உண்மை காதல்
காதல் என்பது காத்திருந்து அன்பின் பரிமாற்றமே
இருவிழிகளின் ஈரத்தை கசியவிடுமே
இரு இதயங்களின் சிறகடித்து பறக்கும் எண்ணமே
உள்ளங்கள் ஒன்றொடுஒன்று மனதினில் பந்தாடுமே !
ஆயிரம் உறவுகள் வந்தாலும், எட்டா உயரத்தில் இருந்தாலும்,
தேசம் விட்டு தேசம் சென்றாலும், தேகத்தில் தேங்கியே இருந்தாலும்,
சொந்தங்களும், பந்தங்களும், பாச மழைப் பொழிந்தாலும்
இறுதி மூச்சு வரை மனதினால் ஒன்று பட்டாலும் !
காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் தழைத்தாலும்
உள்ளத்தின் உள்ளே உறைந்து கிடைக்குமே உண்மைக் காதல் !
ரா.பார்த்தசாரதி