மனிதனே ! நட்பையும், உறவையும் உதறிவிடாதே !
பழகும் விதத்தில் பழகினால் பகையும் நட்பாகும் !
சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும் !
சொந்தம் என வாழ்ந்தால் என்றும் சுகமாகும் !
மண் என பிரித்தால் மனிதநேயம் மறைந்துபோகும் !
இனம் என பிரித்தால் இனிமை இல்லாமல்போகும் !
மனித நேயத்துடன் வாழ்ந்தால், என்றும் நலமாகும்
பாசத்தையும், நேசத்தையும் , பாலமாக அமைத்துடு !
சாதிமத பேதத்தை வேரோடு அழித்துவிடு !
வயதிற்கும், படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு !
நட்பும், உறவும், உன் உடன்பிறப்பு என நினைத்திடு !
மன்னிக்க தெரிந்த மனிதனே நல்லவன் என கருதிடு !
கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு !
மனிதனே, உறவும் ,நட்பும் ஓர் இரு சக்ர வண்டிதானோ !
இரண்டுமே , ஓர் நாணயத்தின் இரு பக்கங்ககள்தனோ !
இரண்டுமே , ஓர் நாணயத்தின் இரு பக்கங்ககள்தனோ !
நட்பையும், உறவையும், நீ பணத்தினால் மதிக்காததும் ஏனோ !
இதை படித்த பின்னும் நட்பையும், உறவையும் உதறிவிடாதே !
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக