நினைக்கத் தெரிந்த மனம்
மனிதன் தேடும் மகிழ்ச்சி பேராசையில் முடிகிறது
பேராசையால் பேரின்பம் என்றும் தொடர்கிறது !
கையளவு இதயம் வைத்தான், கடல் அளவு ஆசை
வைத்தான்.
பேராசையால் மனிதன் முடிவினை தானே
தேடிக்கொண்டான்
போதும் என்கிற மனதில்தான் புன்னகை மலரும்
தட்டிப் பறிக்காமல், உதவிசெய்வதில் நிம்மதியிருக்கும் !
நான் எனது என்ற சுயநலத்தை துறந்த மனமே !
மனித நேயத்துடன், விட்டுக்கொடுப்பதும் நலமே !
மனிதா ! எங்கே எதிலே இருக்கிறது மகிழ்ச்சி
பணம், பட்டம், பதவி, இவற்றால் மகிழ்ச்சியா !
மண்ணிலும், பொன்னிலும், பதவி,பட்டத்தில் இல்லை
மனிதனே, உன் மனதிலிருக்கிறது என அறியவில்லை !
மகிழ்ச்சி கொண்டு நீ சுற்றத்தை வளைத்து விடு
மனித நேயம் கொண்டு நீ உதவிகள் செய்திடு !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக