சுதந்திர தினம் - 15, ஆகஸ்ட்,2025
78 ஆண்7டுகள் கடந்து 79 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்
சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்த நன்னாள் !
அஹிமிசை வழியில் கிடைத்த அன்புத்திருநாள்.
அடிமைச் சங்கிலியை உடைத்த அற்புதமான நாள்
வெள்ளையரை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள் !
கம்பிரமாய் மணிக்கொடி தரும் ஆனந்த திருநாள்.
சுதந்திர காற்றை சுகமாய் சுவாசிக்கின்ற நன்னாள் !
ஆம் ! இன்றைய பாரத சுதந்திர நாட்டின் நிலைமை என்ன?
தொழில்,மற்றும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டோம்,
விண்வெளி ஆராய்ச்சியில் பிற நாட்டுடன் சேர்ந்து வெற்றிக்கொண்டோம் . நமது ராணுவப் படை கொண்டு எதிரிகளை அடிபணியச் செய்தோம் .இருப்பினும் நாம் தீர்வு காண முடியாத,மதப்பிரிவினால் ஏற்படும் தீவிரவாதத்தை மட்டும் அடக்க முடிந்தபாடில்லை !மதப் பிரிவினையே
எல்லா தீவிரவாதத்திற்கும் அடித்தளமாக அமைகின்றது !!
மணிப்பூர், காஷ்மீர்- நடந்த இனக் கலவரமே தீவரவாத்திற்கு முக்கிய
காரணம். காஷ்மீரில் பல ஆண்டுகளாக மத பிரச்சினை இருந்துவருகிறது.பல மொழி, பல ஜாதிகள்மாநிலத்தில் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இத்தனை ஆண்டுகளாக நாம் காத்து வருகின்றோம் !
மக்களே ! எந்நாளும் ,ஒற்றுமையுடன் இருந்து நம் பாரத தேசத்தைப்
பேணி காப்போம் .
பாரதி கூறுகிறார் - ஜாதிகள் இல்லையடி பாப்பா ! பயம் கொள்ளாதே
பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் ஆகாது பாப்பா என்கிறார்.
உச்சி மீது வானிடிந்து போயினும் அச்சமில்லை, அச்சமில்லை ! என்றும்
யாதும் ஊரே ! யாவரும் கேளிர், தீதும், நன்றும் பிறர் தர வாரா ! எனும்
பொது மறையை உணர்த்தியதும் நம் நாடு !
மேலும் பாரதி கூறுகிறார் : தாயின் மணிக்கொடி பாரீர் ! அதை தாழ்ந்து
பணித்திட வாரீர்! ஓங்கி வளர்ந்த்தோர் கம்பம் அதன் உச்சியின் மேல் எங்கள் தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் ! வந்தே மாதரம் என்போம் நம் பாரதம் காப்போம் எனக் கூறுகிறார் ! என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம் , மற்றும் நெஞ்சம் பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட மானிடர்களை கண்டால் ! என்று முழங்கினார் பாரதி !
நாம் அந்தமான் தீவில் நமது வீரத் தியாகிகள் பட்ட கஷ்டங்களை நினைந்து பார்த்தால் நமக்கு சுதந்திரத்தின் அருமை புரியும்.இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க அன்று பல உயிர்களின் மூச்சுக் காற்று நின்றது. மக்களே, நாம் சுகபோகத்தில் வாழ்ந்திடாமல் சுதந்திரம் பெற உழைத்தவர்களை மறக்காமல் நினைந்திடுவோம் !
மக்களே, நல்ல தலைவர்களை தேர்ந்திடுங்கள் ! பணத்திற்காக ஓட்டை அளித்து துரோகிகளாக நிற்காதீர்கள். ஓங்கி நமது குரல் ஒலிக்க நம் உரிமைகளை மீட்டெடுப்போமே ! ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை
உறைவிடம் என அனைத்தும் கிடைக்கச்செய்வோமே ! சாதிமத பேதம்
நம் நாட்டிற்கு வேண்டாம் ! நம் வீட்டிற்குள்
சண்டையிட்டு வெளிநாட்டவரை (டிரம்ப்)
விட வேண்டாமே ! இளஞ்சர்களே ! நாடு உனக்கு என்ன செய்தது, என்று நினையாமல் நீங்கள் நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்பதையும்,
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை சற்றே நினைந்து பாருங்கள்
தலைமுறையிலியும் அணையாமல் காக்கப்படவேண்டிய ஒளியே
சுதந்திரம்/, அது வெறும் வார்த்தை அல்ல. அது பிறப்புரிமை, இளஞ்சர்களே! ! எழுந்திருங்கள், விழித்திருங்கள் குறிக்கோள் அடையும் வரை உங்கள் உரிமைக்கு போராடுங்கள்.
ஜெய் ஹிந்த் !
தொகுத்தவர்: ரா.பார்த்தசாரதி
8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக