வெள்ளி, 21 ஜனவரி, 2022

Unmai Kaadal

 


                                             உண்மை காதல் 


காதல் என்பது காத்திருந்து  அன்பின்   பரிமாற்றமே 
இருவிழிகளின்  ஈரத்தை  கசியவிடுமே 
இரு இதயங்களின்  சிறகடித்து பறக்கும் எண்ணமே 
உள்ளங்கள்  ஒன்றொடுஒன்று  மனதினில் பந்தாடுமே  !

ஆயிரம் உறவுகள் வந்தாலும், எட்டா உயரத்தில் இருந்தாலும்,
தேசம் விட்டு தேசம் சென்றாலும், தேகத்தில் தேங்கியே இருந்தாலும்,
சொந்தங்களும், பந்தங்களும், பாச மழைப்  பொழிந்தாலும் 
இறுதி மூச்சு வரை  மனதினால்  ஒன்று பட்டாலும்  !

காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் தழைத்தாலும் 
உள்ளத்தின் உள்ளே உறைந்து கிடைக்குமே உண்மைக்  காதல் !



 ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக