கள் என  கருதினாலும்,
ஏதோ  ஒருவிதத்தில்  கருத்து  வேறுபாடு  இருந்தாலும்,
என்றோ ஒருநாள்  திருந்தும் நேரம்  வந்தாலும்,
அன்று இருந்த நிலை, இன்றைய நிலை வேறுபட்டு இருந்தாலும்,

பிள்ளைகளின் வெளிநாட்டு வேலை, சூழ்நிலை வேறாகயிருந்தாலும் 
பாசம்முள்ளவர்களாக  காட்டி உடல் உழைப்பை  சுரண்டிவந்தாலும், 
இன்று   கடைசியில்  பெற்றோர்கள் நாடுவதோ  முதியோர் இல்லம்.
முடியாவிட்டாலும், முடிந்ததை  செய்வதே ,தந்தை,தாயின்  குணம்.

ரா.பார்த்தசாரதி 

   .