புதன், 20 ஆகஸ்ட், 2014
கொசுக்களின் தடுப்பு தினம்
கொசுக்கள் ஒழிப்பு தினம்
கொசுக்களே நோய்களுக்கு காரணம்
அவற்றை அழிப்பதே நமது வேலை
அவற்றால் நமக்கு என்றும் தொல்லை
தொல்லை தரும் கொசுக்களை ஒழிப்போமா !
மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல்கள்
மனிதனுக்கு வருவதும் வித, விதமான கொசுக்களாலே,
இதனை தடுப்பதும், ஒழிப்பதும் நம் கையிலே,
அதற்காண வழிகளை மேற்கொள்வோம் விரைவிலே !
தேங்கிய நீரும், மூடபடாத சாக்கடைகளே கொசுக்களின் குடியிருப்பு,
தேவையற்ற பொருள்களும், காகிதம், பிளாஸ்டி பொருளின் குவிப்பு,
இவையே கொசுக்கள் உறைவதர்காண குடியிருப்பு
இதனை ஓழிக்க நாடும், தனிமனிதனும் முயற்சி செய்தாக வேண்டும். !
மனிதனே, உன் சுற்று புற இடங்களை தூய்மை வைத்துக்கொள் ,
கொசுவின் தொல்லையின்றி, நோயின்றி உன்னை பாதுகாத்துக்கொள்
அதனை தடுக்க, ஒழிக்க நல்ல வழிகளை பின்பற்ற கற்றுக்கொள்!
நோய்யற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என அறிந்துகொள் !
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014
கீதையின் நாயகனே
கீதையின் நாயகனே
கண்ணா நீ சிறைச்சாலையில் பிறந்தாய்
தந்தையால் யமுனையை கடந்தாய்
கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்தாய்
பாலகனாய் இருந்து பல லீலைகள்நடத்தினாய் !
உன்னை நாடி வந்த ஆய்ச்சியர்களை கவர்ந்தாய்
உன்னை கொல்ல வந்த அசுரர்களை கொன்றாய்
தீமை செய்த காளிங்கன் மேல் நடனம் புரிந்தாய்
வெண்ணை திருடும் கள்வனாய் திரிந்தாய் !
இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர் குலத்தினை காத்தாய் !
அவர்களுக்காக மலையையே குடையாகப் பிடித்தாய் !
கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன் சென்று கம்சனை வதைத்ததாய் !
பெற்றவளையும் , வளர்த்தவளையும் வணங்கி நின்றாய்!
பண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாய் சென்றாய் !
துரியோதனனுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாய் !
போரே முடிவானதும் பாண்டவர் பக்கம் துணை இருந்தாய் !
போரில் கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !
தர்மத்தினால் பாண்டவர்களை போரில் வெற்றி பெற செய்தாய் !
அதர்மத்தை அழிக்கவே அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!
ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால் நடதிடச் செய்தாய் !
ஜடவரதன் அம்பு பட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய்.!
ரா.பார்த்தசாரதி
சனி, 16 ஆகஸ்ட், 2014
மனிதனே சற்றே நினைத்துப்பார்
மனிதனே சற்றே நினைத்துப்பார்.
எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !
பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !
மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததை கண்டு ஏமாந்த போது
வறட்டு கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !
பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி ,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !
மூட நம்பிக்கையுடன் ஜாதி,மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!
கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!
எண்ணுபவர் - விழிப்பர்
விழிப்பவர் - உழைப்பர்
உழைப்பவர் - உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!
இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?
ரா.பார்த்தசாரதி .
Alphapet Advise
Alphapet
Advise:
"A"lways
"B"e "C"ool.
"D"on't
have "E"go with "F"riends n Family.
"G"iveup
"H"urting "I"ndividuals.
"J"ust
"K"eep "L"oving "M"ankind.
"N"ever "O"mit
"P"rayers.
"Q"uietly "R"emember
God.
"S"peak "T"ruth.
"U"se
"V"alid "W"ords.
"X"press "Y"our
"Z"eal.
வியாழன், 14 ஆகஸ்ட், 2014
புத்தாண்டே வருக
புத்தாண்டே வருக 2015
கதிரவன் குணதிசையில் பன்முகமாய் உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1
பூமியெங்கும் அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும்
யாவருக்கும் பொதுதானே புத்தாண்டே !
நதியால் இணைந்த மாநில மக்கள்
அவலம் அழிந்து போகாதோ புத்தாண்டே !
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !
சுயநலங்கள், சூழ்ச்சிகள் சுவடு தெரியாமல்
அவனியில் அழிந்து போகாதோ புத்தாண்டே !
நாட்டுக்கு நாடு, சமாதனம் மட்டும் ,
தானமாய் கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும் அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை தீர்காதோ புத்தாண்டே !
பூமியெங்கும் அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ புத்தாண்டே
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
பெண்ணின் பெருமை
பெண்ணின் பெருமை
1. பெண் என்றால் பூமிக்குத் தாய். !
2. பெண் என்றால் கற்பின் சின்னம். !
3. பெண் என்றால் வீட்டின் ஒளிவிளக்கு !
4. பெண் என்றால் கருணையின் கடல் !
5. பெண் என்றால் அன்பின் அடையாளம் !.
6. பெண் என்றால் பாசத்தின் தலைவி !
7. பெண் என்றால் உயிர்களின் முகவரி !
8. பெண் என்றால் நாணத்தின் உருவம் !
9. பெண் என்றால் அணங்கு ( பெண் தெய்வம்)
10. பெண் என்றால் பஞ்ச பூதங்களின் உறைவிடம் !
11. பெண் என்றால் கற்பின் சிகரம்.
12, பெண்ணும் ஆணும் சேர்ந்தாலே இல்வாழ்கை !
ரா. பார்த்தசாரதி
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014
எதிர்பார்க்கும் நட்பு
எதிர்பார்க்கும் நட்பு
குறையில்லாத மனிதன் இவ்வுலகில் உண்டா ?
குறையினை சுட்டி காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
குறையினை களைய நல்வார்த்தைகளை எடுத்துரைப்பதுண்டா?
இனிய சொல்கொண்டுதான் அதனை தீர்ப்பதுண்டா?
உலகமே என்னை ஒதுக்கி வைத்தாலும்
என்னை பாதுகாத்து நிழல் கொடுப்பாயா !
நாளுக்கு நாள் கணக்கு பார்க்கும் மனிதர்கள் இடையே
தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா !
நான் வெல்லும்போது வாழ்த்துவதைவிட,
நான் வீழும் போது என்னை தாங்குவாயா.
எதிர்பார்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும்
எதிர்பார்ப்பு இல்லாத உன் நட்பை அளிப்பாயா !.
ரா. பார்த்தசாரதி
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
சந்தோஷம் என்றும் நம் பக்கம்
சந்தோஷம் என்றும் நம் பக்கம்
சந்தோஷம் என்றும் நம் பக்கம்,
. சந்தோஷம் என்றாலே மனிதனுக்கு பாதி பலம் ,
அது இல்லையெனில் மனிதனுக்கு ஏது பலம்,
சந்தோஷம் நாம் வாழ்க்கையில் தேடுவது ,
எப்பவும் எல்லோர் நெஞ்சுக்குள் நினைப்பது
போதுமென்ற மனம் இருந்தால் தானே வருவது !
. சூரியனைக் கண்டால் தாமரை
. சூரியனைக் கண்டால் தாமரை
சந்தோஷத்துடன் மலர்ந்துதானே பழக்கம்,
கார்முகில்கள் திரண்டு வந்து
மழை தந்துதான் பழக்கம்,
மழையைக் கண்டால் மயிலுக்கு
மகிழ்ச்சியுடன் ஆடித்தான் பழக்கம்,
.
. காட்டில் உள்ள குயிலுக்கோ
. காட்டில் உள்ள குயிலுக்கோ
சந்தோஷத்துடன் கூவிதான் பழக்கம்.
கிடைத்ததை மனதிற்கொண்டு நடப்பவை
எல்லாம் நன்மைக்கே என தெளிந்தால்
வாழ்வில் சந்தோஷம் என்றும் நம் பக்கம்.!
.
. ரா. பார்த்தசாரதி
.
. ரா. பார்த்தசாரதி
செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014
திங்கள், 4 ஆகஸ்ட், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)