செவ்வாய், 4 டிசம்பர், 2012

navin

மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு                                    தேதி : 31-03-2013
முத்தமிழ் எனும் பெயருண்டு,
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நாட்டை  நல்வழியில் நடத்தும், தலைவர்கள்  காண்பதோ  வெற்றி 
நட்பின் இலக்கணமாய்  மூன்று எழுத்து கொண்ட பெயரும்  நவீன் 
நல்லொழுக்கத்தின்  நாயகிக்கும், மூன்று எழுத்து கொண்ட பெயரும் சுஜாதா ,
நவீன்,  சுஜாதா  தம்பதியினர்  மகனின்  முதலாம் ஆண்டு பிறந்தநாள் 
 கொண்டாடும்,  மகனின்  பெயரும்  மூன்று  எழுத்து  கொண்ட கேசவ் 

நவீன், சுஜாதா , கேஷவிற்கு  எங்கள்  ஆசிர்வாதங்கள்.

ரா. பார்த்தசாரதி , கமலா பார்த்தசாரதி . 
-----------------------------------------------------------------------------------------------------------


குழல் இனிது யாழ் இனிது  என்ப  தம்  மக்கள்,
மழலைச்  சொல்  கேளாதவர் 

தம்மின்  தன்  மக்கள்  அறிவுடைமை  மானிலத்து ,
மன்னுயிர்க்கெல்லாம் இனிது.

எல்லா  பிள்ளைகளும் ,  மண்ணில் பிறக்கையில் நல்லவர்களே.!
அவர்கள்  நல்லவர்  ஆவதும், தீயவர்  ஆவதும் தாய் தந்தை வளர்ப்பினிலே !

ரா.  பார்த்தசாரதி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக