சனி, 28 ஜூன், 2014

தந்தையர் தின விழா

                                                       

                                                             தந்தையர்  தின விழா

                            எந்தையும்,  தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு ,
                            அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு ,
                            தாயை  விட  சிறந்த  கோவில்  இல்லை,
                            தந்தை  சொல்மிக்க  மந்திரம்  இல்லை !

                            தாயிடம்  அன்பும்,  தந்தையிடம்  அறிவும்,
                            அவர்களால்  கல்விமானாய் உலகில் திகழவும்,
                            பணம் ஒன்றினால்  பாகுபடுத்த  தெரிந்தவனாய்,
                            ஏன்  பாசத்தை மட்டும் காட்ட   தயங்குகின்றாய் !

                            அன்று அவர்கள்  கொடுத்த   முகவரிதான்,
                            இன்று  உன்னை  அடையாளம் காட்டுகின்றதே,
                            பழையதை  மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே,
                            வந்த வழினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

                            தந்தையே  உன்  பிறப்பிற்கு   காரணம் ,
                            தந்தையே  உன்  அறிவிற்க்கு  ஆதாரம்,
                            பணம்  என்றும்   எட்டிப்  பார்க்கும்,
                            பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும் !

                            வாழ்கை முழதும்  குடும்பத்தின்  தூணாய் , 
                            உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
                            உலாவி   வரும்  தந்தையே   இடிதாங்கி,
                            ஏன் எனில்  நல்லது  கெட்டதெல்லாம் அவர்மேலே!

                            தந்தைக்கும், தாய்க்கும்  ஊன்று கோலாய்  இருந்திடு ,
                            அவர்களே  கண்கண்ட  தெய்வமென  நினைத்திடு,
                            தரணியில்  என்றும்    சிறந்து  விளங்கிடு,
                            எல்லோர்க்கும்   நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு !  

                           ரா.பார்த்தசாரதி
                        
                          



Vivek kavithai Ezuthinaal




                                     விவேக் கவிதை எழுதினால் 

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்   ஏனோ !
கண்ணும்,கண்ணும் பேசி ஒன்றாய் கூடும் விநோதம்தானோ !
என் இதயத்தில்  என்றும்  இதய  ராணியாய்  இருப்பதும் ஏனோ !
எண்ணாத  எண்ணங்கள்  எண்ணுவதும்   ஏனோ !

மெல்ல தொலைபேசியில்  அன்பாய் அழைத்ததும்  ஏனோ!
மெல்போர்னில்  நீ அருகில் இருந்ததை மறந்திருப்பேனோ !
இரு உள்ளங்கள் ஒன்றோடு ஒன்றாய் தேடுவதும்   ஏனோ 1
நீ அருகில் இருந்தால் குளிர்வதேனோ ? விலகினால் சுடவதேனோ !

உன் பார்வை ஒன்றே  போதுமே !  
பல்லாயிரம்  கதைகள் கூறுமே !
என் கவிதை உன்னை மாற்றிடுமே !
என் உள்ளம் உன்னை என்றும் நேசித்துடுமே !!

செல்லும்முன் பல பரிசுகள்  கேட்டதுமே,
என்னுள்   ( என் உள்ளத்தில் )   இருக்கும்  உன்னை  தவிர,
இந்த விவேக் குமாருக்கு கொடுக்க தெரியலையே,
இது காதலா ! கவிதையா ! என்று நீ யோசிக்காமல் இல்லையே !


புதன், 25 ஜூன், 2014

வாரணமாயிரம்







                                                            






                                                               வாரணமாயிரம் 

                                         மத்தளம் கொட்ட  வரிசங்கம் நின்றூத


                                         முத்துடைத் தாமம், திசை தாழ்ந்தியப்பந்தற்கீழ் 

                                         மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் 

                                         கைத்தலம்  பற்றக்  கனா கண்டேன் தோழி!  நான்   

செவ்வாய், 24 ஜூன், 2014

பார் மகளே பார்





  

                                             
                                                பார் மகளே பார்.

பெண்ணின் வாழ்வே நாற்றங்கால்  நாற்று போலே
வேறு இடத்தில்  நடவு  செய்வது போலே
பிறந்த இடத்தை விட்டு புகுந்த வீட்டில் வாழ்வது போலே ,
தானே ஒளி தந்து  ஒளிரும்   மெழுகுவர்த்திப் போலே ,

வேராக மறைந்து, தான் தனித்துவம் பெற்றதாலே
வேறாகிப் போகும் காலம், மாறியதாலே
மழலையைக் காப்பகங்களில் குழந்தைகளை விட்டுவிடுவதாலே, 
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை பேர் இக்காலத்திலே !


 இருவர், பொருளீட்டச் செல்லும் காலமாய் இருப்பதாலே
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமாய்  இருப்பதாலே
தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்கியிருப்பதாலே
சேய்கள் பெருகினால், நலமாகுமோ இத்தரணியிலே !


பிறந்த முதல், உன் திருமணம் வரை கூட நின்றவர்களை மறந்து,
என் வீடு, என் குழந்தை , என் கணவன் என்ற நினைப்பா
பிறரை நினைக்க செய்யாத மனதின் இயல்பா 
ஏனோ  சில சமயம் பேசிடும் தொலைபேசியின் தொடர்பா 

உடன் பிறந்தவர்களையும், வாழ்க்கைக்குஆணிவேறெனஇருந்தவர்களை 
உனக்கு  நினைவு வந்தால்தான் தொடர்பு கொள்கிறாய்
ஏனோ எந்திரமான  வாழ்கையில் சிக்கித் தவிக்கின்றாய் 
நிம்மதியும், இன்பமான வாழ்க்கையை    இழக்கின்றாய்

ஏனோ அயல் நாட்டு மோகம், தாய் நாட்டை மறுக்கும் வேகம்,
பணத்திற்காக, பந்த பாசங்களை   துறக்கும் சோகம்,
உன் குடும்ப வளர்சிக்காக  நடத்தும்  யாகம் ,
என்று  முடியுமோ  இந்த அயல்நாட்டு மோகம் !

பெண் ஆனவள்  தாய், மனைவி, பாட்டி  என பல பதவியின் உருவிலே, 
தாய் நாட்டுப்பற்றும்,  தாய்,தந்தையரின் பாச  நினைவிலே 
என்றாவது  தாய் நாடு திரும்புவாய்  என்ற விருப்பத்தினாலே 
உன்னை எதிர்நோக்கும் உற்றார், உறவினர்களின்எதிர்பார்ப்பிலே 

பார்  புகழும்  பெருமை பெற்று, தாய் நாட்டின் வளம் காக்க
வந்து அடைவாய் தாய் நாட்டின் வளமை பெற  உழைக்க
சுற்றமும்  நட்பும் உன்னை எதிர்பார்க்க   சற்றே
நீ பிறந்த தாய்நாட்டின் நிலைமையை பார்  மகளே, பார். 


ரா.பார்த்தசாரதி