குழந்தைகள் தினம்
குழந்தைகள் நாட்டின் கண்கள்
அன்பையும் பாசத்தையும் அளித்திடும்
புன்சிரிப்பு, மழலையும், மகிழ்ச்சி தந்திடும்
கள்ளம் கபடுமில்லாமல் நம்மை தேடி வரும்.
ஊட்டச்சத்து குறைவின்றி குழந்தைகளை வளர்ப்போம்
படிப்பிலும், விளையாட்டிலும் சிறப்புற செய்திடுவோம்
ஆரோக்கியத்தை காத்து, நலமுற பாதுகாப்போம்
உடலும், மனதும், செய்ம்மையுற பயிற்சி அளிப்போம்
பாகுபாடின்றி கல்வி அளித்து ஏற்றமடைய செய்வோம்
வேற்றுமையில், ஒற்றுமையை என்றும் ஓங்கச்செய்வோம்
குழந்தையும், தெய்வமும், குணத்தால் ஒன்று,
குற்றங்களை மறந்திடும், மனத்தால் ஒன்று !
குழந்தைகளிடத்தில் மிகவும் அன்பு கொண்டாரே நேரு
தன பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக அறிவித்தாரே
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கொண்டாட செய்தாரே !
மக்கள் மனதிலும் நேரு இடம் பிடித்து பெருமையடைந்தாரே !
ரா.பார்த்தசாரதி = D 103
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக