வெள்ளி, 25 அக்டோபர், 2019

Piranthanaal





பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    

நீ நீடு வாழ வேண்டும் 
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் 
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம் 
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும் 
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும் கைக்கொள்ளவேண்டும் 
நன்மை செய்து  புண்ணியத்தை என்றும் சேர்க்கவேண்டும் 
எட்டு திக்கும் புகழ வேண்டும் 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை 
நிலவுத் தாளில் எழுத வேண்டும
உறவையும்,  நட்பையும் பேண வேண்டும
பாசமும், நேசமும் வளர்த்திடவேண்டும் 
எனது அன்பும் ஆசியும் என்றும் பெறவேண்டும் 
பல்லாண்டு  வாழ என ஆசீர்வாதத்தை அளிப்பேன் 
பிறந்த நாள் வாழ்த்துகள் 
பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரா.பார்த்தசாரதி 

சனி, 21 செப்டம்பர், 2019

Thirumalai Deivam





                                 திருமலை தெய்வம்

திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

மனிதனை  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசினம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

திருமலை வாசனின் பாத கமலினை போற்றிடும் வேளை
 சுப்ரபாதம்  எனும் சேவையுடன் விழித்தெழுகின்ற  காலை

புனித  புஷ்காரணியில்  காட்சி தரும் தோற்றம் 
சங்கு, சக்ரம் ஏந்தி காட்சி தருவதே  நமக்கு ஏற்றம் ! 

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

ரா.பார்த்தசாரதி

திங்கள், 11 மார்ச், 2019

Priyanka vazthu madal





                                                   





                                                        திருமண வாழ்த்துமடல் 

மணமகன்: ஆர். குமரன்                               இடம்: ஹோட்டல் சிங்கப்பூர் மஹால்  
மணமகள்:   டீ .   பிரியங்கா                          தேதி :  13 / 03/ 2019

1. இன்று   எழும்பூரிலுள்ள ஹோட்டல் சிங்கப்பூர் மஹாலில் ஓர் கல்யாணமேடை ,
    வெங்கடாசலபதீயின் அருளால்  நடந்திடும் கல்யாண மேடை 

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா 
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திரு.தமிழ்ச்செல்வன் ,திருமதி பவானி  தம்பதியரின் மூத்த மகளே  !     
     என்றும் சென்னையில் பணிபுரிந்திடுவாய்  சிறப்புடனே 

     திருமணம் என்பது  இருமனம்  அல்ல .
      அதுவே  இருமனம் கொண்ட  ஒரு மனமாகும் !
                                                                                                                                    
4. கல்யாணம்  என்றாலே,    என்றும்  வைபோகமே 
    வாரணமாயிரம்  பாடி  வாழ்த்துவோமே !

5.  திருமணம்  என்றாலே  உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
    அகிலத்தில்   சிறந்தது  தாய், தந்தையின்   வாழ்த்துக்களே !     
                                                                                                 
 6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

 7. பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.திருமதி  ஒரு வெகுமதி  என்று  அழைப்பது  வழக்கம் 
     திருமதியின்  பெயரை  ப்ரியங்கா  என்று அழைப்பது  பழக்கம்! 

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவளே   மனைவியாகும் !
  
12. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

14. உற்றாரும், உறவினரும் ஒன்று கூடி   விருந்துண்போம்  
       மணமக்களை வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15  மத்தளம் கொட்ட , மணமகன்  தாலியினை கட்ட,
     உடன் பிறந்தவள்  சேர்ந்தே  முடிச்சு  போட ,
     உற்றார் , உறவினர்கள்  சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட 
     இனிதே நடந்ததே  ஆர். குமரன், டீ. ப்ரியங்கா   திருமணம் ! !

