சனி, 6 செப்டம்பர், 2025

    



             ஆசிரியர் தினம

மாதா,பிதா, குரு  தெய்வம் 
மூவரும் கண்கண்ட தெய்வம்,
அன்பிற்கு அன்னை, அறிவுக்கு தந்தை,
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே !

மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை ,
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே  பெருமை,
மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி,
ஏணியாய்  இருந்தவர்களுக்கு  என்றும் ஆசிரியர் எனும் பதவியே  !

ஆசிரியர்  பணி  மகத்தான பணியன்றோ,
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன்  பிறந்த நாளே  ஆசிரியர் தினமாக  அறிமுகமானதே!

அன்று இருந்த ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்தினார்,
இன்று  பணத்திற்காக ஆசிரியர்கள் வீட்டில் பாடம் நடத்துகின்றார்,
அன்று கல்வி அறிவுத்திறனுக்காக பாடம் கற்பிக்கப்பட்டது 
இன்று கல்வி என்பதே வியாபாரமாகவே   கருதப்படுகிறது !


அறிவுத்திறன், கல்வித்திறன்  என்றும் நாட்டிற்குயும் வளமை, 
பள்ளியில்  தரமான  கல்வியும் , ஆசிரியர் பதவியும் தேவையன்றோ 
வாழ்க்கையில், கல்வியும் , ஆசிரியரும்  மாணவனின்  இரு கண்கள,
எங்கள் தலைமை ஆசிரியர் திரு.T.E.Santhanam அவர்கள
ஆசிரியர் தினத்தன்று  நினைப்பது  கற்ற  கல்விக்கு !பெருமையன்றோ  !

ரா.பார்த்தசாரதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக