திருமண நாள்
உற்றவர், பெற்றவர் ஆசிகள் சூழ
இல்லத்தரசனும்.அரசியுமாக
மங்கல நாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள் !
திருமணம் என்பது இரு மனம் அல்ல
அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம் !
இருமனம் புரிதலோடு வாழும் வாழ்க்கை
வருடா , வருடம் நினைத்து பெருமிதம்
கொள்ளும் நாள் !
வேறு,வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலத்துப் பயிராக கிளை பரப்பி
செழித்து நிற்கும், அஸ்திவார நாளே
திருமண நாள் !
கண்ட கனவுகள் நனவுகளாக சிறகடித்து
பறக்க, சமூகத்தில் புது அந்தஸ்து பெரும்
நாளே , திருமணநாள் !
சுற்றம் வளைத்து, நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான எதிர்காலம்
சமைத்திட , அடிகோலும் பெருநாளே
திருமண நாள்
ரா.பார்த்தசாரதி 8148111951
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக