Independence day 2021
சும்மா கிடைக்கவில்லை நமக்கு சுதந்திரம்
தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் !
கண்ணீரும், ரத்தமும், கொடூரங்களும் கலந்த தேசமே
சுதந்திர தீயை உண்டாக்கியதும் நமது தேசமே !
தாய் நாட்டிற்கும், தியாகிகளுக்கும் முதல் வணக்கம்
உயிர் துறந்த தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம் !
தியாகிகளின் உயிர் தியாகத்தினை நினைந்துகொள்விர்
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நினைவு கொள்வீர் !
தாயின் மணிக்கொடி பறக்கவிட வாரீர்
அதனை தாழ்ந்து பணித்திட வாரீர் !
வண்ணங்கள் பலவாயினும், எண்ணங்கள் ஒன்றே
பறவைகள் பலவாயினும் வானம் ஒன்றே !
தேகம் ஒன்றானாலும் , குருதி ஒன்றே
பாஷைகள் பலவாயினும், தேசம் ஒன்றே !
சாதிமத வேற்றுமையை வேரோடு ஒழித்துடுவோம்
இந்தியன் என்ற உணர்வோடு இருந்திடுவோம் !
தேசம் உனக்கு என்ன செய்தது என நினைக்காதே
தேசத்திற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் !
தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்துடுவோம்,
தேசிய கீதம் பாடி சுதந்திரதினத்தைக் கொண்டாடுவோம் !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
ஜெய்ஹீந்த், ஜெய்ஹீந்த், ஜெய்ஹீந்த்,
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக