வியாழன், 8 அக்டோபர், 2015

சுதந்திரம் எங்கே



 சுதந்திரம் எங்கே 

நள்ளிரவில்  சுதந்திரம் பெற்றோம்,
வெள்ளையனே வெள்ளியேறு  என சொன்னோம்!

சுதந்திரம் எதில்? பெண்ணிடமா , பெண்ண்மையிலா ?
கற்பை   சூறை யாடுபவர்களுக்கு   சுதந்திரமா! 

அரசியல்வாதிகள்  ஊழலை மறைபதற்கு சுதந்திரம்
ஏன்  என்று கேட்பவர்களுக்கு சிறையே  அடைக்கலம்!

நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தவர்கள்  தியாகம் ,
இன்று கெடுதல் நடக்கா மலிருக்க ஓர் யாகம்!

ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிக்கும் சுதந்திரம்,
நல்லதை செய்பவர்களை   தடைசெய்யுதே  சுதந்திரம்!

பறவைகள்  பறப்பதற்கு  என்றும்  சுதந்திரம்
பாவைகளுக்கு  எதிலே  இன்று சுதந்திரம் !

அறுபத்தொன்பது    ஆண்டுகள் ஆயினும்  வறுமைக்கோடு,
இன்றோ ஏழை  கூக்குரலின்  கூப்பாடு !

கவிஞர்கள் முழக்கிய  சுதந்திரம்  எங்கே?
இன்றும் பெயரளவில் இயங்குது இங்கே ?

இளைஞ்சர்களே நீங்கள் சுதந்திரத்தை நெஞ்சினிலே நிறுத்துங்கள் 
தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடினமாய் உழைத்திதிடுங்கள் !

ஊழலையும், கொடுமைகளையும், அநீதிகளை   எதிர்த்து போராடுங்கள், 
ஊக்கத்துடன் போராடி வெற்றி காணுங்கள் !

சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை  என நினையுங்கள்,
அதுவே  பல தியாகிகளின்,  தியாகம் என நினைந்திடுங்கள் !

இன்று சுதந்திரத்தின்  உள்ளுணர்வு உன்னை தூண்டட்டும்,
இன்றைய பாரத இளைஞ்சர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.






வியாழன், 24 செப்டம்பர், 2015

ராகுல் சீமந்தம்

                                                               ராகுல் சீமந்தம் 

கடவுளுக்கும் பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே ,
கருவுற்ற மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு பாரினிலே 
 பூச்சூட்டல் என்பதோ திங்கள் ஐந்தும் ஏழின தொடக்கத்திலே 
சீர்மிகு சீமந்தம் என்பதோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே 

இன்று சீர் மிகு சீமந்தம் இறைவன் அனுகிரக்ஹத்தோடு 
ஸ்ரீ குமரன் அனுகிரஹா மண்டபத்தில் இனிதே நடைபெறுகின்றதே 

பெண் முழுமை அடைவதும்  தாய்மையாலே ,
தாயாக  மாறுவதும்  அந்த  தாய்மையாலே 

இன்று திருமதி ஹரிணி ராகுலுக்கு  பூச்சூட்டல் 
ராகுலின் அன்பு மனைவியாம், 
பாசமும், நேசமும், கொண்டவளாம் ,
என்றும் சீரும் சிறப்புடனும் 
குடும்பத்தின் குல விளக்காய் திகழ, 
பூச்சூட்ட வாருங்கள் !   பூச்சூட்ட வாருங்கள் ! 

மல்லிகை, முல்லை தலையிலே சூட்டி 
மனமகிழ் சந்தனமும், பன்னிரும் தெளித்து 
வளைகாப்பும், வளையலும், கையிலே அணிந்திட ,
தாயும், சேயும் வளம் பெற,
நல்மனம் கொண்டு நல்வாழ்த்தும், நல்லாசியும் கூறுங்கள் 

திரு. ராமஸ்வாமி, உமா தம்பதியினரின் மூத்த மகனாம் 
என்றும் அன்பும், பாசமும் மரியாதையும் கொண்டவனாய் 
விளங்கும் ராகுல் பாரத்திற்கு இன்று சீர்மிகு சீமந்தம் 
ஹரிணியும், ராகுலும், வாழ்கையில் வளம் பெற வாழ்த்துங்கள் 

பூமிக்கு முகவரி தந்ததும்  பெண்ணாலே 
பூவிற்கு மணம் வந்ததும் பெண்ணாலே 
பூமகள் ஹரிணி பூரிப்பு அடைவதும் தாய்மையாலே 
பொன்மகள் ஹரிணி ராகுலை வாழ்த்துவோம் அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

பெண்ணே நீதான்




                                        பெண்ணே  நீதான்


  ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

  பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

   என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

  திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

 நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .


ரா.பார்த்தசாரதி 

   





சனி, 29 ஆகஸ்ட், 2015

பிரியமானவளே ! !


                                                          பிரியமானவளே ! 

திருவிழாவில் மாவிலை தோரணம் கட்டி 
அழகாக அலங்கரிக்க கண்டேனே, 

வானம்  எனும் வீதியிலே நிலவும்,
 நட்சத்திரங்களும் மின்ன
அவைகள் என்னை கவர்ந்ததே !

தோரணத்தில் ஆங்காங்கே  பூக்களும்,
இலைகளும் செருகியதே ஓர்  அழகு ,
உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்குகியதே 

நீ நீர்தெளித்து கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய் 

ஆடி மாத அம்மனுக்கு பொங்கல் இட 
சுள்ளிகளை பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன் 
அந்த வெய்யில்லில்  தூரத்து சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!

சாமிக்கு படைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை கொடுக்கும்போது 
என் இதயம் இனிக்கிறது என்றாய். 
உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு .

மறுநாள் ஊருக்கு கிளம்புகையில் 
திரும்ப எப்ப வருவே  எனும் ஏக்க 
விழியாலும், பார்வையாலும், என்னை நோக்கினாய்!

பிரியமானவளே, அப்போதுதான் புரிந்து கொண்டேன்
என் உடலை விட்டு என் உயிரை எடுத்து செல்கிறாய் என்று !

ரா.பார்த்தசாரதி