திருமலை தெய்வம்
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் !
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் !
வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !
தாயாரை தரிசித்து வேங்கடவனை தரிசிப்போம் !
தரணியில் யாவரும் நலம்பெற யாசிப்போம் !
மனிதனை புனிதம் ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில் சலனம் போக்குவது தெய்வ தரிசினம் !
திருமலைவாசா என்று அழைத்தாலே குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும் நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !
திருமலை வாசனின் பாத கமலினை போற்றிடும் வேளை
சுப்ரபாதம் எனும் சேவையுடன் விழித்தெழுகின்ற காலை
புனித புஷ்காரணியில் காட்சி தரும் தோற்றம்
சங்கு, சக்ரம் ஏந்தி காட்சி தருவதே நமக்கு ஏற்றம் !
கோவிந்தா, கோவிந்தா, என்றாலே பரவசம் !
கோவிந்தன் அருளும் கிடைத்திடுமே நம்வசம் !
என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம், திருமலை தெய்வம் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக