ஞாயிறு, 31 ஜூலை, 2016

வெள்ளைப் பனி மலை

                                                           


                                                        வெள்ளைப்  பனி மலை  


                 பனிபடர்ந்த மலையின் மேலே
                  அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,

                 பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,
                 நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !

                  பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி
                  அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !

                இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே 
                மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!

                மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே
                 வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !

                 ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே
                  அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !
           
                 இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே
                 எனது உனது என்பதெல்லாம்  இடையில் மாறும்  எண்ணமே !


                 ரா.பார்த்தசாரதி

               

சனி, 2 ஜூலை, 2016

தொலைக்கப்பட்ட இன்பமும் உறவும்

ஆயிரம்  என்ன/ன்/அந்த//கல் /உதயம்  நம                                       



/ எங்கும் இன்பம் பொங்கட்டும்!

அலைபாயும் எண்ணங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
வடிகாலாய் வாய்த்தது தான்
திண்ணைப் பேச்சென்பதை
என்றோ மறந்தோம்!

உழைத்துக் களைத்த வேளைகளில்
உறவுகள் சூழ்ந்திட
ஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்த
பொழுதுகளை எல்லாம்
தொலைக்காட்சி, கணினிக்கு பின்
தொலைத்தோம்!

ஒரு நொடி துக்கம்
மறுநொடி சிரிப்பு
வரும் நொடி எதிர்பார்ப்பு...
கைபேசியும், வலைதளமும்
நம்மைக் கடத்திப் போவதால்
எந்த நிகழ்வையும்
மனதில் இருத்திப் பார்க்கும்
தகைமையை இழந்தோம்!

இன்றைய நாகரிகத்தின் பொருள்
ஆடம்பரம்
எழுதாச் சட்டமாகி
நேர்மையையும், உழைப்பின்
மேன்மையையும்
காலாவதியாக்கி
கசங்காமல் காசு பணம் சேர்ப்பதில்
முனைப்பாய் இருக்கிறோம்!

இருப்பதை வைத்து
ஆனந்தம் காணும்
வாழ்வின் நெறி மறந்து
பேராசை நெருப்பில்
போதுமென்ற குணத்தைப் போட்டு
பொசுக்கி குளிர் காய்கிறோம்...

நேசத்தை வெளிப்படுத்த வழியற்ற
அவசர உலகில்
சுகமென்பது ஒருபோதும்
வரமாய் வாய்ப்பதில்லை...

மனிதத்தை இழந்து தொடரும்
நம் பயணத்தில்
வாழ்க்கை வசப்படுவதில்லை
பகிர்வும், பாசமும், அரவணைப்பும்
பண்பாட்டின் அடித்தளமென
உயர்த்திச் சொல்வோம்!

உள்ளங்களால் உயர்ந்த சமூகமே
நாகரிக வளர்ச்சியின்
அடையாளமென வரலாறு பேசட்டும்...
வாழ்க்கை முழுவதும்
என்றும் இன்பம் பொங்கட்டும்!
— ரத்தினமூ

ஞாயிறு, 19 ஜூன், 2016


உலக யோகா தினம்

                                                     

                                                       உலக யோகா தினம் 

ஆய கலைகள் அறுபது நான்கு கலையே 
யோகாவும்  இதனில் அடங்கும் கலையே 
யோகிகளும், துறவிகளும் வளர்த்த கலையே 
நமது நாட்டினில் தோன்றிய  கலையே !


அனுதினம் யோகாசனங்களை செய்ய பழகுங்கள் 
அது உடலினை உறுதி செய்து, நோய் நீக்கும் இடமாகும் 1

உடற்பயிற்சியும், நடை பயிற்சியும் தினமும் மேற்கொள்ளுங்கள் 
அது  இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !

 யோகாசனங்களில்  பல வகைகள் உண்டு 
சில யோகாசனங்களே  மிகுந்த சிறப்புண்டு 
சிறுவர் முதல், முதியோர்கள்  வரை யோகா  பழகலாம் 
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

நோய்யற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள் 
யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள் 
இதுவே உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !

ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 6 மே, 2016

ஜனநாயகமே பொங்கி எழு



ஜனநாயகமே  பொங்கி எழு


புரட்சியாளன் பிறப்பதில்லை
உருவாக்கப்படுகிறான்!

சர்வாதிகாரம்
தலை தூக்கும் போது,
ஜன சமுத்திரம்
பொங்கி எழுவது
அவசியம்!

உழைப்பை சுரண்டி
குருதி குடிக்கும்
குள்ள நரி யார்?
காயப்படும் எறும்பும்
கடிக்க முற்படும்
அடிபடும் நாமும்
துடிப்பது தவறல்லவே!

ஓட்டுக்காக
நோட்டு வாங்கி
ஜனநாயக உரிமையை
அடகு வைப்பதா?

பாட்டாளிக்கும்
பாட்டுக்கும்
உயிர் கொடுத்த
பட்டுக்கோட்டை
பாடகரை மறக்கலாமா?

குண்டுக்கு இரையான
தேச பிதாவின்
தேசத்தை மறக்கலாமா?

ஜாதி, மதம் பேசி
குருதி ஆறு
ஓடுவது நியாயமா?

ஏழைகள் இருக்கலாம்
வறுமை இருக்க கூடாது...
வலிமை இருக்கலாம்
வன்முறை இருக்க கூடாது...

மனித வாழ்வு
மகிழ்ச்சியாக இருக்க
உண்ண உணவு
உடுக்க உடை
உயர பொருளாதாரம்,
இருக்க இடம்
இந்த நான்கும்
இருந்தால்...
நாட்டில் எதற்கு
காவல் நிலையம்
எதற்கு சிறைச்சாலை?

கலகம் இன்றி
உலகம் இருந்தால்...
உழைத்து வாழ்வோர்
உயர்வு பெறுவர்!

சுரண்டும் வர்க்கம்
சுருண்டு போகட்டும்
வழங்கும் வர்க்கம்
வாரி வழங்கட்டும்
உழைக்கும் வர்க்கம்
உள்ளம் சிரிக்கட்டும்!

மே தின புரட்சி
மேதினில் வளர்ச்சி!