சனி, 29 டிசம்பர், 2012

sattray ninaithuparungal

     சற்றே  நினைத்துப்பாருங்கள்  !
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  !
  1.          உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும்   தினமும் கடைபிடியுங்கள்
  அது இளமையென்னும் ரகசியத்தை  ரசிக்கும் இடமாகும்  !
  1.              பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  !
  1.            நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
          அது  உன் நேர்மைக்கு இடமாகும்  !
  1.             வாழ்வில்  சேமிப்பை  கற்றுக்கொள்ளுங்கள் 
அது  எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும்   !
  1.              சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
      அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

veeraraghavan


                                           வீரராகவன்
கமலா, வேதாந்தம்  தம்பதினரின்  மூத்த புதல்வரே  !
என்றும்  கடமை, பக்தி, நல்லொழுகத்தில்  சிறந்து விளங்கியவரே !

காஞ்சியில் பிறந்து,  சென்னையில்  குடிபுகுந்தாய் !
கூட்டுறவுவிலும்,  குடும்பத்திலும்  சிறந்து விளங்கினாய் !

 வாழ்கைப்போரில் என்றும் வீரராகவனாய்  திகழ்ந்தாய் !
கடமையிலும், சொந்தபந்தங்கள்  இடையே சிறந்து விளங்கினாய் !

இருக்கும்போது மனிதனை எவரும் புகழ்வதில்லை !
இறந்தபின்  எவரும்  புகழாமல்  இருப்பதில்லை.!

மகன்களுக்கும், மகள்களுக்கும்  என்றும் சிறந்த தந்தையாய்  !
தங்கைகளுக்கும், தம்பிக்கும் சிறந்த  அண்ணனாய் !

பொறுமையிலும், ஒழுக்கத்திலும்  என்றும் சிறந்து விளங்கி,
பலரது  இகழ்சிகளையும்  சுமைதாங்கி போல்  தாங்கி ,

நல்மனம் கொண்டு நற்செயல்  புரிந்தாய் !
தாய்க்கும், தாரதாரத் திர்க்கும் நல்லவனாய்   திகழ்ந்தாய் !

ஆறுக்குள் ( வீரராகவன்) என்றும்  மூன்று அடங்கும் !
பத்மா  எனும் பெயர்  விளங்கும் !

கைப்பிடித்தவள்  வாவென்று ஓர் ஆண்டிற்குள் அழைத்தாளா ?
அவள் விருப்பம் நிறைவேற பின்தொடர்ந்தாயா?

அகவை அறுபதும்  என்பதும் கடந்து சென்றவரே !
ஆரா துயரில் ஆழ்த்தி  விண்ணுலகம் அடைந்தவரே !

நான்கும் அறிந்து, நான்கு தலைமுறை  கண்டாய் !
நற்செயல் புரிந்து இரவா  புகழ்  அடைந்தாய் !

பெற்றோரை  என்றும் பணிவுடன் வணங்கிடுவோம்  !
வாழ்வில் எல்லா வளம் பெற்று  வாழ்ந்திடுவோம்!


                                                                              ரா. பார்த்தசாரதி
                                                                                 ( பாச்சு )

  




சரோஜா


                                                                       சரோஜா

வாழ்வின் ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன்,
வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன் ,
எழுதுகோலை  துணிவுகொண்டு கைய்யில் எடுத்தேன்,
அன்னை சரோஜாவின் அருமையினை எழுத துணிந்தேன்.!

மக்களைப் பெற்ற மகராசியே   தாய்தான் ,
குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்,
ஞானியும், துறவியும்  போற்றும் தெய்வம்,
ஞாலம்   புகழ்ந்திடும் சிறந்த தெய்வம் !

ஏழு பிறவி எடுத்து  ஏழு பிள்ளைகள் பெற்றாய்,
ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஒர்  தொடர்பு வைத்தாய்,
ஏழுலே  ஒன்றே  ஒன்று  பெண் ஆனாலும் ,
எல்லோரிடத்திலும் மாறா அன்பும், பாசமும் வைத்தாய் !.

ஓய்வின்றி, உறக்கம்மின்றி,  உன் உயிரைக் கூட,
 ஒவ்வொர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்.,
உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே,
உன் அருமை அறியா பிள்ளைகளை  தூற்றுமே.!

பாசமுள்ள   வேளையிலே, காசு பணம்  கூடலியே,
காசு வந்த   வேளையிலே.  பாசம் வந்து சேரலியே ,
பருவத்திலே நாங்கள் பட்ட  வலி தாங்கலியே ,
வார்த்தையிலே  வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே.!

பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே,
பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே.
எனக்கென்று  துன்பம் வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு ,
உனக்கென்று துன்பன் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ ?

தாயைவிடச்  சிறந்த தெய்வம்  இல்லை ,
திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை,
தாயின் பெருமையினை சொல்ல வார்த்தையில்லை,
தியாகச்சுடரே  தாயுருவம், மனதினின்றும் மறைவதில்லை !

இளமையில் ஸ்பரிசம்,  முதுமையில் பாசம்,
என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்,
இளமையில்  நான் உனக்கொரு குழந்தை,
முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை !

வாழ்க்கை  படகினிலே  நீயொரு  துடுப்பு 
எங்கள்         பிறப்பே  உன் படைப்பு 
எங்கள்         வளமே உன் சிறப்பு ,
எங்கள்   நினைவே  பாசத்தின் பிணைப்பு !

பூமியைவிடச்   சிறந்தவள்   தாய் ,
ஆகாயத்தை  விடச்  சிறந்தவர்  தந்தை.,
பூவிலே  சிறந்தது  மல்லிகை     ரோஜா,
எங்கள்   தாயின்   பெயரோ         சரோஜா !


                                                      ரா. பார்த்தசாரதி 



சரோஜா 
saro

      

manithanay

                     

      மனிதனே !    நட்பையும்,  உறவையும்   உதறிவிடாதே !   

பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !

 சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் ! 
மண்  என  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
இனம்  என  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் 

பாசத்தையும்,   நேசத்தையும் , பாலமாக  அமைத்துடு !
சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
வயதிற்கும், படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு ! 
நட்பும், உறவும், உன் உடன்பிறப்பு என நினைத்திடு !

மன்னிக்க தெரிந்த  மனிதனே  நல்லவன்  என  கருதிடு  !
கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு ! 
 மனிதனே, உறவும் ,நட்பும் ஓர்  இரு சக்ர  வண்டிதானோ !

 இரண்டுமே , ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்ககள்தனோ !
 நட்பையும், உறவையும், நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ !

இதை படித்த பின்னும் நட்பையும், உறவையும்  உதறிவிடாதே ! 


                                                                                      ரா. பார்த்தசாரதி   
               

சனி, 8 டிசம்பர், 2012

vasanthamay varuka


எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம். 

பன்னிர்த்துளிஎன  தெளித்தது  பனித்துளி .
 

சற்றே தயக்கமும் , நடுக்கமும் அடைந்தோம் 

அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?




  இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்


மலர்கள் பலநிறங்களில்  மிளிர்வதை காண்கின்றோம்
மனிதர்கள்,முகமலர்ச்சியுடன் வரவேற்ப்பதை  கண்டோம்

 எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!

பூத்து  குலுங்கும்   புதுமலர்கள்     அசைய,
 

புதிதாய்  தளிர்த்து  புன்னகை புரிய,

மகிழ்ச்சியில்   நாங்கள்  பூரிப்பு அடைய,



வரவேற்றோம், வசந்தமே  வருக,  வருக  என.


செவ்வாய், 4 டிசம்பர், 2012

navin

மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு                                    தேதி : 31-03-2013
முத்தமிழ் எனும் பெயருண்டு,
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம்
குழந்தையின் சிரிப்பே மழலை
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்.
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
நாட்டை  நல்வழியில் நடத்தும், தலைவர்கள்  காண்பதோ  வெற்றி 
நட்பின் இலக்கணமாய்  மூன்று எழுத்து கொண்ட பெயரும்  நவீன் 
நல்லொழுக்கத்தின்  நாயகிக்கும், மூன்று எழுத்து கொண்ட பெயரும் சுஜாதா ,
நவீன்,  சுஜாதா  தம்பதியினர்  மகனின்  முதலாம் ஆண்டு பிறந்தநாள் 
 கொண்டாடும்,  மகனின்  பெயரும்  மூன்று  எழுத்து  கொண்ட கேசவ் 

நவீன், சுஜாதா , கேஷவிற்கு  எங்கள்  ஆசிர்வாதங்கள்.

ரா. பார்த்தசாரதி , கமலா பார்த்தசாரதி . 
-----------------------------------------------------------------------------------------------------------


குழல் இனிது யாழ் இனிது  என்ப  தம்  மக்கள்,
மழலைச்  சொல்  கேளாதவர் 

தம்மின்  தன்  மக்கள்  அறிவுடைமை  மானிலத்து ,
மன்னுயிர்க்கெல்லாம் இனிது.

எல்லா  பிள்ளைகளும் ,  மண்ணில் பிறக்கையில் நல்லவர்களே.!
அவர்கள்  நல்லவர்  ஆவதும், தீயவர்  ஆவதும் தாய் தந்தை வளர்ப்பினிலே !

ரா.  பார்த்தசாரதி 


திங்கள், 3 டிசம்பர், 2012

neenkal eppadi irupirkal

   
         நீங்கள் எப்படி  இருப்பிர்கள்!!         எதை  இழைப்பிர்கள் !!


       1. நயம்பட பேசினால்,  நல்லவனாக  கருதபடுவாய் !

       2.  சிந்தித்து  பேசினால்,  சிறப்புடன்   இருப்பாய் !

       3.  அறிவு ஆற்றலுடன்  பேசினால்,  அறிவாளியாக  
புகழப்படுவாய் !
                                                                                         
       4.  பொறுமையாக பேசினால்,  போற்றப்படுவனாக இருப்பாய் !  
     5.  பொருத்தமாக பேசினால்,   மதிக்கபடுவாய்

     6.  பண்புடன் பேசினால் பயன் அடைபவனாக இருப்பாய் 

        7.    கோபமாக பேசினால் குணத்தை   இழப்பாய்  !

        8.   ஆணவமாய்  பேசினால் , அன்பை   இழப்பாய் !

        9.   கடுமையாக .பேசினால்  நட்பை
இழப்பாய்    !

      10.   வேகமாக பேசினால்  அர்த்தத்தை 
இழப்பாய் !

      11.   அதிகமாக பேசினால்  உன் மதிப்பை  
இழப்பாய்   !

      12.   பொய்  பேசினால் உன் பெயரையே
இழப்பாய்  !

 நல்லதே  பேசுங்கள் ,  நல்லதே செய்யுங்கள ! நன்மை  அடைவீர்கள் !

 

                                                                   ரா. பார்த்தசாரதி