திங்கள், 23 அக்டோபர், 2023

 


                                 காதல்  நெஞ்சம் 

* அன்பே !  ஆருயிரே1..அடிக்கோடிட்டு நீ, சொன்ன வார்த்தைகள்
   மாக்கோலம் அல்ல , என் மணத்தினின்று அழியாதவைகள் !

* காட்சி அளிக்கும்படி கரும்பலகையில் எழுதி வைச்ச காதல் அல்ல !
 துடைப்பான் கொண்டு துடைப்பதற்கு முயல்வது நல்லது  அல்ல !

* ஒப்பந்தம் போட்டு உண்டானது இல்லை  உன் நினைவுகள்
   உடைந்து போவதற்கு! இது கண்ணாடி பாத்திரம் அல்ல !

*என்னை நீ மறந்து விடு' என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது உன் நினைவுகள் இல்லா உலகில் !

உன்னுடன் மயங்கி நின்றேன்  உள்ளதால் நெருங்கி வந்தேன் 
என்னுயிர் காதலி  !  என்னுயிர் தேவதையே  என்பேன் !!  

* அந்தி மழையின் மண் வாசனை அதனின் பங்கிற்கு உருட்டிச் செல்கிறது
  உன் நினைவுகளோ, நிம்மதி இல்லாமல் என் மனதை வாட்டுகிறது !

* என் எழுத்தாணிக்கும் இயலுவதில்லை உன் நினைவின்றி எழுதத் தொட்ங்குமா !
    நான் எழுதுவது கடிதம் அல்ல ! என் நெஞ்சிம் உன் பெயரை சொல்லுமா !

  தொட்டாசிணுங்கி போல்  உன் மனம் சட்டென்று மூடி கொள்ளுமே 
   உன் மனம் மூடினாலும்,  உன் இதயம் பட படக்குமே !

* மதுரம் இல்லாத தேனீர் பருகும் போதெல்லாம் உன் நினைவுகளை கொள்கிறேன்!
   என்  நினைவுகள் சிந்திப்பதே இல்லை என்னை தந்து விட்ட பிறகு !
 
* மறந்து விடுவதற்கோ மறைப்பதற்கோ...மரணம் ஒன்றே மார்க்கம்!
* அதுவே உனக்கு சொர்க்கம் எனில்,மகிழ்ச்சியாய் ஏற்பேன் உன்நினைவோடு !

  ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 6 அக்டோபர், 2023

செங்கோல் ஆட்சியா ! சிதைக்கும் ஆட்சியா !!

 




                                 செங்கோல்  ஆட்சியா !  சிதைக்கும் ஆட்சியா !!


                             செங்கோலை  மதிப்பளித்து   ஆட்சி  செய்யலாமே !    
                             ஆள்பவர், மக்களின் நலனைக்  கருத்தலாமே !
                              மதத்தையும், ஜாதியையும் காட்டிப் பிளவுபடுத்தலாமா !
                              ஆக்கபூர்வமான தொழில்களுக்கு தடை செய்யலாமா !

                               விவசாய்க்கும், ஏழைகளுக்கும் உதவி அள்ளிக்கலாமா !
                               சொல்வது ஒன்று,  செய்வது ஒன்று, என்று இருக்கலாமா !
                               தப்பு செய்தவனை, தண்டனையிலிருந்து தப்பவிடலாமா !
                               வேலியே  பயிரை மேய்வதுபோல் ஆட்சி  இருந்திடலாமா !

                               உனக்கென, எனக்கென  என்று பங்கு பிரிக்கலாமா !
                               எஙகே நீதி ! தர்மம் என நினைக்கத் தூண்டலாமா ! 
                               நாடும், மாநிலமும் எக்கேடுகெட்டு இருந்தாலென்ன!
                               பணம் சேர்பதையே, குறிக்கோளாக இருந்திடலாமா !

                              மக்களை  மாக்கள்  என நினைத்துக்கொள்ளலாமா !
                               சிறுதொகை அளித்து பெரும் தொகையை அடையலாமா!
                               சிறுவெள்ளத்தை பெருவெள்ளம்  காணாமர்செய்யுமா!
                               நியாயம், தர்மம்,மனிதநேயம், இவ்வற்றைதூக்கிடலாமா !

                              நெஞ்சம் பொறுக்கவில்லையே ! நிலைகெட்ட மானிடர்களே 
                              பாரதிபோல் முழங்கிடுங்கள்!1 எதிர்த்து செயலாற்றுங்கள் !!
                              நல்லவர்களையும், நன்மைசெய்பவர்களை ஆதரியுங்கள் !
                              ஒன்று கூடுங்கள் !!  நல்லாட்சிக்கு  வழிசெய்யுங்கள் ! ! 

                             ரா.பார்த்தசாரதி 

          
                

                                 

வியாழன், 5 அக்டோபர், 2023

தமிழனே விழித்திரு எதிர்த்திடு

 



                                                


                                        தமிழனே  விழித்திரு  எதிர்த்திடு 

       வேற்று மதத்தினர் இந்துக்களையும்  தமிழையும் இழிவுபடுத்திறார்களே  
       சுதந்திரம் அடைந்து எழுபத்தாறு ஆண்டுகள்  முடிந்தது ? ஏன் இந்த நிலை 
       வேற்றுமையில் ஒற்றுமை பெயரளவில்தான் ,இதில் உண்மைஇல்லையே 
        மணிப்பூர் இன பிரிவிற்கு சமாதானமும் தீர்வும் இன்றைளவு ஏற்பட்டதா ? 

       தமிழனை பிறர் ஆட்சி  செய்கிறான்? ஜாதி, மதத்தால் பிளவுபடுததுகிறான் 
       இந்துமதம் , சனாதனம் ஒன்று. அவற்றை நோயாக கருதுகிறார் 
       என்று  தமிழ் நாட்டிற்கு விடியல் ஏற்படுமோ? தமிழனே சற்றே விழித்திரு!!
       சனாதானத்தை  பேசுபவனுக்கு, சாராய கடையை மூட மனம் வருமா ?

       சமூக நீதி பேசுபவன், மலம் கலந்த நீரைத்தான்  உன்ன மனம் வருமா ?
       மலம் கலந்தவனை கண்டுபிடிக்க தெரியாத ஓர் அரசு? இது மானக்கேடு !
       விவசாயி;க்கு தான் விளைத்த பயிருக்கு விலை நிர்ணயிக்க முடிவதில்லை
      விளைந்த நெல்லுக்கு அதனை சேமிக்க பாதுகாப்பு இல்லை !

       சாராய கடை த்திறப்பதிலும் , நீர் வளம் கெட மணல் கொள்ளை 
      அநீதியை கேட்டால் கட்ட பஞ்சாயத்து ராஜ்யம், அடிதடி கொலை 
       தன குடும்பம், தன மக்ன், மருமகன், என்ற ஓரே  ராஜ்யம் !
      காவலும், நீதி துறையும், அவர்களின்  கைபொம்மைகள் !

      எல்லா திட்டத்தையும் நிறைவேற்றியதாக ஓர் பொய் பிரச்சாரம் !
      தமிழ் மக்களை குடிகாரனாக ஆக்கியதே இந்த அரசு !
      குடியால் அவர்கள் கெடுவதை வேட்டிக்கை பார்க்கிறார்கள் !
      சாரயத்தில் சம்பாதித்தை , பெண் உரிமை பணம் கொடுக்கிறார்கள் !

      கள்ளச்சாராயம் சாப்பிட்டவனுக்கு மான்யம் பத்து லட்சம் 
     விவசாயி  கடனில் இறந்தால்  மான்யம்  இரண்டு லட்சம் 
    நீட் தேர்வில் மாணவன் இறந்தால் மான்யம் ஐந்து லட்சம் !
    என்னே  நமது அரசின் சமநோக்கு பார்வை! சிந்தியுங்கள்!

    பிறர் இந்துமதத்தை இழிவு படுத்துவதை தட்டி கேளுங்கள் !
    கோடி, கோடியாய் சம்பாதிப்பதை தடை செய்யுங்கள் !
     ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள் !
     நல்லாட்சிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !இதுவே குறிக்கோள் !

    மாற்றம் ஒன்றே மாறாதது !மாற்றத்தை கொண்டுவருவோம் 2024 !!
    தமிழகத்தை  தீயசக்திகளிடமிருந்து முயன்று மீட்டெடுப்போம் !!

    மானமுள்ள ஓர் தமிழனின் வேண்டுகோள் !
 

         



ஞாயிறு, 1 அக்டோபர், 2023

Thaimai enrum thuzmai

 



                          தாய்மை என்னும் தூய்மை


  மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
 நதிகளை  அன்னைக்கு  நிகர்  என சொல்கிறோம்! 
  நன்முறையில் அணை போடுவது நல்லதே,
  கழிவுநீரை கலக்குவது என்றும் தீமையானதே!

  வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
  நீரை குடிபவர்களுக்கும், கேடு விளையுமே
  பயிர்களை  அழிப்பதா , மக்கள்நலம்கெட வைப்பதா ! 
 தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா !

 இன்று நதி நீரை மனசாட்சியின்றி கலங்கப்படுத்துகிறோம் ,
 தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே
 தாய்மை  என்னும் தூய்மையாய்  காக்கபடவேண்டுமே
 இதனை நன்முறையில் அரசே  நிறைவேற்றவேண்டுமே !

தூய்மை ,  புறந்தூமை, அகந்தூய்மை என இருவகையே 
புறந்தூய்மை நீரால் அமையும், 
அகந்தூய்மை வாய்மையால்  காணப்படும் 
இரு தூய்மைகளை கடைபிடித்து மனிதனாய் வாழ்வோம் !

ennamum sinthanaiyum

 


                  


                   எண்ணமும், சிந்தனையும்!

எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்! 
மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!
சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!
நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !


ரா.பார்த்தசாரதி