உலக இதய தினம்
29-09-2024
இதயம் ஒரு கோவில என சொல்வதுண்டு!
அதனை தூய்மையாக பாதுகாக்கவும் கடமையுண்டு!
அதீத எண்ணம்,உணர்ச்ச்சியால் பழுதுஅடைவதுண்டு!
இதனால் மனித இதயம், பலமிழந்து மரணமடைவதுண்டு !
இறைவா , மனிதனுக்கு, கையளவு இதயம் வைத்தாய் !
கடல் அளவு மனிதனுக்குள் ஏன் ஆசை வைத்தாய் !
இதயத்தை உடல் எனும் கூண்டுக்குள் அடைத்து வைத்தாய் !
இவ்வுயிரண்டையும் தந்தவளை அம்மா என உணரவைத்தாய்!
இதயம் ஒரு சிறை,குற்றம் செய்தவர்கள் மாட்டுவதில்லை!.
பாசம் வைத்தவர்கள் என்றும் துன்பமடையாமலிருப்பதில்லை
இருவரின் துடிப்பினிலே விளைவதும் மழலையடா !
இருவர் இதயங்களின் இணைப்பிலே மலர்வதும் காதலடா !
உடலுக்குள் இருக்கும் இதயம், உண்ர்ச்சி பெட்டகமே !
அதிலே அடங்கிடும் மனிதனின் உயிரோட்டமே !
இவ்வோட்டமே நிற்காமல் ஓடினால் மனிதனின் நடமாட்டமே!
இதனை பொக்கிஷமாய் காப்பதே நம் கடமையாகுமே !
உடல் முழுதும் குருதினை பரப்புவதும் இதயமடா !
ஆயுள் முடியும் நமது உடலில் ஓடும் கடிகாரமடா !
நல்ல உடற்பயிற்சி செய்வதே இதயத்திற்கு வலிமையடா!
தியானத்தாலும் , மௌனத்தாலும் காப்பது நம்கடமையடா!
ரா.பார்த்தசாரதி. D- 103
8148111951.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக