வெள்ளி, 10 ஜனவரி, 2025


                                                 

                                                                       இதயமே !! என்றும் மறவாதே 

                            கையளவு  கடவுள், இதயம் வைத்தான்     
                           கடல் அளவு மனிதனுக்கு ஆசை வைத்தான்  !

                            இதயமே ! நீ எழுதிக்கொள் 
                            தீயவற்றை என்றும் காண மறுக்கின்றாய் 

                            இதயமே ! நீ எழுதிக்கொள் 
                           நீ மனதினால் நம்பிக்கை கொள்கிறாய் !

                           இதயமே! நீ எழுதிக்கொள் 
                          ஒரு கூண்டுக்குள் இருந்து என்னை இயக்குகிறாய்

                           இதயமே ! நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொரு நாளும் சிறந்த நாளென்று !

                            இதயமே ! நீ எழுதிக்கொள் 
                            ஒவ்வொருநேரமும், சிறந்த நேரமென்று !

                           இதயமே! நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொரு வேலையும் சிறந்த வேலையென்று 

                           இதயமே நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொருஉறவும் சிறந்த உறவென்று !

                          இதயமே நீ எழுதிக்கொள் 
                          ஒவ்வொரு நட்பும் சிறந்த நட்பென்று !

                          இதயமே நீ எழுதிக்கொள் 
                          ஒவ்வொரு உதவியும் சிறந்த உதவியென்று !

                          இதயமே நீ எழுதிக்கொள் 
                           ஒவ்வொரு முயற்சியும் சிறந்த முயற்சியென்று !
                    
                          இதயமே நீ எழுதிக்கொள் 
                          ஒவ்வொரு தர்மமும், சிறந்த தர்மமெண்று !

                         இதயமே நீ எழுதிக்கொள் 
                         இதயமில்லாதவனை கல்நெஞ்சன் என நினைக்காதே 
                          கல்லுக்குள் ஈரம் உண்டு என்பதை என்றும் மறவாதே !
                         
                        ரா.பார்த்தசாரதி 


                            
                            
                            



வியாழன், 26 டிசம்பர், 2024

 





                            



            உலக யோகா தினம்                                   ஜூன்  21ம் தேதி

ஆய கலைகள் அறுபது நான்கு கலையே 
யோகாவும், முத்திரைகளும்   இதனில் அடங்கும் கலையே 
யோகிகளும், சித்தர்களும், தொன்றுதொட்டு வளர்த்த கலையே 
நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !

உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும் 
மூச்சு பயிற்சியாளும் , முத்திரைகளாலும் பலவித நோய்கள் அடங்கும்
யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,
அது  இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !


 உடல் வளர்த்தோர் , உயிர் வளர்த்தோர் என்று சொவதுண்டு 
சில யோகாசனங்களுக்கு   மிகுந்த சிறப்புண்டு
சிறுவர் முதல், முதியோர்கள்  வரை யோகா  பழகலாம்
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

 
யோகா கலை  நமது நாட்டில் தோன்றியதே 
பழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே
 சித்தர்களும், யோகிகளும், வளர்த்த கலையாகும் 
இதன் பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்

நோய்யற்ற  வா ழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களும்,முத்திரைகளும், செய்து உடல் நலனை பேணுங்கள் 
யோகாசனம், நடைப்பயிற்சியின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள் 
 உலக யோகா தினம் அறிவுறுத்தும்  கருத்தென உணருங்கள் !

ரா.பார்த்தசாரதி

செவ்வாய், 19 நவம்பர், 2024

Ninaikaa therintha Manam

 




                                       நினைக்கத்  தெரிந்த மனம்

             மனிதன் தேடும் மகிழ்ச்சி பேராசையில்  முடிகிறது 
          பேராசையால்  பேரின்பம் என்றும் தொடர்கிறது !

             கையளவு இதயம் வைத்தான், கடல் அளவு ஆசை 
                                                                                                  வைத்தான்.
             பேராசையால் மனிதன் முடிவினை தானே   
                                                                                 தேடிக்கொண்டான்

             போதும் என்கிற மனதில்தான் புன்னகை மலரும் 
             தட்டிப் பறிக்காமல், உதவிசெய்வதில் நிம்மதியிருக்கும் !

             நான் எனது என்ற சுயநலத்தை துறந்த  மனமே !
             மனித நேயத்துடன், விட்டுக்கொடுப்பதும் நலமே !

             மனிதா ! எங்கே  எதிலே  இருக்கிறது மகிழ்ச்சி  
             பணம், பட்டம், பதவி, இவற்றால் மகிழ்ச்சியா !

             மண்ணிலும், பொன்னிலும், பதவி,பட்டத்தில் இல்லை 
             மனிதனே, உன் மனதிலிருக்கிறது என அறியவில்லை !

             மகிழ்ச்சி கொண்டு நீ சுற்றத்தை வளைத்து விடு 
             மனித நேயம் கொண்டு நீ உதவிகள் செய்திடு !

              ரா.பார்த்தசாரதி  

திங்கள், 18 நவம்பர், 2024

 




                                                  குழந்தைகள் தினம் 

                       குழந்தைகள் நாட்டின் கண்கள் 
                       அன்பையும் பாசத்தையும்  அளித்திடும் 
                       புன்சிரிப்பு, மழலையும், மகிழ்ச்சி தந்திடும் 
                        கள்ளம் கபடுமில்லாமல் நம்மை தேடி வரும்.

                        ஊட்டச்சத்து குறைவின்றி குழந்தைகளை வளர்ப்போம் 
                        படிப்பிலும், விளையாட்டிலும் சிறப்புற செய்திடுவோம் 
                        ஆரோக்கியத்தை காத்து, நலமுற பாதுகாப்போம் 
                        உடலும், மனதும், செய்ம்மையுற பயிற்சி அளிப்போம் 

                        பாகுபாடின்றி கல்வி அளித்து ஏற்றமடைய செய்வோம் 
                        வேற்றுமையில், ஒற்றுமையை என்றும்  ஓங்கச்செய்வோம்
                        குழந்தையும்,  தெய்வமும்,  குணத்தால் ஒன்று, 
                        குற்றங்களை மறந்திடும்,  மனத்தால் ஒன்று !

                        குழந்தைகளிடத்தில் மிகவும் அன்பு கொண்டாரே  நேரு 
                        தன பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக அறிவித்தாரே 
                        பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கொண்டாட  செய்தாரே !
                        மக்கள் மனதிலும் நேரு இடம் பிடித்து  பெருமையடைந்தாரே !

                      ரா.பார்த்தசாரதி  = D 103
                        

சனி, 28 செப்டம்பர், 2024

Worlad Heart Day 0n 29-09-2024







                                                  உலக  இதய தினம் 
                                                       29-09-2024

      இதயம் ஒரு கோவில  என சொல்வதுண்டு!
      அதனை தூய்மையாக பாதுகாக்கவும் கடமையுண்டு!
       அதீத   எண்ணம்,உணர்ச்ச்சியால் பழுதுஅடைவதுண்டு! 
      இதனால் மனித இதயம், பலமிழந்து மரணமடைவதுண்டு !

      இறைவா , மனிதனுக்கு, கையளவு இதயம் வைத்தாய் !
      கடல் அளவு மனிதனுக்குள் ஏன் ஆசை வைத்தாய் !
      இதயத்தை உடல் எனும் கூண்டுக்குள் அடைத்து வைத்தாய் !
      இவ்வுயிரண்டையும் தந்தவளை அம்மா என உணரவைத்தாய்!

    இதயம் ஒரு சிறை,குற்றம் செய்தவர்கள் மாட்டுவதில்லை!.
    பாசம் வைத்தவர்கள்  என்றும் துன்பமடையாமலிருப்பதில்லை   
       இருவரின் துடிப்பினிலே விளைவதும் மழலையடா !
       இருவர் இதயங்களின் இணைப்பிலே மலர்வதும் காதலடா !

