திங்கள், 11 மார்ச், 2019

P.Sreekumar Vazthumadal






                                              திருமண வாழ்த்து மடல் 

மணமகன்: P. ஸ்ரீகுமார்                                இடம்: ஸ்.வி. மஹால், 
மணமகள்:  M. நிஷா                                     தேதி :  10 / 03/ 2019

1. இன்று திருமுல்லைவாயலில்  உள்ள S.V. மஹாலில் ஓர் கல்யாணமேடை ,
    வெங்கடாசலபதியால் இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை 

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா 
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திரு.பிரபாகரன்,திருமதி புவனேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனே !     
     என்றும் சென்னையில்லுள்ள TCS இல் பணிபுரிந்திடுவாய்  சிறப்புடனே 
                                                                                                                                    
4. கல்யாணம்  என்றாலே,    என்றும்  வைபோகமே 
    வாரணமாயிரம்  பாடி  வாழ்த்துவோமே !

5.  திருமணம்  என்றாலே  உற்றார், உறவினர்களின் வாழ்த்துக்களே !
    அகிலத்தில்   சிறந்தது  தாய், தந்தையின்   வாழ்த்துக்களே !                                                                                                      
 6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

 7. பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.திருமதி  ஒரு வெகுமதி  என்று  அழைப்பது  வழக்கம் 
     திருமதியின்  பெயரை  நிஷா  என்று அழைப்பது  பழக்கம்! 

11.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவளே   மனைவியாகும் !
  
12. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

13. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

14. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15  மத்தளம் கொட்ட , மணமகன்  தாலியினை கட்ட,
     உடன் பிறந்தவள்  சேர்ந்தே  முடிச்சு  போட ,
     உற்றார் , உறவினர்கள்  சூழ்ந்து அக்ஷதை தூவி ஆசிர்வத்திட 
     இனிதே நடந்ததே  ஸ்ரீகுமார், நிஷாவின்  திருமணம். 

16.அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
     பண்பும், பயனும்  அது. -               (வள்ளுவன் வாக்கு) 

       ரா.பார்த்தசாரதி . 
       thirunagar park friend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக