செவ்வாய், 13 டிசம்பர், 2022

New year 2023

 


     புத்தாண்டே ஒற்றுமை மலராதோ !!!                 

புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே !


பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

நாட்டுக்கு, நாடு சமாதானம் 
தானமாய் கிடைக்காதோ 
மக்கள் இறப்பினை 
சற்றே நினைக்காதோ !
புத்தாண்டே !

மண்ணில் விழும் மழைத்துளியும்
விண்ணில் வீசும் 
காற்றும் 
யாவருக்கும் பொதுதானே
புத்தாண்டே
!


*நதியால் இணைந்த
மாநில மக்கள், 
அணையால் 
பிரியும் அவலமும் அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே
!

நம்பிக்கை துரோகமும் 
நயனவஞ்சகமும் கூடஇருந்தே  குழி
பறிக்கும்  கூட்டங்களின் 
எண்ணங்கள் மாறாதோ                           
புத்தாண்டே!

வெள்ளத்தால் சேதமுற்ற 
பயிருக்கும், வீடு, வாசல் 
இழந்தோர்க்கும் ஆவண 
அரசு செய்யாதா  புத்தாண்டே !

சுயநலங்களும் சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல் மறைந்து,

மனித நேயம் மலரட்டும் 
புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி 



புதன், 16 நவம்பர், 2022

எங்கே அவள் ?

                                             


                                                    எங்கே அவள் ?

        பூத்த  விழிகள் கதை பேச பூங்காற்று மெல்லசைய 
        மண்ணைப் பார்த்து நடக்கும் அவள் அழகை காண 
        பூமியும் கூட அவளை காதலித்து விடுமோ என பயந்தேன் 
        நல்லவேளை பூமியும் ஒரு பெண்தானே என ஆறுதலடைந்தேன் 

        விரல் பிடித்து என்னுடன் வருவாய் என நினைத்தேன் 
         விலகிச்  செல்வாய் என்று  தெரிந்திருந்தால் 
         உன் விரல்  அல்ல,  என் உயிர் என்றே நினைப்பேன் 
         யாரோடு வாழ முடியுமோ அவளோடு வாழ்வதல்ல வாழ்க்கை 

         யாரின்றி  வாழ முடியாதோ அவளுடன் வாழ்வதே வாழ்க்கை 
         இருகை சேர்ந்தால்தான் வாழ்க்கை என அவள் அறிவாளா !
         இரு இதயங்களின் சங்கமம் என தெளிவாளா 
         இரு விழிகளின் நேசமே, எங்கள் காதல் தேசம் என அறிவாளா !

சனி, 5 நவம்பர், 2022

thamizhum, panpaadum, kalacharamum

 


                                           தமிழும்,  பண்பாடும் , கலாச்சாரமும் 

                   கல்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 
                   தமிழின் பெருமையும், ஆண்ட அரசர்களின் வம்சம் 
                  இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இயற்றியார் 
                  கல்லிலே கைவண்ணம் காண கற்கோவில் அமைத்தான் 

                  தமிழனின் பெருமையை  உலகெங்கும் பரப்பினான் 
                 கம்பன் கண்ட  ராமாயணம் என்றும் சிறப்புடையதன்றோ 
                 வள்ளுவனின் திருக்குறள் என்றும் பொதுயுடமையன்றோ 
                 கல்விக்கும்,  புகழுக்கும் பொது அதிகாரம் அமைத்தான் 

                 நம் முன்னோர்கள் ஆன்ற அறிஞர்கள் என  அறிந்ததே 
                திசையை எட்டாகவும் , இசையை ஏழுகவும் பிரித்தான் 
                சுவையை ஆறாகவும், நிலத்தை ஐந்தாகவும் பிரித்தான் 
                காற்றை நான்காகவும் ,மொழியை மூன்றாகவும் பிரித்தான் 

                வாழ்க்கையை மட்டும்,  அறம், புறம் என இரண்டாக பிரித்தான் 
                மனித ஒழுக்கத்தை  மட்டும் ஒன்றாய்  அமைத்தான் 
                ஒழுக்கத்தை  உயிரினும்  மேலாய் கருதச் சொன்னான்
                யாதும்  ஊரே, யாவரும் கேளிர்,எனபொதுவுடைமையாக்கினான் 

                 ரா.பார்த்தசாரதி.
                    
                    
                      
                        
                      
                        

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

             

            

                                               மங்கள விநாயகனே    

                     விநாயகனே,   என்றும் வினைதீர்ப்பவனே 
                     வேழமுகத்தோனே , வேலவனுக்கு மூத்தவனே 
                    ஞான முதல்வனே,  கணங்களின்  தலைவனே 
                    செய்யும் தொழிலுக்கு ஆதாரமாய் முன்னிற்பவனே 

                   வெற்றிக்கு  வழிவகுக்கும் வெற்றி விநாயகனே 
                   மண்ணிலும், மஞ்சளிலும் உருவமாய் திகழ்பவனே 
                  காட்சிக்கு  எளியவனாய், தெருவெங்கும் அமர்ந்தவனே 
                  மூலப்பரம்பொருளே, மூழிக  வாகனனே 

                   புத்திக்கு வித்தாகும்  சித்தி விநாயகனே 
                   காக்கும் கடவுளாய், கணேசனாய் நிற்பவனே 
                   கவலைகள் அகல துணையாய் இருப்பவனே 
                   மெட்ரோஸ்னில் குடியிருக்கும் ஆனந்த விநாயகனே 
                   எல்லோரும் ஆனந்தமாய் வாழ அருள் செய்பவனே !

                   ரா.பார்த்தசாரதி  8148111951
             

               

THIRUMANA NAAL

 


                                                            திருமண நாள் 

                                       உற்றவர்,  பெற்றவர்  ஆசிகள் சூழ 
                                      இல்லத்தரசனும்.அரசியுமாக 
                                      மங்கல நாண் பூண்டிடும் 
                                      திருநாளே  திருமண நாள் !

                                     திருமணம் என்பது இரு மனம் அல்ல 
                                     அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம் !

                                     இருமனம் புரிதலோடு வாழும் வாழ்க்கை 
                                    வருடா , வருடம்  நினைத்து பெருமிதம் 
                                   கொள்ளும்  நாள் !

                                   வேறு,வேறு மண்ணில் மலர்ந்தாலும் 
                                  ஆயிரங்காலத்துப் பயிராக கிளை பரப்பி 
                                  செழித்து நிற்கும், அஸ்திவார  நாளே 
                                  திருமண நாள் !

                                 கண்ட கனவுகள் நனவுகளாக சிறகடித்து 
                                 பறக்க, சமூகத்தில் புது அந்தஸ்து பெரும் 
                                நாளே , திருமணநாள் !

                                 சுற்றம் வளைத்து, நட்பு வட்டம் பெருக்க 
                                வாழ்க்கை என்னும் பாதையில்  நடக்க 
                               இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில் 
                                நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட 
                                கருத்தொருமித்து மேன்மையான எதிர்காலம் 
                               சமைத்திட , அடிகோலும் பெருநாளே 
                               திருமண நாள் 

                                ரா.பார்த்தசாரதி 8148111951
                                 
                                 


புதன், 25 மே, 2022

sri krishna nichiyathaartha vaztg madal


                                   ஸ்ரீ கிருஷ்ணாவின்  நிச்சியதார்த்தம் 

இடம்:       ராதா கிருஷ்ண மந்திர                                   தேதி: 26 மே 2022
          லீ  மாண்ட , இல்லிநாய்ஸ்  60439
2.  ருக்மணி,சத்யபாமா சமேத வேணுகோபாலஸ்வாமி அருளால் 
     ராதாகிருஷ்ணா மந்திரில்  ஓர்  நிச்சியதார்த்த  மேடை !

2.  திருமதி லதா திரு சுரேஷின் புதல்வன் ஸ்ரீகிருஷ்ணாவிற்கும் 
     சௌபாக்கியவதி  ஷீட்டலுக்கும் நிச்சியதார்தம்  இன்று 

3. இது கடவுள் அமைத்த மேடை, இணைக்கும் கல்யாண மாலை 
    இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே  அன்று .
     
4   காலம், தேதி, இடம்  முடிவுசெய்வதும்  நிச்சியதார்தமே 
    இறைவன் நாமங்கள்சொல்லி லக்னபத்திரிகை வாசிக்கப்படுமே !

5.  இருவீட்டாரும்  சேர்ந்து நடந்திடும் நிச்சியதார்த்த  விழா 
     உற்றார், உறவினர் சேர்ந்து நடந்திடும் விழா !

வாழ்க்கைத்  துணைநலம் நாடும் ஸ்ரீகிருஷ்ணா எனும் ஆடவனே 
    என்றும் அமெரிக்காவில்  ஷீட்டலுடன்  வாழ்ந்திடுவாய் சிறப்புடனே !

நகமும், சதையும் ( Bone & Skin) போல்  இருந்திட  வேண்டும் 1
    இரு கைகள் சேர்ந்தால்தான் வாழ்க்கை என அறிந்திட வேண்டும் !

8  திருமணம் என்பது  இருமனம்  அல்ல  
    அதுவே  இருமனம் கொண்ட ஒரு மனம் !
 
9 திருமதி ஒரு வெகுமதி என அழைப்பது பழக்கம் 
    திருமதீயின் பெயரோ ஷீட்டல்  என அழைப்பது வழக்கம் !

10 காலமும், காட்சிகளும்  வாழ்க்கையில் என்றும் மாறும் 
    கணவன், மனைவி என்ற உறவே என்றும் நிலைத்து வாழும்  !

11 பிறந்த வீட்டின்  குலம்  காக்க வேண்டும் 
    புகுந்த வீட்டின்  நலம்  காக்க  வேண்டும் !

12/ மலர் போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்ப்பெண்ணே 
     மண்வாசனை மாறாத குணம்  வேண்டும்  மணப்பெண்ணே !

13 நிச்சியதார்தம் என்றாலே உற்றார், உறவினர் ஆசியே !
    அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்   ஆசியே !

14 ராதாகிருஷ்ணா மந்திரில் இருவீட்டாரும் சிறப்புற  நடத்தினரே 
     வேற்றுமையில் ஒற்றுமை கண்டு,விருந்துண்டு மகிழ்ந்தனரே !

15 அன்பும்  அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை 
     பண்பும் பயனும் அது.  என்பது வள்ளுவன் வாக்கு !

   ரா.பார்த்தசாரதி 
  


  


     





 

ஞாயிறு, 15 மே, 2022

 


                                                              ருஷில்  உபநயனம

  இடம்:  உட்சௌ  ஹால்   ஆர். ஏ  புரம்          தேதி: 1  13 மே 2022
                 சென்னை =28
         
                  இன்று உட்சவ்  ஹாலில்  ஓர்  உபநயனம் 
                 ருஷில் வியாஸ் ஆனந்தின்  உபநயனம் 
                பிரியா  ஆனந்தின்  தவ புதல்வனாய் 
                பார்வையால் எல்லோரையும் கவருபவனாய் 
              
                திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவனாய் 
               ஆசாரியன் ஸ்ரீ ராமானுஜர் அருள் உடையவனாய் 
               படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரனாம் 
              ட் ரும்ப்  வாசிப்பதில்  கைத்திறன்  மிக்கவனாம் 

             அன்பு  தங்கை ரிஷிகாவை  நேசிப்பவனாம் 
           தாத்தா, பாட்டிகளின் ஆசீர்வாதம் பெற்ற பேரனாம் 
           உலகில் சிறந்தது  தாய் தந்தையின் ஆசிர்வாதமே 
           உற்றார்,  உறவினர் பல்லாண்டு  வாழ்க  எனவும் 
           நொடிநொடியின்றி  வளரவும்  வாழ்த்தினரே  !!