       உடலுக்குள் இருக்கும் இதயம், உண்ர்ச்சி பெட்டகமே  !
       அதிலே அடங்கிடும் மனிதனின் உயிரோட்டமே  !
       இவ்வோட்டமே  நிற்காமல் ஓடினால் மனிதனின் நடமாட்டமே!
       இதனை பொக்கிஷமாய் காப்பதே நம் கடமையாகுமே !

       உடல் முழுதும் குருதினை பரப்புவதும்  இதயமடா !
       ஆயுள் முடியும் நமது உடலில்  ஓடும் கடிகாரமடா !
        நல்ல உடற்பயிற்சி செய்வதே இதயத்திற்கு வலிமையடா!
        தியானத்தாலும் , மௌனத்தாலும் காப்பது நம்கடமையடா!

         ரா.பார்த்தசாரதி.    D- 103
         8148111951. 
           
         


         

திங்கள், 26 ஆகஸ்ட், 2024








                        


                                                                    கிருஷ்ண ஜெயந்தி 

               ரோகிணி நட்சத்திரத்தில் தேவகிக்கு  மகனாய் பிறந்தவனே !

               புல்லாங்குழல் இசைத்து எல்லோர் மனதையும் கவர்ந்தவனே! 

               கோகுலத்தில்  கோபியர்களை கவர்ந்த கோபாலனே! 

               வெண்ணையை திருடி உண்டு நவநீதன் எனும் பெயர் பெற்றவனே! 

               பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ராஸலீலை புரிந்தவனே! 

               மலையை ஒரு விரலில் குடை பிடித்து கிரிதரனாய் நின்றவனே! 

               கம்சனையும், பல அரக்கர்களையும் சம்ஹாரம் செய்தவனே! 

               அர்ச்சுனனுக்கு பாரதப் போரில் சாரதியாய் இருந்தவனே !

               கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தவனே !

                கண்ணா, கண்ணா , என்றாலே எல்லோர்க்கும் அருள்பவனே !


               ரா.பார்த்தசாரதி - D 103

                8148111951

               

                 

வெள்ளி, 14 ஜூன், 2024

Vashisd and Kaaviya Vazuthu Madal

 


                                   திருமண வாழ்த்து மடல் 

1.   ஆற்காட்  ரோட்டில் உள்ள பத்மாராம்  கல்யாணமண்டபத்தில்  ஓர் மேடை ,  
       வஷிஷ்ட்க்கும்,   காவ்வியாவிற்கும்   எழுதிவைத்த  கல்யாண மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  திருமண விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசியே 
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

4. காதலை முடித்து, திருமணத்தை எதிர்நோக்கும் வஷிஷ்ட்  எனும் ஆடவனே     
     என்றும்  சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? இருமனம் ஓன்றாகி இல்வாழ்கையில்       
     இணைந்திடும்   வரை! 

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ  காவ்வியா என்று  அழைப்பது பழக்கம்   !

7.  காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்

8.   பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

9.  .கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
10.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

11. நான்கெழுத்திற்கு  ஓர்  பெருமையுண்டு 
      நான்கும் அறிந்தவன் என சொல்வதுண்டு 

12   காவ்வியா {வை} கைப்பிடிக்கும்  வஷிஷ்ட நான்கெழுத்து 
          வஷிஷ்ட {ஐ } கைப்பிடிக்கும் காவ்வியா {விற்கு}நான்கெழுத்து 

13.    நான்கெழுத்து கொண்டு  நான்கும் அறிந்தவனே !
          நான்கு குணம் அறிந்த சிறந்த நற்ப்பெண்ணே !

14..   வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்போம் 
         மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15.  அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
        பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 
                                                                                                             ரா.பார்த்தசாரதி 
                                                                                                              8148111951