16.அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
     பண்பும், பயனும்  அது. -               (வள்ளுவன் வாக்கு) 

       ரா.பார்த்தசாரதி . 
       Metrozone D Block 103
       

P.Sreekumar Vazthumadal






                                              திருமண வாழ்த்து மடல் 

மணமகன்: P. ஸ்ரீகுமார்                                இடம்: ஸ்.வி. மஹால், 
மணமகள்:  M. நிஷா                                     தேதி :  10 / 03/ 2019

1. இன்று திருமுல்லைவாயலில்  உள்ள S.V. மஹாலில் ஓர் கல்யாணமேடை ,
    வெங்கடாசலபதியால் இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை 

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா 
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திரு.பிரபாகரன்,திருமதி புவனேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனே !     
     என்றும் சென்னையில்லுள்ள TCS இல் பணிபுரிந்திடுவாய்  சிறப்புடனே 
                                                                                                                                    
4. கல்யாணம்  என்றாலே,    என்றும்  வைபோகமே 
    வாரணமாயிரம்  பாடி  வாழ்த்துவோமே !

5.  திருமணம்  என்றாலே  உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
    அகிலத்தில்   சிறந்தது  தாய், தந்தையின்   வாழ்த்துக்களே !                                                                                                      
 6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

 7. பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.திருமதி  ஒரு வெகுமதி  என்று  அழைப்பது  வழக்கம் 
     திருமதியின்  பெயரை  நிஷா  என்று அழைப்பது  பழக்கம்! 

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவளே   மனைவியாகும் !
  
12. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

14. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15  மத்தளம் கொட்ட , மணமகன்  தாலியினை கட்ட,
     உடன் பிறந்தவள்  சேர்ந்தே  முடிச்சு  போட ,
     உற்றார் , உறவினர்கள்  சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட 
     இனிதே நடந்ததே  ஸ்ரீகுமார், நிஷாவின்  திருமணம். 

16.அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
     பண்பும், பயனும்  அது. -               (வள்ளுவன் வாக்கு) 

       ரா.பார்த்தசாரதி . 
       thirunagar park friend

செவ்வாய், 25 டிசம்பர், 2018

raja 70th birthday vathumadal









                           ஸப்த ஹப்த  வாரிஷீஹ் /  பீமரத  சாந்தி  விழா 

இடம்: பள்ளிப்பட்டு நரசிம்மாச்சாரி தெரு            தேதி:26-12-2018
           மதுராந்தகம் 

கோதண்டராமர் அருளால்   மதுராந்தகத்தில் P.N.chaari veethiyil, இன்று  
 ஸப்த ஹப்த (பீமா ரத ) சாந்தி    விழா ! 
திருமதி பட்டம்மாள். மாடபூஷி ..எம்.கே .சசுந்தரராஜனின் 
ஸப்த ஹப்த  ( பீமரத )  விழா !

 ஸ்வர்கஸ்ரீ , திருமதி ராஜலக்ஷ்மி, திரு. மாடபூஷி கோதண்டராமனின் மூன்றாம் மகனே 
 என்றும்  மதுராந்தகத்தில்   வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

அகவை  அறுபதும், எழுபது மற்றும் எண்பதும்   சிறப்புடையதன்றோ 
மகன்  சாய்நாத், மகள் சுபஸ்ரீயும்  தலைமையேற்று நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ!

கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே !

தமிழ் நாடு மின்சாரவாரிய  என்ஜினீயராக சிறப்புற பணிபுரிந்து  ஓய்வு பெற்றாய் 
தாய்க்கு   !இறுதிவரை, சேவை செய்து என்றும் சான்றோனாய்  விளங்கினாய் 

கண்ணின் அருகே இமை இருந்தும், கண்கள் இமையைப் பார்ப்பதில்லை 
கண்களை இமைகள் காப்பதுபோல், மனைவி, கணவனை விட்டு பிரிவதில்லை 

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலமும், கோலமும்   என்றும் உலகில்  மாறும்,.
கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம் !
திருமதியின் பெயரோ  வெகுமதி பட்டம்மாள் (பட்டு)  என்று அழைப்பது பழக்கம்! !


கல்யாணம் என்றாலே உற்றார்,உறவினர்ககளின் ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஏழில் ( சுந்தரராஜன்) என்றும் ஆறு  அடங்கும் 
பட்டம்மாள் என்ற பெயரும் விளங்கும்,

உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும் 
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்! 

உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி விருந்துண்போம் 
அவர்கள் வாழ்க்கை வளம் பெற  வாழ்த்துவோம் 

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 

ரா.பார்த்தசாரதி 
===================================================================