சனி, 21 மார்ச், 2015
சனி, 14 மார்ச், 2015
தோஷங்கள் நீக்கும் பரிகாரம்
தோஷங்கள் நீக்கும் பரிகாரம்
பச்சரிசி, தேங்காய் துருவல், வாழைப்பழம், இந்த மூன்றையும்,
ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, புற்றுபோல் செய்து, கோவிலில்,
நாகாத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ
வைத்து, புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து
வணங்கினால் கிரக தோஷங்கள், கண் திருஷ்டியால் தடைப்படும்
காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்.
ரா.பார்த்தசாரதி
வெள்ளி, 13 மார்ச், 2015
Kaadali
காதலி, தன் கணவனுக்கு எழுதிய கடிதம்
நட்போடு நான் உன்னை
நெடு நாட்கள் பார்த்திட
காதலோடு நீ என்னை
கணப்பொழுதும் பார்க்க
கண்டு கொண்டேன் உந்தன்
காதலின் ஆழத்தை
கைபிடிக்க இன்று மனதார வருகிறேன்
காதலியாய் உன்னை காண !
ஞாயிறு, 8 மார்ச், 2015
வல்லமை
வல்லமை
திருமதி பவழசங்கரி ,
நீங்கள் எழுதிய உலக மகளிர் தின கட்டுரை மிகவும் அருமை.
ரா. பார்த்தசாரதி
வியாழன், 5 மார்ச், 2015
Veeraraghavan
திருமதி பத்மா வீரராகவன்
&
திரு.மாகரல் வீரவல்லி வீரராகவன்.
.
கமலா, வேதாந்தம் தம்பதினரின் மூத்த புதல்வரே !
என்றும் கடமை, பக்தி, நல்லொழுகத்தில் சிறந்து விளங்கியவரே !
காஞ்சியில் பிறந்து, சென்னையில் குடிபுகுந்தாய் !
கூட்டுறவுவிலும், குடும்பத்திலும் சிறந்து விளங்கினாய் !
வாழ்கைப்போரில் என்றும் வீரராகவனாய் திகழ்ந்தாய் !
கடமையிலும், சொந்தபந்தங்கள் இடையே சிறந்து விளங்கினாய் !
இருக்கும்போது மனிதனை எவரும் புகழ்வதில்லை !
இறந்தபின் எவரும் புகழாமல் இருப்பதில்லை.!
மகன்களுக்கும், மகள்களுக்கும் என்றும் சிறந்த தந்தையாய் !
தங்கைகளுக்கும், தம்பிக்கும் சிறந்த அண்ணனாய் !
பொறுமையிலும், ஒழுக்கத்திலும் என்றும் சிறந்து விளங்கி,
பலரது இகழ்சிகளையும் சுமைதாங்கி போல் தாங்கி ,
நல்மனம் கொண்டு நற்செயல் புரிந்தாய் !
தாய்க்கும், தாரதாரத் திர்க்கும் நல்லவனாய் திகழ்ந்தாய் !
ஆறுக்குள் ( வீரராகவன்) என்றும் மூன்று அடங்கும் !
பத்மா எனும் பெயர் விளங்கும் !
கைப்பிடித்தவள் வாவென்று ஓர் ஆண்டிற்குள் அழைத்தாளா ?
அவள் விருப்பம் நிறைவேற பின்தொடர்ந்தாயா?
அகவை அறுபதும் என்பதும் கடந்து சென்றவரே !
ஆரா துயரில் ஆழ்த்தி விண்ணுலகம் அடைந்தவரே !
நான்கும் அறிந்து, நான்கு தலைமுறை கண்டாய் !
நற்செயல் புரிந்து இரவா புகழ் அடைந்தாய் !
பெற்றோரை என்றும் பணிவுடன் வணங்கிடுவோம் !
வாழ்வில் எல்லா வளம் பெற்று வாழ்ந்திடுவோம்!
ரா.பார்த்தசாரதி
செவ்வாய், 3 மார்ச், 2015
சிவராத்திரி
சினமெமைத் தீண்டா நிற்கச்
சிரமதில் கனதி போகப்
பரமனின் பாதம் பற்றிப்
பணிந்துமே நிற்போம் என்றும்!
மனிதராய் வாழ வேண்டில்
மனமதில் தூய்மை வேண்டும்
புனிதராய் இருக்க வேண்டில்
போற்றுவோம் பரமன் தன்னை!
ஆணவம் தமக்குள் ஏற
அனைத்தையும் மறந்தே நின்ற
மாலொடு பிரமன் தானும்
மதிகெட்ட செயலைச் செய்தார்!
கடவுளர் தாமே என்று
கங்கணம் கட்டி நின்று
அழிவினைத் தேடும் வண்ணம்
அவர்நிலை ஆயிற் றன்றோ?
ஆணவம் அழிக்க அங்கே
அளவிலா ஜோதி தோன்றிக்
காணுங்கள் ஆதி அந்தம்
கடவுளாய் ஆவீர் நீங்கள்
என்ற அச்சேதி கேட்டு
இருவரும் முயற்சி செய்துப்
பன்றியாய் பட்சி ஆகிப்
பற்பல வித்தை செய்தார்!
வென்றவர் யாரு மின்றி
விக்கித்து நின்ற போது
அங்குமே சிவனும் தோன்றி
ஆணவம் போக்கி நின்றார்!
என்றுநாம் அறியும் வண்ணம்
இயம்பிடும் புராணம் தன்னை
நன்றுநாம் கற்றோம் ஆனால்
நாமுமே திருந்தி வாழ்வோம்!
மனங்களில் அழுக்கு வந்தால்
மாயையே தோன்றி நிற்கும்
குணமெலாம் மாறிப் போகும்
குறைகளே குவிந்து நிற்கும்!
அறமெலாம் மறந்தே போகும்
ஆணவம் ஆட்சி செய்யும்
அரனது நாமம் கூட
அனைவரும் மறந்தே போவர்!
சிவனது இரவு தன்னில்
அவனையே மனதில் எண்ணி
பவவினை போக்கு என்று
பணிவுடன் வேண்டி நிற்போம்!
நீறு அணிந்த நெற்றியொடு
ஆறு அணிந்த சடையுடையான்
பேறு தனைப் பெற்றுவிட
கூறி நிற்போம் அவன்நாமம்!
சிவனது நோக்குப் பட்டால்
தெளிவுமே வந்து நிற்கும்
உளமெலாம் தூய்மை ஆகி
உமைபாகன் பக்கம் சேரும்!
தவமுடன் சிவனை எண்ணித்
தலைமீது கையை வைத்துச்
சிவனைநாம் வணங்கி நிற்போம்
சிவனது இரவு தன்னில்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
