எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம்.
பன்னிர்த்துளிஎன தெளித்தது பனித்துளி .
சற்றே தயக்கமும் , நடுக்கமும் அடைந்தோம்
அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?
இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்
மலர்கள் பலநிறங்களில் மிளிர்வதை காண்கின்றோம்
மனிதர்கள்,முகமலர்ச்சியுடன் வரவேற்ப்பதை கண்டோம்
எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!
பூத்து குலுங்கும் புதுமலர்கள் அசைய,
புதிதாய் தளிர்த்து புன்னகை புரிய,
மகிழ்ச்சியில் நாங்கள் பூரிப்பு அடைய,
வரவேற்றோம், வசந்தமே வருக, வருக என.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக